சனி, 26 ஏப்ரல், 2014

ஒரு சாமானியனுக்கு மறுக்கப்பட்ட சனநாயகக் கடமை

Leave a Comment
xU rhkhdpaDf;F kWf;fg;gl;l rdehaff; flik
24.04.2014 Mfpa ,d;W thf;fspg;gjw;fhf thf;Fr;rhtbf;Fr; nrd;Nwd;. thf;fhsu; gl;baypy; vdJ ngau; ePf;fg;gl;bUe;j fhuzj;jhy; ,e;jj; Nju;jypy; thf;fspf;Fk; flikiar; nra;a ,ayhky; tPL jpUk;gpNdd;.

gy Mz;Lfs; ehq;fs; FbapUe;j gioa ,lj;jpy; vq;fs; FLk;g cWg;gpdu;fspd; ngau;fs; thf;fhsu; gl;baypy; ,lk; ngw;wpUe;jd. ehq;fs; jw;nghOJ tPL khwp Ntwplj;jpy; trpg;gjhy; Nju;jy; fkprd; mikj;jpUe;j Kfhkpy; vq;fsJ Gjpa Kftup khw;wj;ijg; gjpT nra;jpUe;Njhk;. vdpDk; vq;fs; FLk;g cWg;gpdu;fspd; ngau;fs; Gjpa tpyhrj;jpy;; khw;wk; nra;ag;glhky; gioa ,lj;jpNyNa cs;sJ.

khwhf vd;Dila ngau; kl;Lk; me;jg; gFjp thf;fhsu; gl;baypy; ,Ue;j ePf;fg;gl;lJld; Gjpa tpyhrj;jpy; ,izf;fg;glTkpy;iy.

vjw;fhf ,J Nghd;w Kfhk;fis elj;Jfpd;wdu;. ,jw;nfd Vuhskhd kf;fspd; tupg;gzj;ij tPz; nra;fpd;wdu; vd;gJ vd; Nghd;w rhkhdpaDf;F tpsq;ftpy;iy.

vd; Nghd;w flik jtwhJ gzpf;Fr; nry;Yk; egu;fSf;F thf;fhsu; gl;baypy; jq;fs; ngau; cs;sjh vd;gij mwpe;J nfhs;tjw;F Neuk; xJf;f Kbtjpy;iy vd;gJjhk; cz;ik. Nju;jy; fkprd; elj;Jk; Kftup khw;w Kfhk;fs; tpLKiw ehl;fspy; tUtjhy; me;j tha;g;igg; gad;gLj;jpf;nfhz;L vk; Nghd;wtu;fshy; Kftup khw;wj;ij vOjpf; nfhLf;f Kbe;jJ.

MapDk; vd;Dila ngau; gioa KftupapypUe;J ePf;fg;gl;L Gjpa Kftupf;F khw;wk; nra;ag;glhjJ Vd; vd;gJ tpsq;fhj Gjpuhfj;jhd; cs;sJ. ,e;j yl;rzj;jpy; thf;fspg;gJ cq;fs; rdehaff; flik vd;w kf;fspd; tupg;gzj;jpy; Vuhskhd tpsk;guq;fs; NtW.

xd;W kl;Lk; vd;Ds; tpsq;FfpwJ. tha;ikahsu;fs; Vuhsk;Ngu; cUthfp ,e;jj; jkpo; kz; kf;fs; Nrhou;fhyf; FlNthiyj; jj;Jt Kiwapy; jq;fspd; flikawpe;J ,ytrq;fSf;Fk;> gzj;jpw;Fk; kaq;fhky; jq;fspd; eyDf;fhf kl;LNk thf;fspf;Fk; fhyk; tUk; tiu vd;Nghd;w Neu;ikahsu;fs; gzgyk; jPu;khdpf;;Fk; ,J Nghd;w faikj;jdj; Nju;jy;fspy; thf;fspg;gijj; jtpu;g;gjw;fhfNt Nju;jy; fkprdpy; ,J Nghd;w Fog;gq;fs; epyTfpd;wNjh vdj;jhd; vz;zj; Njhd;WfpwJ.

,e;jj; Nju;jypd; KbTfs; vg;gb Ntz;LkhdhYk; tuyhk;. ,e;jj; Nju;jypYk; thf;fhsu;fisg; gzk; nfhLj;J tpiyf;F thq;Fk; mrpq;fq;fs; ele;NjwpAs;sd. kJ ghl;by;fSf;F thf;F tq;fp tpiyf;F thq;fpa mtyq;fSk; njhlu;fpwJ. Nju;jypy; vtu; ntw;wp ngWthu; vd;gJ ,q;F Nfs;tpNa ,y;iy.

rhjpa kjthjf; $l;lzp rpy ,lq;fspYk;> MSk; ,af;fj;jpdupd; gz gyk; rpy ,lq;fspYk; ,tu;fspd; jtwhd Ml;rp Kiwia tpUk;ghj kf;fshy; Coy; vjpu;f;fl;rpAk; $lr; rpy ,lq;fspy; nty;Yk; epiy tuyhk;. vdpDk; ntd;wtu;fspd; ntw;wpf;fspg;gpd; gpz;zdpapy; Njhw;Wg;Nghd rdehafKk; Njhw;Wg;Nghd gytPdkhd kf;fSf;Fj; njhlu;e;J ,iof;fg;gLk; JNuhfq;fSk; vd; Nghd;w tha;ikahsu;fsplk; Ntjid miyfis vOg;Gnkd;gjpy; re;Njfk; VJkpy;iy.

,d;Ws;s ve;j murpay; ,af;fq;fspd; kPJk; vdf;F ek;gpf;ifapy;iy vd;gij czu;j;Jtjw;nfd Nju;jy; fkprd; mwpKfk; nra;jpUe;j Nehl;Nlh vDk; nghj;jhid mKj;jp thf;fspf;f tpUk;gpa vdJ Mty; ,e;jj; Nju;jypy; Ntz;Lkhdhy; ,J Nghd;w Fog;gq;fshy; epiwNtwhky; NghapUf;fyhk;.

,e;j epiyAk; xU ehs; khWk;! ey;ytu;fs; kl;LNk nghJkf;fs; gpujpepjpfshf vspikahfj; Nju;jy; fsj;jpy; gzgy gr;Nrhe;jp epwkhWk; murpay; ,af;fq;fSf;F vjpuhf ve;jtpj Mu;g;ghl;lKkpd;wpf; fskpwq;fp ntw;wp thif #Lk; ehSk; tuj;jhd; NghfpwJ. ,e;j khw;wk; ,e;j kz;zpy; jkpo;f;flTs; KUfdpd; jiyikapyhd Ie;jhk; jkpo;r;rq;fj;jhy;jhd; KbAk; vd;gJ vd;Kd; eprkhff; NghFk; fdthf kyu;tij vtuhYk; jLf;f KbahJ.

Nju;jy; fkpridg; nghWj;jtiu thf;fhsu; gl;baiyr; rup ghu;j;jy; Kftup khw;wq;fisg; gjpT nra;jy; Gjpa thf;fhsu;fisr; Nru;j;jy; Nghd;wtw;iw epiwNtw;w Vw;fdNt muRg;gzpapy; cs;s gzpahsu;fisj;jhd; jw;fhypfkhfg; gzpapy; mku;j;jp jd;Dila gzpfis Kbj;Jf; nfhs;fpwJ.

Mapd; ,e;j mYtyu;fs; VNjDk; murpay; ,af;fk; rhu;e;jtu;fshfj;jhd; ,Uf;fpd;wdu;. vdNt ,tu;fs; thf;fhsu; gl;bay; rup ghu;f;Fk; gzpapd; NghJ me;je;j gFjpfspy; cs;s nry;thf;Fkpf;f murpay;thjpfspd; J}z;Ljy;fs; Ngupy; jq;fSf;Fg; gpbf;fhj thf;fhsu;fis thf;fhsu; gl;baypy; ,Ue;J ePf;fp tpLfpd;wdu;. 


,tu;fspd; nray; mwpahj vk; Nghd;w mg;ghtpfs; Nju;jy; md;Wjhd; jq;fspd; ngau; thf;fhsu; gl;baypy; ,y;iy vd;gij mwpe;J ,Uf;fpd;w ,af;fq;fspy; vtUNk ey;ytu;fs; ,y;iy vdNt ek; xUtupd; thf;fpdhy; kl;Lk; ehl;by; ve;jtpj khWjy;fSk; Vw;glg;Nghtjpy;iy vd;w kd epiyAld; jq;fs; ngaiu ePf;fpatu;fis kdJf;Fs; nehe;Jnfhz;L tPL jpUk;gp tpLfpd;wdu;.

Ie;jhk; jkpo;r;rq;fk; jkpofj;jpd; Ml;rpg;nghWg;gpid Vw;Fk; epiy te;jhy; kj;jpa murpd; epjpAld; khepy murpd; epjpiaAk; gad;gLj;jp jkpofj;jpy; Nju;jy; fkprDf;nfd epue;jg; gzpahsu;fis mku;j;Jtjw;Fj; Njitahd vy;yhtpj eltbf;iffisAk; cldbahf Nkw;nfhs;Sk;.

kw;w muRg; gzpahsu;fs; NghyNt Nju;jy; fkprdpd; jkpof mstpyhd gzpahsu;fs; KO NeuKk; Nju;jy; gzp rk;ge;jkhd mYty;fis ,dp KOikahff; ftdpf;Fk; epiy cUthFk;. ,jdhy; thf;fhsu; gl;baypy; jw;nghOJ epyTk; midj;J tifahd Fog;gq;fSk; epue;jukhfj; njhiyAk; epiyapid Ie;jhk; jkpo;rq;fk; jkpofj;jpy; cWjpgl cUthf;Fk; vd;gjpy; vkf;Fs; vt;tpjr; re;NjfKk; fpilahJ.Read More...

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

எது சனநாயக இயக்கம்?

Leave a Comment
தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுமே தங்களின் இயக்கங்கள் சனநாயக அடிப்படையில் இயங்குவதாகவும்,. 

தலைவர்கள் துவங்கி சாதாரணக் கிளைச் செயலர் வரை தங்களின் இயக்கங்களில் தேர்தல் வாயிலாகவே இயக்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன.

ஆனால் உண்மை நிலை இதற்கு மாறாகத்தான் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென மக்களுக்கு விளங்காமலில்லை.

பெரிய இயங்கம் துவங்கி மிகச் சிறிய இயக்கம் வரை தலைவர் முதலாக அதி முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள் 

அந்தந்த இயக்கம் துவங்கிய காலம் தொடங்கி இன்றுவரை தத்தம் பதவியில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுதான் தொடர்கின்றனர்.

தமிழகத்தின் போதாத குறைக்கு இவர்களின் வாரிசுகளும் படிப்படியாக இந்த இயக்கங்களில் மெல்ல மெல்ல நுழைக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியும் அசுரத்தனமாக வளர்ந்து 

தங்களின் பெற்றோர் வகித்த பதவிகளைத் தம் வயப்படுத்தி இயக்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கின்றனர்

இவர்களின் பதவிச்சண்டைகளால் தமிழகம் படும் பாடு உலகிற்கே தெரியும்.

ஆக எந்த இயக்கமும் தங்கள் இயக்கம் சனநாயக இயக்கம்தான் என மார் தட்டிச் சொல்ல முயற்சித்தாலும் உண்மை நிலை அதுவல்ல.

இங்கு நடப்பது கிட்டத்தட்ட அரசர் ஆட்சி முறைதாம். ஓவ்வொரு இயக்கத்திலும் மன்னர்களாக, இளவரசர்களாக, தளபதிகளாக, வலம் வராதவர்களைக் காண்பது அரிதினும் அரிது.

பணபலமும், அதிகார பலமும் கோலோச்சும் இவர்களைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கி வாழும் முறைதாம் இன்றும் உள்ளது.

அரசியலில் உள்ள இவர்களும் தங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தாம். 

பொது வாழ்க்கைக்கு வந்துள்ள இவர்கள் மக்களின் நலனுக்காகத்தான் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு மக்களுக்குப் பணிந்து நடந்து சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையும் 

நாம் மக்களாட்சித் தத்துவ உலகில் வாழ்கிறோம் என்பதுவும் கூட மக்களுக்கு ஏனோ விளங்கவில்லை.

இன்றுள்ள பெரும்பாலான அரசியல் இயக்கங்களில் தனிநபர் செல்வாக்கும், குடும்பச் செல்வாக்கும், பணபலச் செல்வாக்கும்தாம் ஆதிக்கம் செழுத்துகின்றன. 

ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கத்தைக் கடுமையாக விமரிசித்து வெறுப்பினைச் சம்பாதித்தவர்கள்கூட தங்களது இயக்கத்தில் கருத்து மாறுபடுதல், அல்லது தேர்தல் நேரங்களில் தமக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுதல் 

போன்றவற்றிற்காக இன்னொரு இயக்கத்திற்கு சர்வசாதாரணமாக வெட்கமின்றி மாறுவதும், மாற்று இயக்கத்தவரும் இவர் தங்களைக் கடுமையாக விமரிசித்தவர்தானே எனப் புறக்கணிக்காமல் 

இவரது செல்வாக்கையும் பணபலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு பதவி கொடுத்து கவுரவிப்பது போன்ற முரண்பாடான செயல்கள் இந்த நாட்டில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

உண்மையான சனநாயக அமைப்பில் சாதாரணமான, எளிமையான, வசதி வாய்ப்பற்ற, அதே சமயம் ஒழுக்கமும் நேர்மையும் மிக்க ஒரு சாதாரணத் தொண்டர் கூடத் 

தலைவர் பதவிக்கோ அல்லது வேறு ஏதேனுமொரு முக்கியமான பதவிக்கோ போட்டியிடவும், அப்படிப் போட்டியிட்டு வெற்றியும் பெற முடியுமென்றால் 

அதுதான் உண்மையான சனநாயக அமைப்பினைச் செயல்படுத்தும் இயக்கமாகத் திகழ முடியும்.

இது போன்ற அசாதாரணமான அமைப்புகள் தமிழகமெங்கும் உருவானால்தான் அரசியலில் ஆரோக்கியமும், நேர்மையும், வாய்மையும் உருவாக்க முடியும். 

ஐந்தாம் தமிழ்ச்சங்கம்தான் இனி உண்மையான சனநாயக இயக்கமாக இனி வரும்காலத்தில் தமிழகத்தில் தன்னிகரற்று விளங்கும்.

ஏனென்றால் இது தலைவர்கள் அற்ற பணபலமற்ற, பதவி ஆசையற்ற எளிமையான மக்கள் தொண்டர்கள் மட்டுமே குழுவாக இணைந்து செயல்படப்போகும் ஒரு

 புதுமையான தலைவர்கள் அற்ற தொண்டர்கள் மட்டுமே நிறைந்த முன் மாதிரி மக்கள் இயக்கம்.

நாங்கள் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட மாட்டோம்! இதுவே ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில் இணைபவர்களின் ஒரே தாரக மந்திரம்.

Read More...

பல தொழில் கற்றல்

Leave a Comment
பல தொழில் கற்றல்
இளம் வயதிலேயே எனக்கு பலவகையான தொழில்கள் கற்கும் வாய்ப்பு அமைந்தது. எனது தாய் வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களை ஊரில் சோடாக்காரர் என்றால்தான் தெரியும்.
என்னையும் சோடாக்காரருடைய பேரனா என்றுதான் ஊரார் விசாரித்தறிவர். அந்த நாட்களில் குடிசைத் தொழிலாக விளங்கிய சோடா, மற்றும் குளிர்பானங்கள் தயாரித்து விற்றல், திருமணம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஒலி ஒளி அமைத்தல், பெட்றோமாக்ஸ் லைட் வாடகை, மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு விடல், புதிய மிதிவண்டிகள் விற்பனை, பழைய மிதி வண்டிகளைப் பழுது பார்த்தல், அவ்வப்போது வரும் இரு சக்கர வாகனங்களின் பழுதுகளை நீக்குதல், மகிழுந்து மற்றும் சரக்கு வண்டிகளின் டயர் பஞ்சராவதைப் பழுது பார்த்தல் என அவரது தொழில்களின் வரிசை நீளும்.
பள்ளிக்குச் செல்லாத வயது துவங்கி பள்ளி இறுதிப் படிப்பு முடியும் வரை நான் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்குதான் தவம் கிடப்பேன். பள்ளிக் கல்வியோடு தொழிற்கல்வியும் எனக்கு ஏராளமாக அஙகுதான் கிட்டியது.
அது தவிர நான் மற்ற நேரங்களில் என் வயதுக்கும் மீறிய பெரியவர்களின் நட்பையும் பெற்றிருந்தேன். அவர்களில் மின்சார சாதனங்களைப் பழுது பார்ப்பவர், தச்சு வேலை செய்பவர், மரம் அறுப்பவர் மளிகை வணிகம் செய்பவர் எனப் பலர் அடங்குவர். இவர்களிடமும் நான் பல தொழில்களின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள முயன்றது.
குறிப்பாக எனது தாத்தாவின் மறைவைத் தொடர்ந்து எனது தாய்மாமன்கள் நடத்திய மேற்கண்ட கடைக்கு வரும் இரு சக்கர வாகனங்களைக் கண்டு கண்டே என் மனம் அவைகளின் மீது நாட்டம் கொண்டதாலோ என்னவோ இருபத்தைந்தாண்டுகள் அந்த வணிகத்திலேயே நட்டத்துடன் நிலைக்கும்படிச் செய்துவிட்டது.
இவை தவிர எனது தகப்பனாரும் எனது பெரிய தகப்பனாரும் நடத்திய உணவக வணிகம், எனது தந்தையாரும் எனது தமக்கையின் கணவர் நடத்திய மளிகை வணிகம், பருத்தி வணிகம், கடலை வணிகம் எனப் பல்வேறு வணிக முறைகள் எனக்கு அறிமுகமாயின.
இந்த அனுபவம்தான் வீட்டில் பழுதாகும் மின்விசிறிகளைக் கழற்றி மாட்டுதல், மின் சாதனப் பழுதுகளைச் சரி செய்தல், அயர்ன் பாக்ஸ் போன்றவற்றில் ஏற்படும் சிறிய குறைகளைச் சரி செய்தல் இருபத்தைந்தாண்டு கால இரு சக்கர வாகன வணிகத்தில் கற்றுக் கொண்ட அனுபவத்தால் அவற்றில் ஏற்படும் சிறு சிறு குறைகளைச் சரி செய்து கொள்ளல் போன்றவை என்னால் சாத்தியமாயிற்று.
வணிக வாழ்வில் நட்டமேற்பட்டு நான் வேலைக்குச் செல்லும் நிலை உருவானபோது நான் வணிகம் செய்தபோது கற்றுக்கொண்ட கணக்கியல் துறை கை கொடுத்தது. பின்னர் நாற்பத்து இரண்டு வயதில் கணிணி கற்றேன். டேலி எனும் கணிணிக் கணக்கைக் கையாளக் கற்றேன்.
இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் இருவருக்கும் மாதம் இரண்டாயிரத்து ஐநூறு சம்பளம் கொடுத்த எனக்கு வயது காரணம் காட்டி கிடைத்த சம்பளத் தொகை இரண்டாயிரத்து ஐநூறுதான்.
நான் எனது வேலையில் காட்டிய திறமைகள் படிப்படியாக உயர்ந்து என்னை விட அதிக சம்பளம் வாங்கிய இளைய சமுதாயத்தினரை விட அதிக சம்பளம் பெறும் நிலையினை இன்று நான் உருவாக்கிக்கொள்ள மேற்கண்ட பயிற்சிகள்தான் அதிகளவில் உதவின.
பட்டுக்கோட்டையார் எழுதிய வீட்டுக்குள்ளே விழுந்து கிடந்து வெம்பிவிடாதே என்ற பாடல் வரிகளை இளம் வயதிலேயே அடிக்கடி கேட்க நேர்ந்ததாலோ என்னவோ நான் எனது பள்ளிப்படிப்பு முடிக்கும்வரை மேற்கண்ட இடங்களில்தான் எனது பொழுதைக் கழித்தேன். பள்ளியில் படிப்பதோடு சரி. வீட்டில் அமர்ந்து நான் படித்த நாட்கள் வெகு அபூர்வம்தான். வீட்டில் நிலவிய கடுமையான வறுமைச்சூழல் காரணமாகப் படிப்பில் நாட்டமின்றிப்போனாலும் என்னுடைய சராசரிப் பள்ளி மதிப்பெண் 70 விழுக்காடாகும்.
இன்று நம் தமிழ்க்குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே பொத்திப்பொத்தி வளர்க்கப்படுகின்றனர். படிப்பு முடிந்து வெளியுலகம் வந்தால் அவர்கள் சந்திக்க வேண்டிய இன்னல்கள் ஏராளம் ஏராளம்.
முடிந்தவரை நம் குழந்தைகளை வெளி அனுபவத்துடன் வளர்த்தால் எதிர்காலத்தில் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எவ்வித இடர்ப்பாடுகளையும் எக்காலத்திலும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பது எனது வாழ்க்கை அனுபவம் சொல்லிக்கொடுத்த பாடம் இது.Read More...

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

பாரம்பரிய சித்த மருத்துவம்

Leave a Comment
                    பாரம்பரிய சித்த மருத்துவம்
நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கும் ஆங்கில வழி மருத்துவத்திற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நம்முடைய போதாத காலம் ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் கால் பதித்து அவர்களுடய மருத்துவ முறைக்குள் நம்மைப் புகுத்திவிட்டனர்.

ஆங்கில வைத்தியம் அசைவ உணவு வகைகளை மனிதர்களுக்குப் பரிந்துரைக்கின்றது. மாறாக நம் சித்த வைத்திய முறையோ அசைவ உணவு வகைகள் நஞ்சுக்கு இணையானதென வலியுறுத்தி அவைகளைத் தவிர்க்;குமாறு அறிவுறுத்துகிறது.

வள்ளுவச் சித்தரும் உயிர்களைக் கொன்று தின்றல் பாவம் என்றும் பிற உயிர்களைக் கொல்லாதவர்களை அவை கைகூப்பித் தொழும் எனவும் இயம்பியுள்ளார்.

அசைவ உணவுப் பழக்கத்தில் திலைக்கும் நம் மக்கள் இந்தப் பழக்கத்தைக் தவிர்க்க இயலாத காரணத்திற்காகவே நம் சித்த மருத்துவ முறையைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர்.

மேலும் நம் பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரியக் குடும்ப மருத்துவம் என்ற முறையில் தயாரிப்பு முறைகளை இரகசியமாக்கி சித்த மருத்துவத் துறையே வளர வாய்ப்பின்றித் தள்ளாடுகிறது.

வெள்ளையரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நம்மவரும் சித்த மருத்துவ முறையை ஆதரிக்காமல் ஊழல் செய்வதற்கெனவே ஆங்கில வழி மருத்துவமனைகளையும் மருத்துவக் கல்லூரிகளையும்தான் ஏராளமாகத் திறந்தனரே தவிர சித்த மருத்துவ மேன்மையை உலகறியச் செய்ய முன்வரவே இல்லை.

பணத்திற்காக அலையும் ஒரு சில தவறான மருத்துவப் பேர்வழிகளால் சித்த மருத்துவம் என்றாலே மக்கள் முகம் சுழிக்கும் நிலையும் இன்று உள்ளது.

ஆங்கில மருத்துவம் பக்க விளைவுகள் உடையது. நம் சித்த மருத்துவமோ எந்தவிதமான பக்க விளைவுகளும் அற்றது.

ஆங்கிலேயர் இந்த மண்ணில் கால் பதித்த சில நூற்றாண்டுகளில் நாம் கிட்டத்தட்ட ஆங்கிலேயர் பாணிக்கே மாறிவிட்டோம் என்பதில் எவருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

எனினும் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை நாம் தவிர்ப்பது மட்டுமல்ல நம் தமிழகத்தில் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கும் மூலிகை வளங்களை வீணடித்து அவைகளைப் பொருளாதார வளமாக மாற்றாமல் மூடத்தன ஆங்கில மோகத்தில் சிக்கித் தவிக்கிறோம் என்பதுதான் எம்முள் வேதனையளிக்கிறது.

தமிழகமெங்கும் பிரபலமான மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதுவும்; அதைவிட அதிகளவில் மருந்து விற்பனைக் கடைகளில் வரிசை கட்டி மருந்து வாங்கும் கூட்டங்களைப் பார்க்கும்போது எதையோ இழந்தது போன்ற வேதனை எழுகிறது.

அதைவிடக் கொடுமை மருந்து வணிகரிடம் தங்கள் நோயை விவரித்து அவர் தரும் மருந்தினை வாங்குவதும் தாங்களாகவே குறிப்பிட்ட சில மருந்துகளை நிவாரணம் தேவைப்படும்போது தங்களின் நோயைக் குணப்படுத்திக்கொள்ள தங்கள் இல்லங்களில் வாங்கி வைத்துப் பயன்படுத்துவதை நாம் சர்வ சாதாரணமாக இப்பொழுது காண முடிகிறது.

இதைவிடக் கொடுமை தமிழராகப் பிறந்து ஆங்கில வழி மருத்துவம் கற்றவர்கள் சித்த மருத்துவ மருந்துகளைத் துச்சமாக மதிப்பதும் தங்களின் பணி நேரத்தைச் சித்த மருத்துவ விற்பனைப் பிரதிநிதிகள் வீணடிப்பதை அனுமதியோம் எனச் சுவற்றில் எழுதி வைத்துத் தவிர்ப்பதையும்கூடச் சில இடங்களில் கண்டுள்ளோம்.

எங்கள் சித்த மருத்துவ ஆசான் சித்தக தவசிகளார் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் நான் கிட்டத்தட்ட ஆங்கில வழி மருத்துவத்திலிருந்து விலகிச் சித்த மருத்துவ வழிக்;கு மாறிவிட்டேன். பதினைந்து ஆண்டுகளாக என்னை வாதித்த தூசு ஒவ்வாமை மற்றும் பனி ஒவ்வாமைத் தொல்லையிலிருந்து விடுபட்டு இன்று 52 வயதாகும் நிலையிலும் நிம்மதியாக வாழ்வதற்கு நம் சித்த மருத்துவம்தான் காரணமாயிற்று என்பதை என்னால் உறுதிபட உரைக்க முடியும்.

அது மற்றுமன்றி அசைவ உணவுப் பழக்கத்தை விட்டு விலகியும் சித்த மருத்துவம் வலியுறுத்தும் சிலவகையான உணவு வகைகளைத் தவிர்த்ததும்; நம் தமிழினம் மறந்திருந்த யோகப் பயிற்சியினை அவ்வப்பொழுது மேற்கொள்வதும் உடல் ஆரோக்கியம் பெற வழி காட்டியது.

சென்ற வாரம் கூட அதிக உடல் சூடு காரணமாகவும் தொடர்ச்சியாக கணிணியில் ஆறு மணி நேரம் வேலை செய்த காரணத்தால் எனது தலையில் நீர் கோர்த்துக்கொண்டு சளி சேர்ந்து கடுமையான தலைவலி உருவானது.

இந்த வலியோடு எங்கள் ஊரில் நடைபெற இருந்த திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றேன். அங்கு சென்றவுடன் தலைவலி இன்னும் கடுமையானதுடன் வாந்தி உணர்வும் ஏற்பட்டது. எனது சகோதரியின் கணவர் ஆங்கில மருந்தினைப் பரிந்துரைக்க நானோ அவரிடம் சித்த மருத்துவ மகத்துவத்தை எடுத்துரைத்து நமது பாரம்பரிய மருந்தான கொம்பு மஞ்சளை அருகிலிருந்த கடையில் வாங்கி வரச் செய்து அதனைத் தீயில் வாட்டி அதிலிருந்து வரும் புகையினைச் சுவாசித்தேன்.

சிறிது நேரத்தில் தலையில் சேர்ந்திருந்த சளி வெளியேறத் துவங்கியது.
இலேசாகத் தலையை உயர்த்தி தலையில் சேர்ந்திருந்த சளியை மெல்ல உறிஞ்சி வெளியே துப்பத் துவங்கினேன். கால் மணி நேரத்திற்குள் எனது தலைவலி குறைந்து வாந்தி உணர்வு குறைந்தது. இரவு உணவை மட்டும் அன்று தவிர்த்து விட்டு நிம்மதியாகப் படுத்து உறங்கினேன்.

காலை எழுந்தவுடன் எவ்வித பழைய நோய் அறிகுறியுமின்றி வழக்கம் போல வேலைக்குப் புறப்பட்டு விட்டேன். இருபது வயது இளைஞர்கள் கூட இன்று சாதாரணத் தலைவலியென்றால் பணிக்குச் செல்லாமல் விடுப்பு எடுக்கும் வழக்கம் காண்கிறோம். 

இரவில் மட்டுமே வரும் கடுமையான காய்ச்சலோடு கூட நான் இந்த ஆண்டு பனிக்காலத்தில் வரும் வியாதியைச் சித்த மருத்துவத்தின் துணையோடு வென்று விடுப்பு எடுக்காமல் பணிக்குச் சென்றேன் என்பதையும் பெருமையுடன் என்னால் உலகிற்கு எழுதி விளக்க முடியும்.

நம்முடைய சமையல் அறையிலேயே இருக்கும் எத்தனையோ மூலிகை மருத்துவப் பொருட்களை அவற்றின் மருத்துவ குணம் அறிந்திருந்தும் நாம் பயன் படுத்தத் தவறிவிட்டோம் என்பதுவும் ஒரு வேதனையான செய்திதான்.

வேனிற் காலத்தில் எழும் கட்டிகளை அவை எழும்பும் நிலையிலேயே ஒரு பூண்டின் பகுதி எடுத்து அதை நசுக்கி அதிலிருந்து வரும் சாற்றை கட்டியின் மேல் தடவினால் அடுத்த நாள் அது ஆரம்ப நிலையில் இருந்தால் அப்படியே அமிழ்ந்து விடும். முற்றிய நிலையிலிருந்தால் பழுத்து உடைந்துவிடும்.

இதே போன்று இஞ்சிச்சாற்றினைத் தேனுடன் கலந்து காலையில் சாப்பிட்டால் கடுமையான நெஞ்சுச்சளி விலகிவிடும். வெறும் வயிற்றில் இஞ்சிச்சாற்றினை அப்படியேயும் குடிக்கலாம்.

இரவில் கடுமையான இருமல் ஏற்பட்டு உறங்க இயலாமல் தவித்தால் இரண்டு மிளகினை எடுத்து பல்லில் கடித்து அந்தச் சாற்றினை உட்கொண்டால் சிறிது நேரத்தில் இருமல் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்கலாம். இந்த சிறிய வைத்தியத்தை நானே சில சமயங்களில் சமையலறைக்கு எழுந்து சென்று பயன்படுத்த சோம்பல்பட்டு சில மணி நேரங்கள் உறக்கமின்றித் தவித்திருக்கிறேன்.

வேனிற்கால உடல் சூட்டினைத் தவிர்க்க சிறிது சீரகத்தை நம்முடைய தண்ணீர் பாட்டிலில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும்.

நம் வீட்டிலேயே மருந்தகம் வைத்துக்கொண்டு ஆங்கில வைத்தியத்திற்குச் செலவழிப்பதும்; பக்க விளைவுகள் உள்ளதென அறிந்திருந்தும் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துவதும் தமிழராகப் பிறந்த நாமே நம்முடைய மருத்துவ முறையைத் தவிர்ப்பதும் ஏற்புடையதல்ல.

அற்புதமான சித்தவைத்திய முறை தமிழகமெங்கும் பரவ வேண்டும். மருத்துவராவேன் எனக்கூறும் இளம் சிறார்கள்கூட நான் ஒரு மிகச்சிறந்த சித்த மருத்துவராவேன் எனக் கூறும் காலம் வரவேண்டும். 

தமிழகமெங்கும் சித்த மருத்துவத் தயாரிப்பு விற்பனை மருந்தகங்கள் பெருக வேண்டும்.

தமிழகத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் மூலிகை வளங்கள் இந்த பாரத தேசம் முழுவதும் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள மக்கள் தேடி வந்து பயன்படுத்தும் விதமாக அபரிமிதமான சித்த மருத்துவ உற்பத்தி மையங்கள் தமிழகத்தில் ஏராளமாக உருவாக வேண்டும்.

இது என்னுடைய முதன்மையான தமிழ்க்கனவு. இந்த கனவு நனவாகத் தமிழகத்தி;ல் சித்தர்களின் தலைவனாம் முருகனின் வழிகாட்டுதலோடு கூடிய ஐந்தாம் தமிழ்ச்சங்கம் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். 

ஏராளமான தமிழக இளைஞர்கள் இந்தச் சங்கத்தில் இணைய வேண்டும். இணையத்தில் சாதாரணமாகத் துவங்கப்பட்ட இந்த ஐந்தாம் தமிழ்ச்சங்கம் உலகலாவிய அளவில் புகழ்பெற வேண்டும்.

இதுதான் பிறந்த இந்தத் தமிழ் மண்ணுக்கு நான் ஆற்றவேண்டிய முதற்கடமை.
Read More...

சனி, 19 ஏப்ரல், 2014

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்!

Leave a Comment
நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்!
ஒரு தொலைக்காட்சியின் வேட்பாளர் நேர்முகக் கலந்துரையாடல் நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அதில் ஆளும் இயக்கத்தின் வேட்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ஒரு பொது மக்கள் பிரதிநிதி மதுவிலக்கு பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆளும் தரப்பு வேட்பாளர் அளித்த பதில் இதோ இதுதாம்!
தமிழகத்தில் மதுக்கடைகளை தாங்கள் அங்கம் வகித்த பழைய இயக்கம்தான் திறந்து வைத்தது. நாங்கள் அதனை இப்பொழுது தொடர்கின்றோம். 

இரண்டு தலைமுறைகள் இதனால் நாசமாகிவிட்டன. இப்பொழுது எவர் குடிக்காமலில்லை? நீங்கள் வேண்டுமானால் டாஸ்மாக் கடைக்குச் சென்று பாருங்கள். அங்கு பெண்கள் கூட அமர்ந்து சர்வசாதாரணமாகக் குடிப்பதைக் காணலாம்.

நாங்கள் இந்த நிலையில் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விடுவர். ஆந்திரத்திலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் மது வகைகளைக் கடத்திவந்து இங்கு விநியோகம் செய்பவர்கள் ஒரே நாளில் கோடீசுவரர்கள் ஆகிவிடுவர். எனவே எங்களால் மதுவிலக்கை இந்த நிலையில் அமல்படுத்த இயலாது என்று பதிலலித்தார்.
அவர் இந்த பதிலை உச்சரிக்கும்போது பெண்கள் கூட குடிக்கின்றனர் என்பதை சவால்விடுவது போலப் பேசியதுதாம் எம்முள் ஏராளமான வேதனை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

அவர் சொல்வது ஒரு வகையில் உண்மைதாம். அவர் அங்கம் வகிக்கும் இயக்கத்தின் முன்னோடிகள்தாம் தமிழகத்திலுள்ள மிகப்பெரிய மது ஆலைகளுக்கு உரிமையாளர்கள் என்பதும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அந்த ஆலைகளின் அபரிமிதமான வருமானம் அடியோடு தொலைந்து ஆலைகளை மூடிவிட நேர்ந்துவிடுமே என்ற அச்சமும்தான் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டதே தவிர அவரே ஒப்புக்கொண்டது போல இரண்டு தலைமுறைகள் அடியோடு மது அரக்கன் பிடியில் சிக்கியதுடன் மூன்றாவது தலைமுறையும் மது எனும் படுபாதாளத்தில் வீழ்ந்து தமிழக ஒட்டுமொத்த பொருளாதார வளமும் நாசமாகிவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இல்லையெனினும் எம்முள் வேதனை அலைகளாக எழுகிறது.

இந்த உலகத்தில் சாதிக்க முடியாதது என எதுவுமே இல்லை என்பது சாதாரண குண்டூசி தொடங்கி விண்வெளிக்கு பயணப்படும் ராக்கெட்டுகள் வரை நம் கண் முன்னே நிரூபணமாகி வருகிறது. மனித உறுப்புகளைக்கூட புதியதாக உருவாக்குவதென்பது சாத்தியமாகி வருகின்ற காலகட்டம் இது.

ஆயின் மனிதனின் உள் உறுப்புகளை நாசம் செய்வதில் பிரதானமானதும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுப்பதும் பெண்களின் அளவற்ற துன்பங்களில் தலையாயதும் குடும்ப உறவுகள் சிதைவிற்கு முதலானதும் விபத்துகள் உணர்ச்சியவயப்பட்ட சண்டைகள் திருட்டு கொள்ளை கற்பழிப்பு என ஏராளமான சமூகச் சீரழிவுகளுக்குக் காரணமானதுவும் மதுதாம். 

இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமாகும் மதுவினை ஒழிக்க இயலாதென்பவர்களைத்தான் அன்று திராவிட இயக்கத்தை வளர்க்கப் பாடுபட்ட மக்கள் திலகம் அவர்கள் பாடிய பாடல்களில் வரும் வரிகள் இவ்வாறு வர்ணிக்கிறது.

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்!
உண்டால் மயக்கும் கள்ளானது அது உண்ணாத பேருக்கு முள்ளானது! 

மக்கள் திலகம் சுட்டிய மிருகங்களை உருவாக்கும் அரசாங்கங்கள்தாம் உண்மையில் விலங்கினும் கீழான காலில் குத்திய முட்கள் போன்றவர்கள். முட்களைக் களைவதும் விலங்குகளைத் திருத்துவதும் ஒட்டு மொத்த சமூகமும் திருந்த வேண்டும் என்ற உண்மையான அக்கறை உள்ள நல்லவர்கள் உருவானால்தான் முடியும்.

தமிழினத்தின் மூன்றாவது தலைமுறையும் அழிவதற்குள் விழித்திடுவோம். ஐந்தாம் தமிழ்ச்சங்கம் ஆளும் பொறுப்பேற்றால் முதல் வேலையே மதுக்கடைகளை மூடிவிடுவதற்கு பதிலாக அவைகளில் பணி புரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உருவாக்காமல் அவைகள் தற்போது இருக்கும் நிலையிலேயே உயர் வகைப் பழவகைகள் மற்றும் பழச்சாறுகள் விற்பனை நிலையங்களாக மாற்றம் செயவதுதாம.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் சிறையிலடைக்கப்பட்டு அவர்கள் திருந்தும் வரை அவர்களுக்கு உணவிற்கு பதில் அவர்கள் காய்ச்சிய சாராயம்தான் உணவாக வழங்கப்படும். இந்த தண்டனையில் இருந்து மதுவினை வெளிமாநிலங்களிலிருந்து கடத்துபவர்கள் அவர்களைக் கண்டு கொள்ளாத காவலர்கள் என எவரும் தப்ப இயலாது. 

இவர்களையும் மதுவின் பிடியில் வீழ்ந்து தவிக்கும் மக்களையும் காவல் துறையில் இனி அதிகளவில் இடம் பெறப்போகும் மனநல மருத்துவ அலுவலர்கள் வாயிலாகத் திருத்தும் பணியை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மேற்கொள்ளும். 

மது விற்பனையால் வரும் வருமானம் எத்தனை கோடிகளாக இருந்தாலும் அது ஐந்தாம் தமிழ்ச்சங்க இயக்கத்தைப் பொருத்தவரை குடி குடியை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் கெடுக்கும் என்ற பகுத்தறிவு உண்மையை உணராத விலங்குகள் ஆட்சி செய்யும் சாதாரண இயக்கமல்ல என்ற உண்மை உலகிற்கு உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Read More...

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தர்மபுரி

Leave a Comment
தர்மபுரிப் பேருந்து எரிப்பு வழக்குச் சம்பவம்!

கொலைக் குற்றங்கள் பெரும்பாலும் இரு நபர்களுக்கிடையே ஏற்படும் சண்டையின்போது உணர்ச்சி வசப்படுதல் காரணமாகவே நிகழ்கின்றன! இது சம்பந்தப்பட்டவர்களைத் தூண்டிவிடும் பிரபஞ்சத்தில் நிலை கொண்டிருக்கும் தீய சக்திகளின் எண்ண அலைகள் இவர்களின் வெளி மனதை ஆக்கிரமித்தல், அல்லது இவர்களின் உறவுகள், அல்லது நட்பின் காரணமாக இருக்கலாம்!

இது போன்ற கணநேரச் சிந்தனைத் தடுமாற்றத்தில் நிகழும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் மனம் திருந்தி வாழக்கூடியவையாக அமைய வேண்டும்!

பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கும் இக்குற்றம் ஏற்பட அமைந்த சூழல் நன்கு விளக்கப்பட்டு அவர்களும் குற்றவாளிக்கு எதிரான மனநிலையினைக் கைவிட்டு, கடுமையான தண்டனையைக் குற்றவாளிக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுமாறு செய்ய வேண்டும்!

திட்டமிட்ட கொலைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன்! இதுபோன்ற குற்றவாளிகளைத் தண்டிப்பது அவர்களின் தேகத்தை தண்டித்து அவர்களின் உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் நியாயமானதாகலாம்!

இதனால் அவர்களின் தேகத்திற்கு தண்டனை தரப்படுகிறதே தவிர அவர்களின் உயிருக்கு தண்டனை வழங்கப்படவில்லை! அவர்களின் கொலைவெறி உணர்வு தணியாமலே மரண தண்டனை வாயிலாக அவர்களின் உயிர் உடலை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யப்படுவதால் அவர்களின் அடுத்த பிறவியும் இதே குணநலன்களுடனே அமையும்! இதனால் உலகில் தொடர்ந்து தீய உயிர்களின் ஆதிக்கமே தொடர நாம் வழி வகுப்பதாக அமைந்துவிடும்!

எனவே இத்தகைய குற்றவாளிகளை ஒரு மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் பணி செய்யுமாறு உத்தரவிட வேண்டும்! விபத்தாலோ அல்லது இவர்களைப் போன்ற சமூகக் குற்றவாளிகளின் செயல்களாலோ, கைகால்கள் இழந்து, கத்திக்குத்துப்பட்டு, வெட்டுப்பட்டு தீக்காயம்பட்டு வருகின்ற நோயாளிகள் படும் வேதனைகளைத் தினசரி அணுஅணுவாகக் கண்டு இவர்கள் மனம் கலங்கித்  துடிக்கவேண்டும்!

கல்நெஞ்சம் படைத்தவரையும் கரைய வைக்கக் கூடியதாக இத்தகு விசித்திர தண்டனையை அனுபவித்து அவர்கள் தங்கள் செயலுக்கு மனம் வருந்தி திருந்தி வாழும் நிலை உருவாவதுடன் அவர்களுக்குரிய தண்டனைக் காலம் முழுவதும் இதுபோன்ற நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து கழிக்கும்படிச் செய்வதே சிறந்த வழி முறையாகவும் அவர்கள் செய்த பாவத்திற்குப் பரிகாரமாகவும் அமையும்!

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கும் இத்தகையதுதான்! ஊழல் செய்து விட்டு அடிக்கடி ஆட்சிமாறி மாறி மாறி சிறை தண்டனை பெறும் இன்றைய அரசியல்வாதிகளால் வளர்த்து விடப்பட்ட வன்முறை குணத்திற்கு அடிமையானவர்கள்தான் தூக்குத்தண்டனை பெற்று இன்று கருணை மனுவிற்கு ஏங்கி நிற்கும் அவலத்திற்கு உட்பட்டு தங்களின் குடும்ப உறவுகளையும் தவிக்கவிட்டு நிற்கும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளனர்!

தங்கள் அரசியல் தலைவியின் கைதிற்கு தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக நினைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட இதுபோன்ற சாதாரணத் தொண்டர்கள் உட்பட உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு எப்பொழுதும் ஆட்படாதவர்களாகத்தான் விளங்கி வருகின்றனர்! உலகில் அமைதியையும் சமாதானத்தையும் குலைப்பதற்காகச் செயல்பட்டுவரும் தீய பிரபஞ்ச சக்திகளின் எண்ணங்கள் உலகெங்கும் நிறைந்திருக்கின்றன!
அதே சமயம் உலகில் அமைதியையும் அகிம்சையையும் செயல்படுத்தி உலகை அமைதிப் பூங்கவாக விளங்க வைக்கத் துடிக்கும் நல்ல சக்திகளின் எண்ணங்களும் இதுபோன்றே ஏராளமாக உலகெங்கும் நிறைந்திருக்கின்றன!

தர்மபுரிப் பேருந்து எரிப்பு சம்பவம் இது போன்ற தீய சக்திகளின் தூண்டல்கள் காரணமாக நிகழ்ந்தவைதாம். குற்றவாளிகள் ஒரு நிமிடம் தங்களின் செயல் நியாயமானதுதானா. இதன் பின் விளைவுகள் எத்தகையதாக இருக்கும், பேருந்தில் அகப்பட்டுத் தவிக்கும் மாணவியரில் தங்கள் உறவு எவரேனும் இருக்க நேரிட்டால் அவர்களைக் கொன்ற பாவமும் பழியும் தங்களைத்தானே வந்தடையும்

தாம் குற்றவாளிகள் என உலகோர் அறிய நேரிட்டு, தாம் கைது செய்யப்பட்டால் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகிவிடுமே, கொலைகாரக் குடும்பம் என்ற அவப்பெயர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டு அவர்கள் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க இயலாத நிலை ஏற்படுமே என்பன போன்ற சிந்தனைகளைத் தம்முள் ஓட அனுமதித்திருந்தால் நிச்சயம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இன்று கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு நிராகரிப்பட்டு உச்ச வாய்மை மன்றத்தில் தங்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என கெஞ்சிக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

எவர்களுக்காக இவர்கள் உணர்ச்சிவயப்பட்டு இந்த படுபாதகச்செயல்களில் ஈடுபட்டார்களோ அவர்கள் தங்களின் அரசியல் வாழ்க்கையை வெகு உல்லாசமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களோ கடும் சிறைவாசத்தில் தங்களின் இளமையினைத் தொலைத்துவிட்டு, வளர்ந்து நிற்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகளுடன் தங்களின் இறுதி நாளை எண்ணி எண்ணி மனம் கலங்கித் தவிக்கின்றனர்.

பேருந்து எரிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்களின் வெறுப்பு மன நிலையினை இந்த வழக்கிற்கு எடுத்துக்கொண்ட நீண்ட வருடங்கள் ஓரளவு குறைத்திருக்க வாய்ப்பிருக்கலாம். எனினும் அவர்களும் மனிதர்கள்தானே! தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிச் சராசரி மனிதர்கள் போலத்தானே ஆத்திரம் கொண்டிருப்பர்.

எனினும் அவர்களுக்குள்ளும் தாய்மை உணர்வு இன்னும் தொலையாதிருக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்!

இது வள்ளுவம் வாக்கு! பேருந்து எரிப்பில் உயிரிழந்த மாணவியரின் ஊழ்வினைதாம் எத்தனையோ வாகனங்கள் அங்கு சென்றிருக்க இவர்களின் வாகனம் மட்டும் தீயிடப்படக் காரணமாயிற்றோ என்ற அச்சமும் வள்ளுவம் சுட்டும் ஊழ்வினையின்படி எழுகிறது.

மாணவியரின் பெற்றோர் மனது வைத்து குற்றவாளிகளின் பிள்ளைகளாவது தங்களின் மன்னிப்பு குணத்தால் மறுவாழ்வு பெறட்டும் என விட்டுக்கொடுத்து அவர்களின் வாழ்வு தொடர வழி காணச் செய்யலாம்.

வாய்மை மன்ற வளாகத்தில் குற்றவாளிகளின் பிள்ளைகள் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்களைச் சந்தித்து தங்களின் தந்தையர்களின் செயலை மன்னித்து தங்களின் வாழ்வு தொடர உதவுங்கள் எனக் கண்ணீர்விட்டு மன்றாடினால் ஒரு வேளை மாணவியரின் பெற்றோர்கள் தங்களின் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடும்.

நம் தமிழருக்குள்ள தலை சிறந்த குணங்களில் தலையாயது இரக்கமும் மன்னிக்கும் குணமும்தாம். மாணவியரின் பெற்றோர்களுக்குள் உள்ள தாய்மை உணர்வு ஒருவேளை இவர்களின் செயலை மன்னித்து இவர்களின் மரண தண்டனையைக் குறைத்து மாற்று தண்டனை கொடுக்க வாய்மை மன்றத்தில் ஒப்புதல் தரலாம்.

அப்படி நிகழ்ந்தால்

“தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுன்டு!

அமிழ்தம் அவர்தம் மொழியாகும்
அன்பே அவர்தம் வழியாகும்”

என்ற கவியின் வாக்கு இந்தப்புவி உள்ளவரை பிரபஞ்சமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்குமென்பதில்  எமக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை!

Read More...

தமிழ் ஈழம்

Leave a Comment
தமிழ் ஈழம்
2014 நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படையத் துவங்கிவிட்டது. தமிழகத்தில் சுயேச்சைகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஏழு முனைப்போட்டி துவங்கிவிட்டதெனலாம்.

தேர்தல் களத்தில் உள்ள அத்துணை இயக்கங்களும் தாங்கள் வெற்றி பெற்றால் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம் என முழங்கி வருகின்றனர்.

தங்களை இலங்கை மக்களின் ஆதரவாளர்கள் எனப் போட்டி போட்டுக்கொண்டு முழங்கிவரும் இந்த இயக்கங்களின் ஒரு செயலை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனக் கருதுகிறோம்.

முள்ளி வாய்க்கால் படுகொலைகள் உள்ளிட்ட ஏராளமான போர்க் குற்றங்கள் நிறைந்த இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான கடுமையான இறுதிக்கட்டப் போர் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது தமிழகத்தில் அப்போது சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
போர் நிகழ்வுகள் உலகிற்கு வெளிவரத் துவங்கியவுடன் இந்த இயக்கங்கள் முதலைக்கண்ணீர் வடிக்கத்துவங்கி அதைத் தங்களின் பரப்புரைகளில் வெளிப்படுத்தின.

சில இயக்கங்கள் மத்திய அரசை எதிர்த்து பரப்புரை செய்தன. சில இயக்கங்கள் மவுனம் காத்தன. எனினும் தங்களைத் தமிழீழ ஆதவாளர்களாகக் காட்டிக்கொள்வதில் எந்த அணியும், இயக்கங்களும் பின்வாங்கவே இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் நடக்கவே இல்லை. 

எந்த இயக்கமும் இலங்கைப் படுகொலைகளைக் கண்டித்து தாங்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம், ஈழத்தமிழர்களின் படுகொலைகளை விட இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை எனத் துணிந்தும் ஈழ மக்களின் வேதனையில் பங்கெடுத்து அப்போதய தேர்தலைப் புறக்கணிக்கவோ தங்களின் வேட்பாளர்களை திரும்பப் பெறவோ முன்வரவே இல்லை.

ஒரு பக்கம் முதலைக்கண்ணீர் வடித்தவண்ணம் மறுபக்கம் ஓட்டுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த இந்த அரசியல் இயக்கங்களின் நிலையை நம் உண்மையான தமிழின உணர்வாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்.

இந்த தேர்தலிலும் இவர்களின் பரப்புரைகள் தொடர்கிறது. இவர்களின் முதலைக்கண்ணீர் தமிழக மக்களின் வாக்கு வங்கியை வளைக்குமா அல்லது மக்கள் இவர்களின் சுயநலத்தை உணர்ந்து இவர்களைப் புறக்கணிப்பார்களா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரிய வரும்!

இவர்களைப் போல இலங்கையின் ஆட்சியாளர்களை திட்டித் தீர்த்து பலனேதும் வரப் போவதில்லை. போர்க்குற்றம் செய்தவர்களைப் பெரும்பான்மைச் சிங்களரிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்போம்.

இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்கள் பின்பற்றும் புத்தர் காட்டிய அன்பு வழியில் தமிழர்கள் மீதும் அம் மக்கள் அன்பு செழுத்தும் வழிகள் காண்போம்.

இரு இனங்களும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு பாரதத்திலுள்ளது போன்று இரு மாநிலங்களாக தனித்தனி எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழவும், இந்த மாநிலத்திலுள்ளவர்கள் அஙகும் அஙகுள்ளவர்கள் இங்கும் சுதந்திரமாகப் பயணித்தும், விருப்பமுள்ளவர்கள் எங்கு வேண்டுமானாலும் குடித்தனம் அமைத்துக்கொண்டு வாழவும், வழி காண்போம்.

இரு இனங்களுமே இனி சேர்ந்து வாழவே வழியில்லை என்ற நிலை வருமானால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வந்து குவியும் ஏராளமான வேற்று மொழி இனத்தாருக்கு இடமிருக்கும்போது இவர்களுக்குமா இடமின்றிப்போகும்?

தமிழர்களின் இன உணர்வினைப் புரிந்துகொள்ளும் பக்குவம் படைத்த மைய அரசின் துணை கொண்டு தமிழகத்தில் ஈழ மக்களுக்கென வாழிடங்கள் அமைத்துக் கொடுத்து அவர்கள் இலங்கையில் செய்து வந்த தொழில்களையே இங்கும் தொடரவும், மாற்றுத் தொழில்கள் ஏற்படுத்தித்தரவும் வழி காணப்பட வேண்டும்.

தமிழக மக்கள் இவர்களை அகதிகள் என அழைக்காமல் இவர்களும் நம் இனம்தான் நம் இரத்தம்தான் என்ற உணர்வுடன் அரவணைத்து அவர்களின் வாழ்வு நிம்மதியாகத் தமிழகத்தில் தொடர வழி காணவேண்டும்.

இன உணர்வாளர்கள் எனத் தங்களைப் பறை சாற்றிக்கொண்டு கூச்சல் இடும் வாக்கு வங்கி அரசியல்வாதிகள் எங்கே தங்களின் வாக்கு வங்கிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் இன்றுள்ள நிலையிலிருந்து நாளை மாறிக்கூட இந்தக் கருத்தை எதிர்க்க முற்படலாம்.

வரலாறு துவங்கிய காலம் முதல் இலங்கையில் வாழும் தமிழினம் அங்கு நித்த நித்தம் செத்து வாழும் நிலை ஒரு முடிவிற்கு வர இதைத்தவிர வேறு வழி எமக்குத் தோன்றவில்லை.

வாக்கு வங்கிக்கொனவே இலங்கைப்பிரச்சினையை ஊதி ஊதிப் பெரிதாக்கும் தமிழக இயக்கங்கள் மனம் மாற வேண்டும். ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழத் தமிழக மக்களும் அவர்களை வரவேற்று வாழ வைக்க முன்வர வேண்டும் என்பதே இனி தமிழீழச் சிக்கல்களுக்கு ஒரே நிரந்தரத் தீர்வு!

Read More...

இயற்கை விதி!

Leave a Comment
இயற்கை விதி!

பொதுவாக இயற்கை என்பது ஐந்து பூதங்களால் ஆளப்படுவதாக பக்தி மார்க்கம் கூறுகிறது! நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு எனப்படுவையே இவை! இதில் முதல் நான்கும் இயற்கையாக அமைந்தவை!

ஆயின் ஐந்தாவதான நெருப்பு பகலவனிடமிருந்துதான் வருகிறது! பூமிப்பந்தில் விழும் கடும் வெயிலில் நன்கு காய்ந்த சருகுகள் சில நேரங்களில் தாமாகவே பற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு! இது தவிர காய்ந்த இரண்டு மரக்கிளைகள் உராய்வதால் தீ ஏற்படுகிறது!  மேலும் ஆகாயத்தில் இரண்டு நீர் சுமந்த மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்போது உருவாகும் இடியானது நிலத்திடை வரும்போது அதில் உள்ள வெப்ப ஆற்றல் தீயாக உருவாகிறது!

தமிழகத்தில் தோன்றிய சித்தர்கள் பக்தி மார்க்கம் கடைப்பிடித்த யாக முறைகளை எதிர்த்தவர்கள்! அதிலும் குறிப்பாக யாக குண்டங்கள் உருவாக்கி தீ வளர்த்து அதில் மனித உழைப்பில் உருவான பொருட்களை இட்டு வீணாக்குவதை கடுமையாக எதிர்த்தவர்கள்! இது போன்ற யாகங்களால் பயனேதுமில்லை என முற்றிலும் உணர்ந்த ஞானிகள் அவர்கள்!

பகலவனுக்குக் கீழ் உள்ள உயிர்கள் அனைத்தும் அதைச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளதால் இது போன்ற இயற்கைக்கு மாறான யாகங்கள் தேவையற்றது என்பதுதாம் சித்தர்களின் வாதம்!

இயற்கை விதியென்பது உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் அதனதன் கடமையைச் செய்து அதற்கேற்ற பலனை அனுபவித்து வரவேண்டும் என்பதுதான்!

நிலமானது தன்னில் வளரும் உயிர்களுக்குத் தேவையான சகலவிதமான வசதிகளைச் செய்து தரும் வகையில் அமைந்தது! அதில் வளரும் தாவரங்கள் வளர்ந்து ஆளாகி அதனது முழுமையான பயனையும் தான் அனுபவிக்காமல் அதைச் சார்ந்த வேறு உயிர்கள் அனுபவிக்கவே உருவானது!

ஒரு இலை காய்ந்து நிலத்திடை வீழ்ந்தால் அது மக்கி வேறு ஒரு தாவரம் வளர உரமாகிறது! இவ்வாறுதான் தாவரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ அமைந்தவை!

மனித இனம் தவிர்த்த உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும் இதே போன்றுதான் தத்தம் கடமையைச் செய்வதற்கேற்பப் பலனடையும் வகையில் இயற்கையே ஏராளமான வசதிகளை உருவாக்கித் தம்முள் வைத்துக்கொண்டது! தேனீக்களுக்கு பூவில் தேனையும், அந்த பூ சார்ந்த தாவரம் பல்கிப் பரவ மகரந்தமும் இயற்கை தாமாகவே உருவாக்கிக்கொண்டது! பூவின மகரந்தம் பரவ வண்டுகள் உருவாகின!
அது போன்று தாவரங்கள் பல்கிப் பரவ பறவைகள் உருவாகின! தாவர விதைகளை உண்ட பறவைகள் உலகெங்கும் பறந்து சென்று வனங்கள் பெருக உருவானவை!

காற்றானது சூரியனால் வெப்பமாக்கப்பட்டு ஆவியாகும் கடல் நீரை மேகமாக்கி அதைச் சுமந்துசென்று மலையிடை சேர்க்கின்றது! மலையில் உருவான மரங்கள் தங்களது அடர்த்தியால் மழைவளம் பெருக்கும் கடமையைச் செய்கிறது!

மலையிலிருந்து நிலத்திடை அடையும் நீரானது ஆறாகப் பயணம் செய்து தான் செல்லும் இடத்திலுள்ள உயிர்களையும் பயிர்களையும் காக்கும் கடமையை ஏற்கிறது! ஆற்று நீர், தான் சேமித்து வைக்கப்படும் இடங்களான ஏரி குளம் ஓடை இவைகளில் வாழும் உயிரினங்களுக்கானது! இங்கு வாழ உருவான உயிரினங்கள் நிலத்திலிருந்து வரும் நீரில் கலந்துள்ள மாசுகள் எனப்படும் அழுக்கினை உண்டு சுத்தப்படுத்தித் தாம் வாழும் நீர்வளத்தைத் தூய்மையாகப் பாதுகாத்து காப்பாற்றி வர உருவானவை!

ஆறுகள் சென்று சங்கமமாகும் இடம் கடல்! இந்தக் கடலில் உள்ள நீர் சர்க்கரை தயாரிப்பவர்கள் அதைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் கெமிக்கல் போன்றது!

இதனுடன் இணைந்து அங்கு வாழும் உயிரினங்கள் நிலத்தில் உருவாகிக் கடலில் சேரும் நீரிலும் சுத்தப்படுத்தபட இயலாத அழுக்குகளை உண்டு சுத்தம் செய்து வாழும் கடமையைச் செய்வதற்கே உருவானவை!

இது போன்ற உயிரினங்கள் தங்களது கடமையைச் செய்வதற்கேற்ற உணவையும் இயற்கையே உருவாக்கிக்கொண்டது!

புலிக்கு மானையும், பறவைக்கு புழு இனங்களையும், யானைக்குத் தாவரங்களும், என ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொருவிதமான உணவை இயற்கை உருவாக்கி வைத்தது.

இந்த இயற்கை விதி இன்றுள்ள மனித இனத்தால் முற்றிலும்
சூறையாடப்பட்டுவிட்டது! இதை விளக்கமாக எழுத வேண்டிய அவசியமும் இல்லை! எல்லாம் தெரிந்துதான் மனித இனம் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டு வருந்தி வருகிறது! இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைக்கு மாறுவதை தவிர இதற்கு வேறு வழியுமில்லை என்பதுதான் இதற்கான பதிலென்பது இளைய தலைமுறைக்கு சரியாக சென்றடைய வேண்டும்!

எனினும் இயற்கை விதிகளை முழுமையாக அறிந்தவர்கள் தமிழர்கள் மட்டுமே! அதனால்தான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளை தமிழர்கள் தம் கடமையாக அறிவு தோன்றிய காலம் முதல் கடைபிடித்து வந்தனர்! இயற்கையான உணவு முறைகளை அறுசுவையென உண்டு வாழ்ந்த தமிழினம் உயிரினங்களை கொன்று தின்று வாழும் இன்றுள்ள நிலைக்கு ஆளாக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும்!

வள்ளுவமும் கொல்லாமையை அறிவுறுத்தியுள்ளது! ஆனால் இன்றுள்ள தமிழர்கள் அதை முழுமையாக பக்தியறிவில் தொலைத்துவிட்டனர்! இல்லையில்லை நாங்கள் பக்தியறிவில் சிறந்துதான் விளங்குகிறோம் என்ற பக்தியாளர் ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்!

அவரிடம் இந்த ஒரு கருத்திற்கே சரியான பதில் சொல்ல முடியாது! அன்பே சிவம் என்பது பக்தி நெறி! ஆனால் கடவுள் பக்தியில் திலைக்கும் ஏராள தமிழர்கள் அசைவ உணவு பழக்கத்தில் திலைப்பவர்கள்!

இதை கருத்தில் நோக்கும்போது அன்பு செழுத்துவதென்பது மனிதர்களுக்குள் மட்டும்தான் என்ற தவறான கருத்துக்குள் அவர்கள் புகுத்தப்பட்டுவிட்டனர் என்பது தெளிவாகிறது! பிறப்பால் உருவான சொந்தங்களிடமே அன்பை வெளிப்படுத்தாத மனித இனம் சாதிமத உணர்வுகளால் பிரிந்து தங்களுக்குள் அடித்துக்கொண்டு நிம்மதியின்றி இன்று தவிக்கிறது!

வள்ளுவர் கொல்லாமையை வலியுறுத்தும் பாடலில் கூட கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர்களை உயிர்கள் தொழும் என அறிவுறுத்துகிறார்! வள்ளுவம் எங்கள் பொதுமறை என முழங்கும் தமிழினம் இந்த கருத்தை தலைமுழுகிவிட்டதாக தோன்றுகிறதே!

கிறித்துவர்கள் உலகில் படைக்கப்பட்ட எல்லாமே மனிதர்களுக்காகத்தான் என்ற உறுதியான கொள்கையை உடையவர்கள்! எனவே உயிர்க் கொலையை ஆதரிக்கும் தமிழக பக்தியாளர்கள் கிறித்தவத்தை ஏற்றவர்களாகிறார்கள்! வள்ளலாரைப் போற்றும் தமிழினமே இப்பொழுது சொல் நீ எந்த மதமென!

Read More...

பேரணிகள்!

Leave a Comment
பேரணிகள்!
ஐந்தாம் தமிழ்சங்க வாய்மையே வெல்லும் இயக்க ஆட்சி காலத்தில் நடைபெறப்போகும் பேரணிகள் இனி இப்படித்தான் இருக்கும்!

நம் மக்களிடம் நிலவும் தவறான பழக்க வழக்கங்களை களைவதற்கு ஆட்சியாளர்கள் மாணவ சமுதாயத்தை பயன்படுத்திக் கொள்வதை நாம் பல முறை காண்பதுண்டு!

வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களை விழிப்புணர்வுப் பேரணி என்ற பெயரில் நீண்ட தொலைவு கடும் வெயிலில் பதாகைகள் ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் செல்ல வைத்து வதைப்பதை ஏற்புடையதாக அறிவுடையோர் கருதக்கூடாது!

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என முழக்கமிடும் இதே அரசுகள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குடிபோதை, சுற்றுச்சூழல் மாசுபடுதல், முறை தவறிய வாழ்க்கை முறையால் வாங்கும் எயிட்சு வியாதிகள், போக்குவரத்து விழிப்புணர்வு போன்ற பேரணிகளை முற்றிலும் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தி இனி வரும் காலங்களில் நடத்தக்கூடாதென உச்ச வாய்மை மன்றத்தால் தடை ஆணை ஒன்று நிரந்தரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்!

இது போன்ற பேரணிகளால் சமுதாயத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது அறிவிற்கு எட்டியவரை தெரியவில்லை! பேரணிகளில் கலந்து கொண்டு வாடி வதங்கிச் செல்லும் மாணவ மணிகளைப் பார்க்கும்போது எம்முள் வேதனை உணர்வுகள் ஊற்றெடுக்கும்!

அதே சமயம் சமுதாயத்தில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படுத்த மாணவ சமுதாயம் பங்கேற்காத முற்றிலும் மாறுபட்ட விழிப்புணர்வுப் பேரணிகள் கட்டாயம் நடைபெறத்தான் வேண்டும்!

இதற்கு முதற்கண் இது போன்ற பேரணிகளைப் பொதுமக்களுக்கு தொல்லைகள் அற்ற நாளான ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து நடத்தலாம்! உலகமெங்கும் சில குறிப்பிட்ட தினங்களை இதற்கெனப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தாலும் நாம் நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி நிலையை கவனத்தில் கொண்டு நம்முடைய வசதிக்கேற்ப விடுமுறை நாளில் நடைமுறைப்படுத்துவதால் தவறேதுமில்லை!

பரபரப்பான வேலை நாட்களில் இது போன்ற பேரணிகளைச் சந்தித்து போக்குவரத்து அல்லல்களில் சிக்கி அவலப்பட நேரிடும் மக்களின் எரிச்சல் நிலை இதனால் முற்றிலும் மாற்றியமைக்கப்படும்! அது மட்டுமன்றி விடுமுறை நாட்களில் அமைதியான சூழலில் நல்ல மன நிலையுடன் இருக்கும் மக்களிடம்தான் விழிப்புணர்வுப் பேரணிகள் தரும் நல்ல செய்திகள் சென்றடையும்!

எனவே இனி வரும் பேரணிகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும்!

முதலாவதாக குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும், அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் தொழிற்கூட உரிமையாளர்களையும் (அவர்கள் எப்படிப்பட்ட செல்வந்தராக இருந்தாலும்) ஊர்தோறும், மாவட்டம்தோறும் தேடிப்பிடித்து இனி குழந்தைத் தொழிலாளர் முறையை உருவாக்க மாட்டோம் எனப் பேரணியாக நடத்தி முழக்கமிட்டு செல்ல வைக்க வேண்டும்!

இரண்டாவதாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைப் பிடித்துவந்து, அவர்களை  அடிக்கடி இது போன்று பேரணியில் கலந்து கொள்ளச்  செய்து இனி போக்குவரத்து விதிகளை மீறமாட்டேன் என முழக்கமிட வைக்கவேண்டும்! அது மட்டுமன்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையிலும் இவர்களைச் சில நாட்கள் கட்டாயம் பணியாற்றச் செய்ய வேண்டும்!

அடுத்ததாகக் கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்பி தூய்மையாக இருக்காதவர்கள், சாக்கடைகளில் குப்பைகள் போடுபவர்களைப் பேரணியில் நடக்க வைத்து இனி இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடமாட்டோம் என முழக்கமிடச் செய்ய வைப்பதோடு மட்டுமன்றி இதுபோன்றவர்களைப் பேருந்து நிலைய அவலங்களையும் அவர்கள் தூய்மைக் கேடு செய்த இடங்களைத் தூய்மை  செய்யும் பணியைச் செய்ய வேண்டுமென்பது கூடுதலான தண்டனையாக்க வேண்டும்!

மேலும் குடி மற்றும் புகையால் தம் வாழ்வு மட்டுமன்றி தம்மைச் சார்ந்தவர்களையும் வதைக்கும் குற்றவாளிகளை இது போன்ற தவறுகளில் இனி ஈடுபட மாட்டோம் எனச் சற்று அதிகப்படியான தொலைவிற்கு பேரணியில் நடக்கவைக்க வேண்டும்! தம்முடைய போதைப் பழக்கத் தவறுகளால் பலவீனமாகிய உடல் வேதனையுடன் மூச்சு வாங்க நடந்து களைக்கும் இவர்களை, பேரணியின் முடிவில் ஒரு திடலில் அல்லது மண்டபத்தில் கூடவைத்து இது போன்ற தீமைகளால் விளையும் கேடுகளை விரிவாகக் காட்டும் திரைப்படங்களின் வாயிலாக திருத்த வேண்டும்!

வெகு வேகமாக பரவி வரும் எயிட்சு போன்ற வியாதிகளைப் பரப்பும் சமுதாய குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களையும் பேரணியாக சென்று களைத்தபின் எயிட்சு நோய்க்கு ஆளானவர்களின் கதியை நேரில் கண்டு மனம் திருந்துமாறு செய்ய வழி காட்ட வேண்டும்!

ஆக சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற முறைகேடுகள் சார்ந்த செயல்களை உண்மையான விழிப்புணர்வு தருகின்ற எனது கருத்தில் உருவாகும் இது போன்ற பேரணிகளால் மட்டுமே சீர்திருத்த முடியும்!

இறுதியாக மக்களை தவறாக வழி நடத்தும் அரசியல்வாதிகளை இது போன்ற செய்கைகளில் இனி ஒருக்காலும் ஈடுபடமாட்டோம் என பேரணியாக முழங்கி செல்ல வைத்தால் அது மாணவ சக்திகளை தவறாக வழி நடத்தும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு சரியான பாடமாக இருக்கும் என்பதே எமது நனவாகப்போகும் கனவு!

மனித சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் குற்றங்களையும் தீமைகளையும் களைய இது போன்ற முற்போக்கான சிந்தனைகளை செயல்படுத்தும் இயக்கமாக ஐந்தாம் தமிழ்ச்சங்கம் விளங்க வேண்டும்!


ஆகவே இதை படிக்கும் மாணவ மணிகள் இனி வரும் காலத்தில் தம்மை இதுபோன்று வாட்டி வதைக்கும் பேரணிகளில் கலந்து கொண்டு தம்முடைய பொன்னான படிக்கும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என நிச்சயம் நாம் நம்புவோம்!
Read More...