கூட்டிப் பெருக்குங்கள்

கூட்டிப் பெருக்குங்கள் 
                           கணித அறிவியலில் உலகிலேயே முன்னோடிகளாக விளங்கியவர்கள் நம் தமிழர்கள்! வரலாறு அதை மறைத்துவிட்டாலும் நம் அன்றாட வாழ்வியலிலேயே நாம் அதனை அறிய முடியும்!

கணிதம் தமிழர்தம் வாழ்வியலோடு ஒன்றியது! நம்முடைய அன்றாட செயல்களில் தொடர்புடையது! அணுவைப்பிளந்து எனப்பாடிய அவ்வையின் கொவ்வை மொழியாம் தமிழ்தாம் கணிதத்திற்கும் முன்னோடி என்பதை உலகுக்கு எடுத்தியம்ப வேண்டிய கடமை நமக்குண்டு!

என்னைவிட அறிவில் சிறந்தவர்கள் ஏற்கனவே இதனை சொல்லியிருந்தாலும் என் பங்கிற்கு நானும் எனது சொந்த அனுபவத்துடன் சொல்ல ஆசைப்படுகிறேன்!

இதற்குத்தான் நம் தமிழில் ஏராள வழிகள் உள்ளனவே! கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் என! எனவே இன்று முதல் உங்களின் இல்லத்திலுள்ள குப்பைகளைக் கூட்டுங்கள்! தேவையற்ற குப்பைகளை கழித்து விடுங்கள்!

அதே போன்று உங்களிடமுள்ள நல்ல குணங்களை பெருக்கி தேவையற்ற குணங்களை வகுத்துவிடுங்கள்! உங்களின்; இல்லமும் சுத்தமாகும்! உங்களுடைய மனமும் அமைதியாகிவிடும்! எனவே நண்பர்களே எனது நட்பை நீங்கள் என்றும் மறவாதிருக்க இன்றுமுதல் கணக்குப்  போடத் துவங்குங்கள்!

அத்துடன் எனது எண்ணங்களையும் என் நினைவு தெரிந்த நாள் முதல் இதே விதமாகத்தான் மேம்படுத்தி வருகிறேன்!

எனக்கு இதில் ஒருவித மனநிறைவும் ஏற்படுவதை உணர்கிறேன்! எனக்கு அவ்வப்போது துன்பம் நேரும்போதெல்லாம் இந்தக் கணக்கினைப் போடுவதால் குப்பைகளுடன் சேர்ந்து அந்தத் துன்பங்களும் சுத்தமாகிவிடுவது போன்ற மனநிலை!

இன்று நம் படித்த பெண்கள் குறிப்பாக பலர் தங்கள் இல்லத்தை கூட்டுவதையே பெரும் சுமையாகவும் கவுரவ குறைச்சலாகவும் கருதுகின்றனர்! அறிவில் சிறந்த தமிழகப் பெண்கள் நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட கணிதத் தமிழை கைவிட்டு விடாமல் தொடர வேண்டுமென்பதே எனது வேண்டுகோள்!

எனவே இன்றிலிருந்து உங்கள் தாயாருக்கு உதவியாக உங்கள் இல்லத்தில் இனி நீங்களும் கணக்கு போடுங்கள்! கணித வாழ்வுடன் எண்ணங்கள் மேம்பட்டு சுத்தமான மனதுடன் சுகாதாரமாக வாழுங்கள்!

நம் ஒட்டு மொத்த தமிழக மக்கள் தங்களின் எண்ணங்களை கணிதத்துடன் தொடர்பு படுத்திக்கொண்டு வாழ வேண்டும்!

இன்று முதல் உங்கள் எண்ணங்களில் உயர்வானதைக் கூட்டுங்கள்! தாழ்வானதைக் கழியுங்கள்! உங்கள் உயர் எண்ணங்களை மற்றவர்களுடன் இணைந்து பெருக்குங்கள்! தமிழகத்தில் நிலவும் தீமைகளை இத்தகு முயற்சியால் வகுத்து விடுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!