இயற்கை விதி!

இயற்கை விதி!

பொதுவாக இயற்கை என்பது ஐந்து பூதங்களால் ஆளப்படுவதாக பக்தி மார்க்கம் கூறுகிறது! நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு எனப்படுவையே இவை! இதில் முதல் நான்கும் இயற்கையாக அமைந்தவை!

ஆயின் ஐந்தாவதான நெருப்பு பகலவனிடமிருந்துதான் வருகிறது! பூமிப்பந்தில் விழும் கடும் வெயிலில் நன்கு காய்ந்த சருகுகள் சில நேரங்களில் தாமாகவே பற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு! இது தவிர காய்ந்த இரண்டு மரக்கிளைகள் உராய்வதால் தீ ஏற்படுகிறது!  மேலும் ஆகாயத்தில் இரண்டு நீர் சுமந்த மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்போது உருவாகும் இடியானது நிலத்திடை வரும்போது அதில் உள்ள வெப்ப ஆற்றல் தீயாக உருவாகிறது!

தமிழகத்தில் தோன்றிய சித்தர்கள் பக்தி மார்க்கம் கடைப்பிடித்த யாக முறைகளை எதிர்த்தவர்கள்! அதிலும் குறிப்பாக யாக குண்டங்கள் உருவாக்கி தீ வளர்த்து அதில் மனித உழைப்பில் உருவான பொருட்களை இட்டு வீணாக்குவதை கடுமையாக எதிர்த்தவர்கள்! இது போன்ற யாகங்களால் பயனேதுமில்லை என முற்றிலும் உணர்ந்த ஞானிகள் அவர்கள்!

பகலவனுக்குக் கீழ் உள்ள உயிர்கள் அனைத்தும் அதைச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளதால் இது போன்ற இயற்கைக்கு மாறான யாகங்கள் தேவையற்றது என்பதுதாம் சித்தர்களின் வாதம்!

இயற்கை விதியென்பது உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் அதனதன் கடமையைச் செய்து அதற்கேற்ற பலனை அனுபவித்து வரவேண்டும் என்பதுதான்!

நிலமானது தன்னில் வளரும் உயிர்களுக்குத் தேவையான சகலவிதமான வசதிகளைச் செய்து தரும் வகையில் அமைந்தது! அதில் வளரும் தாவரங்கள் வளர்ந்து ஆளாகி அதனது முழுமையான பயனையும் தான் அனுபவிக்காமல் அதைச் சார்ந்த வேறு உயிர்கள் அனுபவிக்கவே உருவானது!

ஒரு இலை காய்ந்து நிலத்திடை வீழ்ந்தால் அது மக்கி வேறு ஒரு தாவரம் வளர உரமாகிறது! இவ்வாறுதான் தாவரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ அமைந்தவை!

மனித இனம் தவிர்த்த உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும் இதே போன்றுதான் தத்தம் கடமையைச் செய்வதற்கேற்பப் பலனடையும் வகையில் இயற்கையே ஏராளமான வசதிகளை உருவாக்கித் தம்முள் வைத்துக்கொண்டது! தேனீக்களுக்கு பூவில் தேனையும், அந்த பூ சார்ந்த தாவரம் பல்கிப் பரவ மகரந்தமும் இயற்கை தாமாகவே உருவாக்கிக்கொண்டது! பூவின மகரந்தம் பரவ வண்டுகள் உருவாகின!
அது போன்று தாவரங்கள் பல்கிப் பரவ பறவைகள் உருவாகின! தாவர விதைகளை உண்ட பறவைகள் உலகெங்கும் பறந்து சென்று வனங்கள் பெருக உருவானவை!

காற்றானது சூரியனால் வெப்பமாக்கப்பட்டு ஆவியாகும் கடல் நீரை மேகமாக்கி அதைச் சுமந்துசென்று மலையிடை சேர்க்கின்றது! மலையில் உருவான மரங்கள் தங்களது அடர்த்தியால் மழைவளம் பெருக்கும் கடமையைச் செய்கிறது!

மலையிலிருந்து நிலத்திடை அடையும் நீரானது ஆறாகப் பயணம் செய்து தான் செல்லும் இடத்திலுள்ள உயிர்களையும் பயிர்களையும் காக்கும் கடமையை ஏற்கிறது! ஆற்று நீர், தான் சேமித்து வைக்கப்படும் இடங்களான ஏரி குளம் ஓடை இவைகளில் வாழும் உயிரினங்களுக்கானது! இங்கு வாழ உருவான உயிரினங்கள் நிலத்திலிருந்து வரும் நீரில் கலந்துள்ள மாசுகள் எனப்படும் அழுக்கினை உண்டு சுத்தப்படுத்தித் தாம் வாழும் நீர்வளத்தைத் தூய்மையாகப் பாதுகாத்து காப்பாற்றி வர உருவானவை!

ஆறுகள் சென்று சங்கமமாகும் இடம் கடல்! இந்தக் கடலில் உள்ள நீர் சர்க்கரை தயாரிப்பவர்கள் அதைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் கெமிக்கல் போன்றது!

இதனுடன் இணைந்து அங்கு வாழும் உயிரினங்கள் நிலத்தில் உருவாகிக் கடலில் சேரும் நீரிலும் சுத்தப்படுத்தபட இயலாத அழுக்குகளை உண்டு சுத்தம் செய்து வாழும் கடமையைச் செய்வதற்கே உருவானவை!

இது போன்ற உயிரினங்கள் தங்களது கடமையைச் செய்வதற்கேற்ற உணவையும் இயற்கையே உருவாக்கிக்கொண்டது!

புலிக்கு மானையும், பறவைக்கு புழு இனங்களையும், யானைக்குத் தாவரங்களும், என ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொருவிதமான உணவை இயற்கை உருவாக்கி வைத்தது.

இந்த இயற்கை விதி இன்றுள்ள மனித இனத்தால் முற்றிலும்
சூறையாடப்பட்டுவிட்டது! இதை விளக்கமாக எழுத வேண்டிய அவசியமும் இல்லை! எல்லாம் தெரிந்துதான் மனித இனம் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டு வருந்தி வருகிறது! இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைக்கு மாறுவதை தவிர இதற்கு வேறு வழியுமில்லை என்பதுதான் இதற்கான பதிலென்பது இளைய தலைமுறைக்கு சரியாக சென்றடைய வேண்டும்!

எனினும் இயற்கை விதிகளை முழுமையாக அறிந்தவர்கள் தமிழர்கள் மட்டுமே! அதனால்தான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளை தமிழர்கள் தம் கடமையாக அறிவு தோன்றிய காலம் முதல் கடைபிடித்து வந்தனர்! இயற்கையான உணவு முறைகளை அறுசுவையென உண்டு வாழ்ந்த தமிழினம் உயிரினங்களை கொன்று தின்று வாழும் இன்றுள்ள நிலைக்கு ஆளாக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும்!

வள்ளுவமும் கொல்லாமையை அறிவுறுத்தியுள்ளது! ஆனால் இன்றுள்ள தமிழர்கள் அதை முழுமையாக பக்தியறிவில் தொலைத்துவிட்டனர்! இல்லையில்லை நாங்கள் பக்தியறிவில் சிறந்துதான் விளங்குகிறோம் என்ற பக்தியாளர் ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்!

அவரிடம் இந்த ஒரு கருத்திற்கே சரியான பதில் சொல்ல முடியாது! அன்பே சிவம் என்பது பக்தி நெறி! ஆனால் கடவுள் பக்தியில் திலைக்கும் ஏராள தமிழர்கள் அசைவ உணவு பழக்கத்தில் திலைப்பவர்கள்!

இதை கருத்தில் நோக்கும்போது அன்பு செழுத்துவதென்பது மனிதர்களுக்குள் மட்டும்தான் என்ற தவறான கருத்துக்குள் அவர்கள் புகுத்தப்பட்டுவிட்டனர் என்பது தெளிவாகிறது! பிறப்பால் உருவான சொந்தங்களிடமே அன்பை வெளிப்படுத்தாத மனித இனம் சாதிமத உணர்வுகளால் பிரிந்து தங்களுக்குள் அடித்துக்கொண்டு நிம்மதியின்றி இன்று தவிக்கிறது!

வள்ளுவர் கொல்லாமையை வலியுறுத்தும் பாடலில் கூட கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர்களை உயிர்கள் தொழும் என அறிவுறுத்துகிறார்! வள்ளுவம் எங்கள் பொதுமறை என முழங்கும் தமிழினம் இந்த கருத்தை தலைமுழுகிவிட்டதாக தோன்றுகிறதே!

கிறித்துவர்கள் உலகில் படைக்கப்பட்ட எல்லாமே மனிதர்களுக்காகத்தான் என்ற உறுதியான கொள்கையை உடையவர்கள்! எனவே உயிர்க் கொலையை ஆதரிக்கும் தமிழக பக்தியாளர்கள் கிறித்தவத்தை ஏற்றவர்களாகிறார்கள்! வள்ளலாரைப் போற்றும் தமிழினமே இப்பொழுது சொல் நீ எந்த மதமென!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!