மலையிடைப் பிறந்த நாகரீகம்!



மலையிடைப் பிறந்த நாகரீகம்!

நாகரீகங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது ஆறுகளே!

இதுவரை உலகில் தோன்றி வளர்ந்து வந்துள்ள நாகரீகங்கள் அனைத்தும் அவை தோன்றி வளர்வதற்குக் காரணமான ஆறுகளின் பெயர்களைத் தாங்கியே வந்துள்ளன.

உதாரணத்திற்கு நைல் ஆற்றின் பெயரைத் தாங்கிய நாகரீகத்தைக் குறிப்பிடலாம். ஆறுகளின் ஓட்டத்துடனே வாழ்ந்து வளர்ந்து நாகரீகம் அடைந்தன இவைகள்.

எனினும் உலகிலேயே மிகப்பழமையானதுவும், மொழிகளின் தாயாகவும் விளங்கும் உலகின் முதல் மொழியான தமிழ்மொழியும், தமிழரின் நாகரீகமும், தோன்றி வளர்ந்த இடத்தைத் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் எவரெஸ்ட்டு சிகரத்திலேறி சற்று உரக்கவே பெருமையுடன் ஓங்கிக் குரல் எழுப்பலாம்!

எதிரொலியாகத் தமிழர்தம் நாகரீகம் தோன்றி வளர்ந்த இடம் ஒரு உயர்ந்த மலையில்தாம் என்ற குரல்கள் ஒலிக்கும்.

உலக நாகரீகங்கள் தோன்றி வளர்ந்த இடங்கள் ஆறுகள் என நாம் அறியும்போது அவை உற்பத்தியிடத்திலிருந்து சங்கமமாகும் இடம்வரை பயணிக்கும்.

ஆயின் என்றென்றும் உயர்தனிச் சிறப்பிற்குரிய செம்மொழித் தகுதி படைத்த தமிழ் மொழி உருவானதோ பொதிகை மலை எனும் உயர்ந்த மலைச்சாரலில்தாம்.

இதுகூடத் தமிழினம் தம் இடத்தை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியருக்கு விட்டுக் கொடுத்து இன்றுள்ள நிலப்பரப்பிற்குத் திரும்பிய பின்னர் உருவானதுதாம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரோ, மொகஞ்சதாரோவில் உருவானதுவும் இதே தமிழர் நாகரீகம்தாம். அதுவும் உயர்ந்த மலையிடத்து அமைந்த இடம்தாம்.

இப்பொழுது நெஞ்சை நிமிர்த்திச் சற்று உரக்கவே மீண்டும் எவரெஸ்டிலிருந்து குரல் கொடுங்கள்.

என்றென்றும்; உயரமான இடத்தில் பிறந்த நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள்
தமிழர்கள்தாம் என்று!

இந்த நாகரீகம் இன்று அது தோன்றிய மலையிடைப் பிறக்கும் ஆறுகளால் தொலைக்கப்பட்டு வருகிறது. தம் சக மாநிலத்தவர்களின் சுயநலப் போக்கால் தம்முடைய உரிமைகள் பறிக்கப்படுகிறதே என்ற வேதனையில் எழும் நிகழ்வுகள் இவை.

ஒரு கற்பனை!

உலகம் இன்றுள்ள நிலையில் இருந்திராமல் ஆதி மனிதன் கற்பனையாக எண்ணியது போலத் தட்டையாக இருக்கிறது என வைத்துக் கொள்வோம்!

அத்தகைய உலகின் நிலப்பரப்பு மேடு பள்ளங்கள் அற்று மலைகள் இன்றி சம நிலப்பரப்பாக உள்ளதாகவும் சற்று கற்பனை செய்து பாருங்கள்.

இத்தகைய ஒரு உலகில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் எனச் சற்று சிந்தியுங்கள்.

உலகம் முழுவதுமே சம நிலப்பரப்பாக இருப்பதால், மக்களின் வாழ்க்கைத்தரமும் சமமாகவே, அதாவது ஏற்றத்தாழ்வுகள் இன்றி சமத்துவமாக இருக்கக்கூடும்.

இதுதானே இயற்கை விதி. இந்த விதி சரியாகத்தானே இருந்தாக வேண்டும்.

இவ்விதிப்படி உலக மக்களின் சமத்துவ வாழ்க்கை முறைக் காட்சியை நாம் கற்பனையாகக் கனவுலகில்தாம் கண்டு மகிழ முடியும்

நனவுலகில், மலையும் மடுவுமாக, கடலும் நிலமுமாக ஏற்றத்தாழ்வுகளுடன் இன்றுள்ள உலகம் உள்ளது போல, உலக மக்களின் வாழ்க்கைத்தரமும் ஏற்றத்தாழ்வுகளில்தானே சிக்கித் தவிக்கிறது.

ஆக உலகம் கற்பனையாகச் சம நிலையில் இருந்தாலும் உலக மக்களிடயே ஏற்றத்தாழ்வுகள் நீங்குவதென்பது மனிதன் தன்னை மனிதனாக மட்டுமே மதித்து சாதி மத இன மொழி பேதங்களைத் தொலைத்தால் மட்டுமே சாத்தியம் என்பதே சத்திய உண்மையாகும்.

எனினும் உலகம் இன்றுள்ள நிலையில்தான் மேடும் பள்ளமுமாக இருந்தாக வேண்டும் என்பதே இயற்கை விதி என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

மேலும் உலகம் ஆதி மனிதன் கருதியது போல நிலையாவும் தட்டையாகவும் இருக்கவில்லை. தட்டையான ஒரு பொருள் சுழல்வது என்பது நிரந்தரமாகச் சாத்தியமில்லை.

உலகம் உருண்டை வடிவில் பகலவனின் காந்த விசையில் கட்டுண்டு ஒரு குறிப்பிட்ட வேகத்தில் அவனையும் சுற்றிக்கொண்டு தானும் சுழன்று கொண்டுள்ளது.

மேலும் உலகம் உருண்டையாக மட்டுமன்றி ஏற்றத்தாழ்வு நிலையில் மலையும் மடுவுமாக இருப்பதற்கு ஒரு வலுவான அடைப்படைக் காரணம் உள்ளதென்பதை நாம் ஒப்புக்கொண்டுதாம் தீரவேண்டும்.

இந்த ஏற்றத் தாழ்வு நிலைக்குக் காரணமென்ன?

மலையும் மடுவும் ஏன்?
உலகம் உருண்டையாக இருப்பதோடு மட்டுமன்றி மலையும் மடுவுமாகக் காட்சியளிப்பதற்கு மிக வலுவான காரணம் இருப்பதற்குக் காரணம் உலகம் சுழழும்போது அதன் சுழற்சியுடன் காற்று மண்டலமும் சுழற்சிக்கு உள்ளாகிறது.

இந்த காற்று மண்டலம் சுழலும்போது அது சம தளமான பரப்பில் பிரவேசிக்கும்போது மாற்றங்கள் அவ்வளவாக ஏற்படுவதில்லை. அதே சமயம் இந்த சுழற்சி முறை மலையும் மடுவுமான பகுதிகளில் பிரவேசிக்கும்போதுதாம் உலகச் சமநிலைக்கான ஒரு அடிப்படைத் தேவை நிறைவேறத் துவங்குகிறது.

இந்த அடிப்படைத் தேவைதான் உலக உயிர்களை இன்றுவரை வாழ வைத்து வந்துள்ளது. இனியும் வாழ வைக்கப்போகிறது. ஆனால் இந்த அடிப்படை விதி மனிதனால் கடந்த சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தாம் மனித குலத்தால் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு அதி முக்கிய காரணமே மனித இனத்தில் தோன்றிய சுயநலப் போக்குதாம்.

இந்த சுயநலப் போக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்று மொழி அடிப்படையில் பிரிந்த உடன் பிறப்புகளால் வெறித்தனமாக அங்குள்ள அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டு, அதனால் ஏற்படும் ஏமாற்றங்களால், தமிழர்தம் நாகரீகம் இன்று வன்முறை தீக்குளிப்பு தற்கொலை, போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் தொலைந்து வருகிறது.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்!

இது வள்ளுவர் வாக்கு. தமிழன் தம் பிறப்பு முதல் அறிந்து வந்துள்ள இந்தக் குறளுக்கு இங்கே விளக்கம் தேவையில்லை. பாமரனும் புரிந்து கொள்ளும் எளிமையான குறள் அறவுரை இது.

இது போதாதென்று வள்ளுவர் தம் இன்னொரு குறளிலும் வேறொரு அறவுரையை வழங்கியுள்ளார்.

உயர் மலையிடைப் பிறந்த நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்களாகிய தமிழர்கள் இன்று இந்தக் குறளையும் அலட்சியம் செய்துவிட்டு தம் நாகரீகத்தை இழந்து தவிக்கிறார்களோ என எம் மனம் தவிக்கிறது.

பெயக் கண்டும் நஞ்சுண்டு அமைவர்
நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்!

உயர்ந்த நாகரீகத்தை அடைந்த ஒரு இனத்திற்கு இதைவிடச் சிறந்த அறவுரைகள் வேறு எந்த மொழியிலும் இருக்காது எனலாம்.

இன்று அதே மலையிடைப் பிறந்த ஆறுகள் தரும் நலனை, தமிழினம் தம் வயிறு வளர்க்கும் பயிர்களுக்காகவும், உயிர்களுக்காகவும், மொழியால் பிரிந்த தம் உறவுகளிடம் இழந்துவிட்டுச் சண்டையிட்டுத் தம் நாகரீகத்தைத் தொலைத்து வருகிறதே என்ற அச்சத்தில் எழுந்ததுதாம் இதனை எழுதுவதற்கான காரணம்!

அணைகள் கட்டப்பட்ட வரலாறு
தமிழர்தம் இன்னல்களுக்குக் காரணமே இன்று ஆறுகள்தாம். இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும், கட்டத் துடிக்கும் அணைகள்தாம்.

இந்த தேச மக்களிடம் நிலவிய இன மொழி சாதி பேதங்களைத் தமது ஆளுமை எல்லையைப் பன்மடங்கு விரிவுபடுத்தப் பயன்படுத்தி, இரு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட வெள்ளையர்கள் செய்த சூழ்ச்சி இன்று வரை தொடர்வதற்கு இந்த அணைகளும் இன்று பலத்த காரணிகளாக விளங்கி வருகின்றன.

அன்னியர்தம் பிரித்தாளும் சூழ்ச்சி இன்று இந்த தேச மக்களின் மாநில அரசியல்வாதிகளால் பன்மடங்கு பெருகி நிற்கிறது. இதன் விளைவால் துடிப்பது தமிழினம் மட்டுமல்ல இயற்கையும்தாம்.

இயற்கையை நம்பிய தமிழினம் இன்று தம்மை வஞ்சிக்கும் சக உடன்பிறப்புகளால் பரிதாப நிலையில் உள்ளது போன்று இயற்கையும் இன்று பரிதாபமான நிலையில்தாம் காட்சியளிக்கிறது.

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில்தான் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டும் திட்டங்கள் இந்த தேசமெங்கும் துவங்கப்பட்டன! பொதுவாகவே ஆங்கிலேயர்கள் இயற்கையை நம்பாதவர்கள்! அறிவியலில் சிறந்து விளங்கினாலும் இயற்கை விதியினைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்!

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அணைகளின் நோக்கமே கடலில் வீணாகும் நீரை சேமித்து வைப்பதற்காகத்தான், அதிலும் வேளாண் தேவைக்காகத்தான் என்ற பொதுவான வாதமும் தவறானதாகும்.

இன்று காவிரியில் கட்டப்பட்ட கர்நாடக மாநில மக்களின் தேவைகள் நிறைவேறிய பின்பே உபரி நீரைத் தமிழகத்திற்குத் தருவோம் என்ற அவர்களின் நிலைப்பாடும்,

ஆந்திரரால் பாலாற்றில் கட்டப்பட்ட அணைகளால் கிட்டத்தட்ட பாலாறே வெண்மணற் பரப்பாகப் பெயருக்கேற்றவாறு இன்று காட்சியளிப்பதற்கும்,

அன்று பென்னி குயிக் என்ற வெள்ளையர் தம் சொத்துக்களை விற்றுத் தியாக உணர்வில் தென் தமிழக மக்களின் நலனுக்கெனக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் கேரளத்தவரிடம் தற்பொழுது ஏற்பட்டுள்ள வேண்டத்தகாத விளைவுகளும்,

மீண்டும் இந்த தேசத்து மக்களின் இன மொழி உணர்வுகளைத் தம் நாடாளும் ஆசைக்கெனத் தூண்டிவிட்டு இந்த நாட்டு வளத்தைத் தமதாக்கிக் கொண்ட வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றும் தொடர்கிறதோ என எண்ணுமளவிற்கு,

அவர்களுக்குச் சரிசமமாக மக்கள் உழைப்பில் வாழ்ந்துவரும், இன்றைய நாடாளத்துடிக்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் திகழ்வதை நினைந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்ற பாரதியின் வேதனை வரிகள்தம் எம்முள் ஓடத்துவங்கும்.


தமிழினத்தின் அறிவியல் பார்வை!

தமிழினத்தின் அறிவியல் பார்வை விசாலமானது! அதனால்தான் இயற்கையை புரிந்துகொண்டு அதற்கேற்ற வாழ்க்கை முறையை வாழ முற்பட்டது தமிழினம்!

தமிழகத்தின் பிரதானமான ஆறான காவிரியின் குறுக்கே தமிழனால் அணைகள் கட்டப்படாததற்கு இன்னொரு மகத்தான அறிவியல் உண்மையும் அடங்கியுள்ளது!

இமயம் வரை ஆண்ட தமிழினம் ஆரியர்களின் வருகைக்குப்பின்னர் தம்முடைய நிலப்பரப்பை ஆரியருக்கு விட்டுக்கொடுத்து வேங்கடம் முதல் குமரி வரையான நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர்.

அதன் பின்னர் ஆரியர்களின் சூழ்ச்சியால் வடமொழியுடன் இணைந்து தெலுங்கும், தெலுங்கும் வடமொழியும் இணைந்து கன்னடமும், தமிழும் வடமொழியும் இணைந்து கொடுந்தமிழாக கேரளமும் மொழிவாரியாகப் பிரிந்து நாட்டு விடுதலைக்குப் பின்னர் இழந்த நிலப்பரப்பான கன்னட ஆந்திர கேரள மாநிலங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது!

இத்தகு நிலப்பரப்பைப் தன்னகத்தே கொண்டிருந்த தமிழகம் தம்முடைய நிலப்பரப்பின் கால நிலையை பருவங்களாக பிரித்து அறிந்தது! அதில் ஒன்றுதான் கார்காலம் எனப்படும் மழை காலம்!

குறிப்பாக தமிழக நில அமைப்புபடி கோடைக்கால முடிவிற்கு பின்னர் இந்த கார்காலம் துவங்குவது மேற்கிலுள்ள அரபிக்கடலில் தோன்றும் தென் மேற்கு பருவக்காற்றின் துணை கொண்டுதான்!

இந்த பருவக்காற்று கடலிலிருந்து சுமந்து வரும் மழை மேகங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சிகரங்களில் தடைபட்டு மழையாக பொழிய இம்மழை நீர் தமிழகத்தில் பிரதானமான ஆறுகளென காவிரி, கிருஸ்ணா, பாலாறு, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி என பல்வேறு பெயர்களில் பெருக்கெடுத்து தமிழகம் முழுவதும் பயணித்து வங்கக்கடலை அடைகிறது!

இந்த ஆறுகளுடனே பயணிக்கும் காற்றின் போக்கும் கிழக்கே பயணித்து தெற்கு நோக்கி திரும்ப பயணித்து தென் கிழக்கில் வங்கக்கடலில் முடிகிறது!

காவிரியின் உப ஆறுகளாக பவானி, நொய்யல், திருமணி முத்தாறு, அமராவதி இன்னும் பல பெரிய மற்றும் சிறிய ஆறுகள் ஆங்காங்கே கலக்கின்றன! இவற்றில் பெரும்பான்மையானவையும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகி வருபவைதான்!

காவிரி உட்பட இந்த ஆறுகள் எவ்வித தடைகளும் இன்றி தமது பயணத்தை நிறைவடையும் போது பலவகை அறிவியல் நிகழ்வுகள் உருவாகின்றன!


தமிழினத்தின் தடைபட்ட அறிவியல் பார்வை!

மிழகத்தில் ஆடிப் பெருக்கன்று நுங்கும் நுரையுமாகப் பெருக்கெடுத்து வரும் காவிரித்தாயின் வரவினை வரவேற்கும் விதமாக காவிரி ஆற்றில் ஏராளமானவிளக்குகளை மிதக்க விடுவர்!

இது வழிபாட்டு முறைக்காக ஏற்படுத்தப்பட்டதல்ல! தமிழர்களின் அறிவியல் மேன்மை கண்ட உன்னதமான வழி முறை இது!

ஆற்றில் இது போல ஏராளமான விளக்குகளை மிதக்கவிடும் போது காற்று மண்டலம் சூடாக்கப்படுகிறது! இதனால் காற்று மண்டலத்தில் செயற்கையாவெப்பச் சலனம் ஏற்படுத்தப்படுகிறது!

இந்த வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தில் மழை பெருகும் வாய்ப்பு செயற்கையாக அறிவியல் ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது!

ஏராளமான விளக்குகள் ஆற்றில் விடப்படும்போது ஆறுகள் செல்லுமிடமெல்லாம் வெப்ப சலனம் ஏற்படுத்தப்படுகிறது!

இதன் காரணமாக அங்கு ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப மேற்கிலிருந்து பயணிக்கும் பருவக் காற்றின் போக்கிலும் மாற்றம் நிகழ்கிறது.

இதன் காரணமாக மழைப்பொழிவு ஏற்படுத்தும் காற்றழுத்த சலனம் அறிவியல் ரீதியில் செயற்கையாகத் தமிழினத்தால் ஏற்படுத்தப்பட்டது!

இவ்வாறுதான் தமிழினம் அறிவியல் ரீதியில் ஆறுகளை பராமரித்து வந்துள்ளது!

ஆனால் தமிழினத்தின் இன்றைய நிலையோ பரிதாபகரமாக உள்ளது!

மொழிவாரியாக தனது சகோதரர்களை இழந்துவிட்டு தம்மை ஆளத்துடிக்கும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் ஆற்று நீருக்கென அவர்களுடன் மட்டுமன்றி தங்களுக்குள்ளும் சண்டையிட்டுக்கொண்டு தனது நாகரீகத்தை இழந்து வருகிறது!

இயற்கை அமைப்பை சரிவர புரிந்து கொள்ளாத கேரள, கருநாடக, ஆந்திர அரசுகள் தம் இன மக்களை பாதுகாப்பதாக தவறாக கருதிக்கொண்டு தமிழகம் நோக்கி வரும் ஆறுகளின் குறுக்கே ஏராளமான அணைகளை கட்டி இயற்கையின் நிகழ்வுகளை ஒரேயடியாக முடக்கிவிட்டன!

இதன் காரணமாக மழை வளம் பெருக்கும் காற்று சலனமும் தற்பொழுது அரிதாகிவிட்டது!

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பது பழமொழி! ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆடி மாதத்தில் பலத்த காற்று தமிழகத்தில் வீசுவதே இல்லை!

இதற்கு காரணம் அந்த மாதங்களில் தமிழகத்தில் எந்த  ஆறுகளும் ஓடாமல் சலனமற்று இருப்பதுதான்!


அணைகளைத் தாமதமாகத் திறப்பதின் விளைவுகள்!

கடந்த சில ஆண்டுகளாக ஆனி மாதத்திலிருந்து அணைகளிலிருந்து தண்ணீர் திரந்துவிட வேண்டும் என தமிழக விவசாயிகளின் கூக்குரல் ஒலிக்க துவங்கியுள்ளது!

ஆனால் அணை நிரம்பும் வரை காத்திருந்து அதன் பின்னர் தமிழக முதல்வர் அணையை திறக்க ஆணையிட்டார் போன்ற சுய தம்பட்டங்களுடன் மிகமிக தாமதமாகவே முக்கிய அணைகள் திறக்கப்படுகின்றன!

ஆனி மாதத்தில் அணைகள் திறக்கப்பட்டிருந்தால் ஒரு போக சாகுபடியை புரட்டாசிக்குள் தமிழக விவசாயிகள் முடித்து விடுவார்கள்!

அதன் பின்னர் ஐப்பசி மற்றும் கார்த்திகையில் வழக்கமாக உருவாகும் இயற்கை நிகழ்வான புயல் அபாய காலங்களில் தண்ணீரில் மூழ்கினாலும் பாதிக்கப்படாத கரும்பு போன்ற பயிர்களை நடவு செய்து தைமாத அறுவடைக்கு தயாராகிவிடுவர்!

ஆனால் இயற்கையை நம்பாத நம் அரசியல்வாதிகள் அணைகள் முழுவதும் நிரம்பினால்தான் திறப்போம் என பிடிவாதம் செய்து கர்நாடக அரசு உபரியாக திறக்கும் நீரால் நிரம்பும் மேட்டூர் போன்ற அதி முக்கிய அணையைக்கூட வெகு தாமதமாக திறந்துவிடுகின்றனர்! விளைவு அபாயகரமானதாக மாறுகிறது.

ஒரு பந்தியில் வரிசையாக உணவிற்கென நிற்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இந்த கூட்டத்தில் முந்திக் கொள்பவர்களுக்கே முழுமையான உணவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடைசியாக வருபவர்களுக்கு ஏனோதானோவென்ற நிலைமைதாம்.

அது போன்றே கடைமடைத் தமிழனின் கதியும் இதே நிலையில்தாம் உள்ளது. முதலிடத்திலுள்ள தமிழனின் தண்ணீர்த் தேவைகள் நிறைவேறிய பின்னர் வெகு தாமதமாகத்தான் அவனது தேவை அரைகுறையாக நிறைவேறும் வாய்ப்பு உருவாகிறது.

அரைகுறையான நீர் வரத்துடன் தாமதமாக பயிர் செய்த விளை நிலங்களை இயல்பாக உருவாகும் புயல் அபாய காலங்களில் பறிகொடுத்துவிட்டு கடைமடைத் தமிழினம் கடன் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கும்போது நிவாரணம் என்ற பெயரிலும் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை சகித்து வாழ்வதுதான் தமிழினம் அனுபவிக்கும் மகத்தான வாழ்க்கைப் பாடமாகும்!


ஆறுகளின் இணைப்பு சாத்தியமாகும்போது அதனுடனே ஏராளமான கால்வாய்களும் வாய்க்கால்களும் உருவாக்கப்படும்! 

இதனுடன் இணைந்து ஏராளமான மரங்களும் வளர்க்கப்படும் சூழல் உருவாகும்! 

மரங்களால்  கிடைக்கும் ஆக்சிஜனின் அதிகரிப்பால் மாறிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் வெகுவாக குறைக்கப்படும் நிலை உருவாகும்! 

இந்த தேசத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்தால் உயரும் வாழ்க்கைத்தரத்தால் மட்டுமே இனி இந்த தேசத்தில் வாழும் மக்களிடம் தற்பொழுது நிகழும் வேண்டாத பேதங்கள் தாமாக குறையத்துவங்கும்!

மாறாக தம் மக்களை காக்க என சுயநலத்துடன் மேலும் அதிக அளவில் அணைகள் கட்ட மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்தால் பூகம்ப அபாயங்கள் மட்டுமன்றி இந்த தேசத்து சுயநல அரசியல்வாதிகளால் தூண்டப்படும் வெறுப்புணர்வுகளால் தொடர்ந்து விரும்பத்தகாத போராட்டங்களும் அதனால் ஏற்படும் இழப்புகளும் வேறு அதிகரிக்க துவங்கும்!

கடல் நீர் வெப்பமடைவதால் ஆண்டிற்கு இருபத்து நான்கு முறை ஏற்பட வேண்டிய காற்றழுத்த சலனம் தற்பொழுது வெறும் நான்கு முறை மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மிக குறைவான மழையளவே நம் தேசத்திற்கு கிடைத்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்!

இந்த கவலைகள் தொலைய வேண்டும். தமிழினம் மீண்டும் தம் பழைய யானை கட்டிப் போரடித்து மாளாத செந்நெல் வள பூமியாக மாற வேண்டும். இதற்கு மக்களின் மனதில் மகத்தான மாறுதல்கள் உருவாக வேண்டும். இந்த மகத்தான மாறுதல்களைச் செய்யப்போவது இனி ஐந்தாம் தமிழ்ச் சங்கம்தாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!