சனி, 31 மே, 2014

அயோத்திப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!

Leave a Comment
அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் மத்தியில் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது திரு மோடி அரசு! 

அயோத்தியில் மீண்டும் பாபர் மசூதியும், புதிதாக இராமர் கோவிலும் அருகருகே கட்டப்படும் சுமுகமான நிலை உருவாகிறது என வைத்துக்கொள்வோம்!

இந்துக்களுக்கு ஆண்டு முழுவதும் ஏதேனுமொரு காரணத்திற்காகத் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்!

இசுலாமிர்களுக்கும் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு வழிபாடுகள் மாதந்தோறும் நடைபெறும். அது மட்டுமன்றி அவர்களின் தினசரி வழிபாட்டு வழக்கமாக ஐந்து வேளைகள் தொழுவதற்காக பாபர் மசூதிக்கு வருவர்!

இப்வாறான நிலையில் இரு வழிபாட்டுத் தலங்களும் அருகருகே அமைக்கப்பட்டால் இரு தரப்பாரில் தீவிர மதப் பற்றுள்ள எவரேனும் ஏதேனுமொரு அற்ப காரணத்திற்காகக் கலகத்தை ஏற்படுத்த முயலுவார்! 

இது பெரிய அளவில் பரவி நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாவதுடன், வருடம் முழுக்க அயோத்தி மீண்டும் மீண்டும் கலவர பூமியாகத்தான் மதவாத சக்திகள் உள்ளவரை இரத்தச் சகதியில் குளித்து நிலைத்திருக்கும். 

இதனால் முழுமையாகப் பாதிக்கப்படப்போகும் பரிதாபத்திற்குரியவர்கள் அயோத்தி மக்கள்தான்!

ஆனால் அதே சமயம் பிரச்சினைக்குரிய பகுதி முழுவதும் உச்ச வாய்மை மன்றத்தின் வசமாக்கப்பட்டு, அங்கு முதலாவதாக உலகத்தரம் வாய்ந்த அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையைக் கட்டலாம்! 

அடுத்து இரண்டாவதாக உலகத்தரம் வாய்ந்த ஆரம்பக் கல்வி தொடங்கிப் பட்டயக் கல்வி வரை பயிற்றுவிக்கக்கூடிய ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கலாம்! 

மூன்றாவதாக அயோத்தி மக்கள் அனைவருக்கும் திட்டமிட்ட கட்டமைப்புடன் ஊழலற்று நூறாண்டுகள் வாழத் தகுதியுள்ள நகரியமான ஒரு வீட்டுவசதி அமைப்பைக்  கட்டித் தரலாம்! 

இவ்வாறு செய்துவிட்டால் ஒரு சில ஆண்டுகளில் அயோத்தி மக்களிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேச மக்களிடமும் தொன்று தொட்டுத் தொடரும் கசப்பான மத வேறுபாடுகள் அடியோடு தொலைந்துவிடும்.

அயோத்தி மக்கள் நிம்மதியான சூழலில் நோயற்ற உடல்நலனை உயர் கல்வியோடு தங்களின் சொந்தக் குடியிருப்புகளில் அனுபவித்தவாறு வாழ்வு தொடர்வர்!. 

இந்த தேசத்திற்குத் தலைவலியாக ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடரப்போகும் ஒரு நிரந்தரப் பகையுணர்வுப் பிரச்சினை அடியோடு தொலைந்துவிடும். இதுவே ஐந்தாம் தமிழ்ச்சங்கம் தற்போதைய மத்திய அரசிற்கு வைக்கும் தாழ்மையான கோரிக்கை!

பாபராக இருந்தாலும் இராமராக இருந்தாலும்  அவர்கள் உண்மையிலேயே தத்தம் மதம் சார்ந்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென விரும்பினால்தான் அவர்கள் உண்மையில் பிரபஞ்சத்தைக் காக்கும் நல்ல சக்திகள்! 

மாறாக தங்களுக்கெனத் தனித்தனியே வழிபாட்டுத் தலங்கள் அமைத்து ஏற்படும் வன்முறைகளால் தங்கள் மக்கள் தொடர்ந்து இரத்தச் சகதியில் குளித்திருக்க விரும்பினால் அவர்கள் எத்தகைய சக்திகள் என்பதை அமைதியையும் சமாதானத்தையும் மட்டுமே விரும்பும் பெரும்பாலான மக்களின் முடிவிற்கே விட்டுவிடலாம்!

நாட்டு நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு உள்ளமாக இருப்பினும் நிச்சயம் இந்த நியாயமான கோரிக்கையை நிராகரிக்க மாட்டார்கள் என ஐந்தாம் தமிழ்ச்சங்கம் உறுதியாக நம்புகிறது!

Read More...

வெள்ளி, 30 மே, 2014

நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்!

Leave a Comment

தமிழகத்தில் அருவருக்கத்தக்க புதிய நாகரீகம் பரவி வருகிறது.

அரசியல் இயக்கத் துலைவர்கள், சாதித்தலைவர்கள், வன்முறை குணம் கொண்டவர்கள் எவரேனும் இறந்து விட்டால் உடனடியாகக் கடையடைப்பு நடத்தச் சொல்லி அவர்தம் ஆதரவாளர்கள் வற்புறுத்துகின்றனர்.

மறுத்தால் கடைகளை அடித்து உடைப்பது சொத்துக்களை நாசம் செய்வது மட்டுமின்றி மரங்களை வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தினைத் தடை செய்தல், பேருந்துகள், வாகனங்களைக் கல்வீசித் தாக்குதல், கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்குதல், தீ வைத்துக் கொளுத்துதல் என இவர்களின் வன்முறைப் பட்டியல் நீளும்!

சில நேரங்களில் தலைவர்களுக்கு உடல் நலக் குறைபாடு எனும் வதந்தி பரவினால்கூட மேற்கண்ட வன்முறைச் செயல்கள் அரங்கேறுகின்றன!

பூமிப்பந்தில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்கு எவரும் பிறப்பெடுத்து வருவதில்லை. அவரவர் உடல்வாகு மற்றும் வினைகளுக்கேற்ப இந்த பூமியில் சராசரியாக எழுபது வயது வரை மட்டுமே எவரும் வாழ இயலும்.

பொதுவாக வயதானவர்களுக்கு உடல் நலக் குறைவு அடிக்கடி வருவதென்பதுடன் மரணமும் வருவதென்பது உலக நியதி. இந்த நியதிக்கு எவருமே தப்ப இயலாது!

இதற்கெல்லாம் வன்முறை பரப்புவதென்பது எவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத குணமெனலாம்.

நம் தமிழக கிராமங்களில் இன்னும் பரவலாக வயதான ஒருவரின் இறப்பிற்குப் பின்னர் இதோ இது போன்ற சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் காணலாம்!

அவரவர் வசதிக்கேற்ப பூப்பல்லக்கில் அவரது சடலத்தை ஏற்றி மேளதாளம் முழங்க கிராமத்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சுமந்து சென்று தகனம் செய்யவோ புதைக்கவோ செய்வர்!

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கெனச் செல்லும் இதுபோன்ற இறுதி ஊர்வலங்களின் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் வெடி வெடித்தல் போன்றவைகள் தேவைதானா எனத்தான் அறிவுடையோர் எண்ணுவர்!

ஆயின் இந்த நிகழ்விற்கும் ஒரு அற்புதமான காரணம் உள்ளது!

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து பேரன் பேத்திகளின் திருமணக் காட்சிகளையும் கண்டவர்களைக் கிராமத்திலுள்ளவர்கள் அதி உன்னதமான வாழ்க்கை வாழ்ந்தவர்களாகத்தான் கருதுகின்றனர்.

இதற்கும் மேலாக இறந்தவர் ஊரில் நேர்மையாகவும் நல்ல குணத்துடனும் எவரிடமும் கெட்ட பெயர் எடுக்காமல் வாழ்ந்தவராக இருந்திருந்தால் இவரைப் போன்ற நல்லவர்களின் மரணம் கொண்டாடத்தக்கது என நம் முன்னோர்கள் கருதியிருக்க வேண்டும்!

எனவேதான் இது போன்ற நல்லவர்கள் மரணிப்பதில்லை. அவர்களின் உடல்தான் இந்த உலகை விட்டு நீங்குகிறதே தவிர அவர்களின் உயர்ந்த குணங்களும் எண்ணங்களும் இந்த உலகில் நிரந்தரமாகத் தங்கியுள்ளன. மேலும் இது போன்ற உத்தமர்களின் உயிர் மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் பிறப்பெடுத்து மனித குல உயர்வுக்குப் பயன்படுவர் எனக் கருதியும்தான் நம் முன்னோர்கள் இது போன்றவர்களின் மரணத்தைக் கொண்டாடியுள்ளனர்!

அதே சமயம் இளம் வயதுடையவர்களின் மரணத்தை நம்மவர்கள் கொண்டாடியதில்லை! அவர்களின் மரணத்தைத்தான் துக்ககரமானதெனக் கருதி அவர்களின் இறுதி ஊர்வலம் மௌனமாக நடைபெறும்!

ஆக நம் தமிழ் மண்ணின் மேன்மைக்காக உண்மையிலேயே எவரேனும் பாடுபட்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தம் இன்னுயிரை இந்த மண்ணில் ஈந்தால் இது போன்ற உன்னதமானவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நாம் வாழும் பெருமை பெற்றதற்காக அவரது மரணத்தை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டும்! அவர்களின் மரணம் வருந்தத்தக்கதல்ல! கொண்டாடத்தக்கது!

இது போன்ற நல்ல உயிர்கள் தாங்கிய உடல்கள் வேண்டுமானால் மண்ணில் புதைக்கப்படலாம். ஆனால் அவர்களின் உயிர்கள் விதைக்கப்படுகின்றன. அவை மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் பிறப்பெடுதது இந்த மண்ணின் மேன்மைக்காகப் பாடுபடப் போகின்றன.

எனவே இத்தகைய உயிர்கள் பிரபஞ்சப் பெருவெளியில் தங்கிவிடாமல் மீண்டும் இந்த மண்ணில் பிறப்பெடுக்க வேண்டுமெனத்தான் உலகத்தவர்கள் தங்களின் எண்ணங்களை இத்தகையவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவரிடம் வேண்டுதல்களாகச் செழுத்தப்பட வேண்டும்!

இதற்கு மாறாக ஒருவரின் மரணத்திற்குப் பிறகு இந்த மண்ணில் கலவரங்கள் வன்முறைகள் ஏற்படுத்தப்படுகின்றதென்றால் அந்த மனிதர் எப்படி வாழ்ந்திருந்தாலும் அவரது மரணத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்படும் வன்முறை விளைவுகள்தான் அவர் நல்லவரா கெட்டவரா என்பதை மக்கள் சக்தி அறிந்து கொள்ள முடிகிறது.

அடுத்தவர் உழைப்பினை வீணடித்து ஏராளமானவர்களைச் சிரமத்திற்கு ஆளாக்குபவர் எப்படி ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்திருக்க முடியும்? இத்தகைய தலைவர்களை வரலாறு கொடுங்கோலர்களாகத்தான் பதிவு செய்யும்!
ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் உன்னதமான தலைவர்களாகக் காட்சியளிக்காது மக்களோடு மக்களாக இணைந்து தொண்டாற்றும் மக்கள் தொண்டர்கள்தாம் தம் இறுதிக் காலத்தில் அடையாளம் காணப்பட்டுத் தமிழக மக்களால் கொண்டாடப்படுவர் 

எனவே  உன்னதமானவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நாம் வாழும் பெருமை பெற்றதற்காக அவரது மரணத்தை

                                 எல்லோரும் கொண்டாடுவோம்! 
                                  நல்லோர்கள் வாழ்வை!  எண்ணி! 

Read More...

வியாழன், 29 மே, 2014

வரிகள்! வரி ஏய்ப்பு! வரிச் சீர் திருத்தம்!

Leave a Comment

வரிவிதிப்பு முறை இனக்குழு முறை தோன்றி அவைகள் அரசுகளாக மாற்றம் பெற்ற காலம் முதல் செயல்பட்டு வருகிறது.

வரி விதிப்பு பொதுவாக மென்மையான வழி முறை, வன்மையான வழி முறை என இரு வகைப்படும்!

மென்மையான வரி விதிப்பு முறையைப் பின்பற்றியவர்களின் செயல் வரலாற்றில் எத்தகைய இடம் பிடித்ததோ நாம் அறியோம்! 

ஆனால் வன்மையான வரி விதிப்பு முறையைப் பின்பற்றியவர்களை வரலாறு இதுவரை கொடுங்கோலர்களாகத்தான் சித்தரித்து வந்துள்ளது!

பொதுவாக வரிவிதிப்பிற்கு உட்பட இன்றுள்ள பெரும்பாலானவர்கள் உடன்பட மறுக்கின்றனர். 

இதற்கு முதன்மையான காரணம் வருமான வரி! இரண்டாவது காரணம் வரிகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள்! 

பொருளாதார மேம்பாடு என்ற காரணத்தைக் காட்டி பல்வேறு வகைகளில் வரிகளைத் திணித்த காரணத்தால்தான் காங்கிரஸ் அரசு மக்களால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. 

செட்டிநாட்டுச் சீமான்! கோமான்! எனப் புகழப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சருக்குச் சாமானியர்களைவிட நடுத்தர மக்கள் எந்த அளவிற்கு தாம் விதித்த குறிப்பாகச் சேவை வரிகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என எண்ணியிருக்கவே மாட்டார்! 

அந்நாளைய அமைச்சர்கள் தொகுதிக்கு வந்தால் அவர்களை அந்தத் தொகுதியிலுள்ள பயணியர் மாளிகையில் சாதாரண மக்கள்கூடச் சந்தித்து தங்களின் குறைகளைத் தெரிவித்து, அது தொடர்பான மனுக்களைத் கொடுக்க இயலும்!

ஆனால் இன்றைய அமைச்சர்கள் தொகுதிக்கு வந்தால் அவர்கள் தங்குமிடமே பெருமபாலும் ஐந்து நட்சத்திர விடுதிகள் அல்லது தொகுதியில் வசதி படைத்த இயக்கத்தினரின் தங்குமிடங்கள், அல்லது அவர்களின் இல்லங்களில்தாம்! இது போன்ற இடங்களில் செல்வாக்குமிக்க வசதி படைத்தவர்கள் மட்டுமே அமைச்சர்களைச் சந்திக்க முடிகிறது! 

வசதியற்ற குறிப்பாக ஏழ்மையான அவர்கள் இயக்கம் சார்ந்தவர்களே அமைச்சரைச் சந்திக்க வாயிலில் வெகுநேரமாகப் பரிதாபமான நிலையில் காத்திருக்க அவர்கள் அங்கு  இருப்பதையே சட்டை செய்யாமல் அமைச்சரின் கார் வெளியேறுவதையும் அவர்கள் பரிதாபமாக அந்தக் காரின் பின்னால் மனுக்களுடன் ஓடுவதையும் நானே ஒருமுறை நேரில் கண்டு அதிர்ந்துள்ளேன்!

சாதாரண மக்களின் தொடர்பில் இல்லாத இது போன்ற அமைச்சர்கள் சேவை வரி என்ற பெயரில் சரக்குப் போக்குவரத்தில் துவங்கி உணவகம் வரை விதித்த வரிகளின் காரணமாகப் பல மடங்கு உயர்ந்த விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் செல்லும் உணவு விடுதிகளில் இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கப்படும் தயிர்சாதம் நடுத்தர மக்கள் செல்லும் உணவகங்களில் சேவை வரிக்கு உட்படுத்தி ஐம்பது ரூபாய் கொடுத்து உண்ண வேண்டியுள்ளது.

நான்கு பேர்கள் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க மக்கள் சாதாரண தயிர்சாதத்திற்கே இருநூறு ரூபாய்கள் செலவிடவேண்டுமென்றால் இன்றைய மக்களின் வாங்கும் சக்திக்கு நடுத்தர உணவக வகைகள் கூட எட்டாக்கனிதாம்!

மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டதை அறியாமல் நம் தமிழக அரசோ அம்மா உணவகம் என்ற பெயரில் இதே நடுத்தர மக்களிடம் வசூலிக்கும் வரியைச் செலவிட்டு ஐந்து ரூபாய்க்கு விற்று நல்ல பெயர் எடுக்கப் பார்க்கிறது.

ஐந்து ரூபாய் கொடுத்து அந்தத் தயிர் சாதத்தை வாங்குவதற்கு ரேசன் கடைகளில் மண்எண்ணை வாங்குவதற்கு அதிகாலை நான்கு மணிக்கே தவமிருந்து காத்திருக்கும் ஏழைகளைப் போலத் தாங்களும் கால் கடுக்க வரிசையில் நின்று காத்திருக்க விரும்பாமல் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் இது போன்ற உணவகங்களைத் தவிர்ப்பது ஓட்டு வங்கியைக் குறி வைத்து ஆட்சி நடத்தும் பரிதாபம் மிக்க நம் ஆட்சியாளர்களுக்கு எங்கே விளங்கப்போகிறது?

சேவை வரி இன்று நடுத்தர மக்கள் பயன்படுத்தும் கைபேசி துவங்கிப் பல்வேறு இடங்களில் கால் பதித்து விட்டது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் செல்லும் இடமெல்லாம் வரிச்சுமை!

வரி விகிதக் குறைபாடுகள்தாம் பெரும்பாலும் வரிக்கு உட்படுத்தப்படாமல் பொருட்களை விற்கும் நிர்பந்தத்தை உருவாக்குகின்றது!

மேலும் அப்படியே வரிக்கு உட்படுத்தி விற்றால் உண்மையான விற்று முதல் தெரிந்து விடும். மேலும் அதற்கேற்ப வருமான வரி கட்ட நேரிடும் என்ற அச்சத்திலும் பெரும்பாலும் கணக்கிற்கு உட்படாத வணிகம்தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

மாநில அரசின் விற்பனை வரி, மத்திய அரசின் மாநிலங்களுக்கிடையில் வரி, உற்பத்தி வரி, ஆயததீர்வு வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, சேவை வரி, போக்குவரத்து வரி, வீட்டு வரி, எனப் பல்வேறு இனங்களில் வரி விதித்துவிட்டு இறுதியாக வருமானத்தில் முப்பது சதவிகிதத்தையும் வரியாகக் கேட்டால் எவர்தாம் காந்தியாக மாறி வரி கட்ட முன் வருவார்?

திரை நட்சத்திரங்கள் துவங்கி ஆடம்பர உணவகங்கள், மாபெரும் வர்த்தக நிறுவனங்கள் உட்பட ஏதேனும் ஒரு வகையில் தங்களின் வருமானத்தை மறைக்கத்தான் பார்க்கின்றனரே தவிர யாரும் மனமுவந்து வருமான வரியினை முழுமையாகச் செழுத்தித் தங்களின் நேர்மையை இந்த நாட்டிற்குத் தெரிவிப்பதில்லை!

இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது! வருகின்ற வருமானத்தையெல்லாம் வரிக்கே கட்டிவிட்டால் வருங்காலத்தில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஈடு கொடுக்க இயலாதென்பதால் முடிந்தவரை தங்களின் வருமானத்தை ஏதேனும் ஒரு வழியில் சேமிப்பாக மாற்றவே பெரும்பாலான மக்கள் முயல்கின்றனர்.

முறையாக வரி செழுத்தும் ஒரு நேர்மைமிகு வணிகர் ஏதேனும் ஒரு காரணத்தால் நட்டப்பட நேர்ந்து வணிகம் நலிவடைந்த நிலையில் தன்னுடைய வருமானத்தை அப்போதய நிலைக்கேற்பக் குறைத்துக் காட்டினார் என்றால் உண்மை நிலையை அறியாமல் நம் அரசு அலுவலர்கள் அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையையும் நாடு நன்கறியும்.

இது போன்ற பல்வேறு காரணங்களால்தான் இந்த நாட்டில் வரி ஏய்ப்பு எனச் சொல்வதை விட வரிக்கு உட்படுத்தப்படாமல் நடைபெறும் வணிக முறைதான் பரவலாக உள்ளது. 

இதற்கெல்லாம் ஒரே தீர்வு வரிகளை எளிமைப்படுத்துவது மட்டும்தான்! இந்தத் தீர்வுதான் ஏற்றத் தாழ்வற்ற விலைவாசிக்கும், நேர்மையான வர்த்தகங்களுக்கும் வழி வகுக்கும்!

வரிகளை எளிமைப்படுத்தினால் இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இந்த நாட்டில் வேலையே இருக்காது! அரசியல்வாதிகளும் அரசு அலுவல்களும் இந்த நிலையை உருவாக்க எப்பொழுதுமே தயாராக மாட்டார்கள் என்பதுதான் பொதுவான மக்களின் இன்றைய கருத்து!

என்னைப் பொருத்தவரை வரிகளை எளிமைப்படுத்துவதே பொருளாதார வளம் மேம்படுவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும் என்பேன். வரிகள் எளிமைப்படுத்தப்பட்டால்தான் மக்களின் வாங்கும் சக்தி தாமாக உயரத் துவங்கும்! 

மக்களின் வாங்கும் சக்தி உயரும்போது தரமான பொருட்களின் உற்பத்தி பெருகி அதன் விற்பனையும் அதிகரிக்கும்! இதுவும் நம் சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கு ஒரு வகையில் மறைமுகமாக உதவும்.

ஒரு நபரின் மாத வருமானம் இரண்டு இலட்ச ருபாய்கள் என வைத்துக் கொள்வோம்! அந்த நபரின் வருட வருமானத்தில் ஒரு சதவிகிதத்தை மட்டும் வருமான வரியாகச் செழுத்து என நிர்ணயித்தால் இரண்டாயிரம் ருபாய்தானே என மனமுவந்து அவர் வருமான வரியினைத் தாமாகவே முன்வந்து கட்ட வருவார்!

அவரிடம் மீதமுள்ள ஒரு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாயில் ஒரு இரு சக்கர வாகனம், ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, ஒரு கணிணி என ஒரு இலட்சத்திற்கு வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த ஒரு இலட்சம் மதிப்புள்ள பொருளுக்கு விற்பனைத் தொகையில் ஒரு சதவிகிதத்தை வருமான வரியாகக் கட்டு என்றால்கூட ஆயிரம் ரூபாய்தானே என வரியைச் செழுத்துவார்!

அவர் ஓட்டும் வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க வருடத்திற்கு நூறு ரூபாயினை எளிமையாகச் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சோதனைச் சாவடியில் எந்தவித இலஞ்ச பேரமும் இன்றி கட்ட முடிந்தால் மனமுவந்து ஆண்டுக்கு ஒரு முறை தம் ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பிப்பார். (தற்போது ஒரு ஓட்டுநர் உரிமம் பெற ஆயிரம் செலவாகிறது!  பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும்! ஆனால் அரசிற்கு கிடைப்பதோ சில நூறுகள்தாம்! மீதி இலஞ்சத்திற்கும் இடைத்தரகர்களுக்கும் செல்கிறது. மேற்கண்ட வழியில் இதே பதினைந்து ஆண்டுகளில் அரசுக்கு அவர் ஆயிரத்து ஐநூறு ரூபாய்களை செழுத்துவார்)

ஒரு நோயாளிக்கு மருத்துவர் அவரின் நோய் நீங்க ஊசி போடுகிறார்! நோயாளி எப்படிப்பட்ட திடசாலியாக இருந்தாலும் ஒரு நிமிடம் அந்த வலியை எண்ணிக் கலங்கத்தான் செய்வார். இந்த நிலையில் மருத்துவர் அவரிடம் மென்மையாகப் பேசியவாறு வலியே தெரியாமல் அவருடைய உடம்பில் ஊசியைச் செழுத்தி மருந்தினை உட்செழுத்துவார்.

இப்படிப்பட்ட வலி தெரியாத மென்மையான வரி முறைதான் ஒரு நாட்டின் பொருளாதார வளம் ஆட்டம் காணாமலும், நம்முடைய செல்வ வளம் கருப்புப் பணம் என்ற பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு நம் மக்கள் எவருக்கும் பயனின்றி வெளிநாடுகள் வளம் பெறும் நிலையையும் தவிர்க்க இயலும்!

ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்;சி காலத்தில் இத்தகைய மென்மையான வரிவிகிதங்கள்தாம் மக்களிடம் நடைமுறைப்படுத்தப்படும்! மென்மையான நடைமுறைகளால்தான் இனி வன்மையான இன்றைய நிலையை முற்றிலும் மாற்றியமைக்க முடியும்!

Read More...

திங்கள், 26 மே, 2014

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!

Leave a Comment
       
முதலியார்!

வடவர்களின் கட்டுக்கதைகளை நம்பிப் பிள்ளையாரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு சாதியால் ஆதியில் முதலில் பிரிந்தவர்களே முதலியார்கள்! ஆம் இச்சாதிப்பெயரை பிரித்துச் சொல் அறிந்தால் சாதியால் முதலில் யார் பிரிந்தவர்கள் எனும் கேள்வி பிறக்கும். 

இன்றைய திருச்செங்கோட்டுப் பகுதியில் வாழ்ந்து அந்நாட்களில் தமிழர்தம் புறநானூற்றுப் பாடல் வரிகளில் வரும் தமிழ்த் திருமணங்களுக்குக் கூரைப்புடவை நெய்து கொடுத்த குலம் இது! 

தமிழினத்திற்குப் பருத்தியால் ஆன ஆடை கொடுத்த இவர்கள் பின்னர் வடவர்களின் சாதி வலையில் வீழ்ந்து வடவர்தம் திருமணங்களுக்குப் பட்டுப்புடவை நெய்வதற்குக் காஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பின்னர் பிள்ளையாரைத் தெய்வமாக ஏற்றுச் சாதிப் பிரிவில் முதலாவதாக வீழ்ந்து இன்று வரை வடவர்தம் வழக்கங்களை ஏற்று வழி நடக்கும் தமிழினம்! 

வடவர்களின் ஆட்சியிலிருந்து தமிழினத்தை நிரந்தரமாக மீட்டுத்தந்த பெரியாரின் மாணவர் அறிஞர் அண்ணாவின் வழியினை மீண்டும் இவ்வினம் பின்பற்றிச் சாதி ஒழிப்பில் முன்னணியில் நிற்க வேண்டும்!        

வன்னியர் படையாட்சி கண்டர்!

தமிழின வரலாற்றில் வடவர்களின் ஆதிக்கத்தை வேரறுக்கப் போராடிய மகேந்திர பல்லவரின் வம்சம் இவர்கள்! வடவர்களால் புகுத்தப்பட்ட காளி வழிபாட்டையும் மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் அதி தீவிரமாக எதிர்த்த மகேந்திர பல்லவரின் தீரத்தை வரலாறு மறைத்துவிட முடியாது! 

வடவர்களின் ஆதிக்கத்தை வன்மையாக எதிர்த்தமையால் வன்னியர் எனவும் படை கொண்டு ஆட்சி நடத்தியவர்கள் எனும் பொருள் படும் வகையில் படையாட்சி எனவும் தமிழகத்தின் கண்டப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால் கண்டர் எனவும் அழைக்கப்படுபவர்கள்!

இன்று தமிழகத்தில் நல்லாட்சி மலரப் புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் இவ்வினம் தீவிரமான சாதி உணர்வால்; தம் மீது புகுத்திக் கொண்ட கறைகளை அகற்றி, கலை வளர்த்த காஞ்சிப் பல்லவரின் மென்மையான ஆட்சி முறை தமிழகத்தில் அமையச் சாதி ஒழிப்பில் தனது பங்கை முதன்மைப்படுத்தினால் தமிழின முன்னேற்றத்தை எவராலுமே தடுக்க முடியாது!

பிள்ளை எனப்படும் வேளாளர் பிரிவினர்!

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் முதன்மையான சோழ வம்சத்தவர்கள் இவர்கள்! இந்த வம்சத்தில்தான் கணக்கிடவே இயலாது ஏராளச் சாதிப் பிரிவுகள்! 

கடல் வழிப் பயணத்தில் உலகை வலம் வந்து சாதனை படைத்ததில் முன்னோடியாக விளங்கியவர்கள் பின்னர் வடவர்களின் ஆதிக்கத்தில் தங்களின் அரண்மனைகள் இன்றைய திருக்கோயில்களாக மாற்றம் பெற்று வீழ்ந்தபோது தாங்கள்தான் கடவுள்களின் பிள்ளைகள் என்ற எதிர்ப்புடன் தமிழகத்தில் மாரி அம்மன் கோயில்களை ஏற்படுத்தி இந்தப் பெயருக்குடைய அடைமொழியை அடைந்தவர்கள்!

கொங்கு வேளாளக் கவுண்டர்கள்!

சோழ வம்சத்தவர்களாகப் பரந்துபட்ட தமிழகத்தின் கண்டப் பகுதியில் வேளாண்மை செய்து வாழ்ந்த இவர்கள் தங்களுக்குள் மட்டுமே இன மோதல்கள் நிகழ்ந்ததாகத் தங்களின் சகோதரர்களில் ஒரு பிரிவை வேட்டுவக் கவுண்டர் என ஒதுக்கிவிட்டுக் கருதும் வீரப்பூரைத் தங்கள் வழிபாட்டுத் தலமாகக் கொண்டாடி வருபவர்கள்!

மகாபாரத யுத்தத்தின் இறுதி நிகழ்விடம்தான் வீரப்பூர் என்பதை எமது உள்ளுணர்வு ஆழமாகப் பிரபஞ்ச சக்திகளின் வெளிப்பாட்டால் நம்புகின்றது! இங்கிருந்துதான் அர்ச்சுனன் போர் புரிய மறுத்துச் சபரிமலை சென்றடைந்து தவம் செய்யத் துவங்கியிருக்க வேண்டும் என்பதே உண்மை வெளிப்பாடு! இந்த உள்ளுணர்வு என்றேனும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்!

தங்களின் திருமணச் சடங்குகளில் வடவரைச் சேர்த்துக்கொள்ளாத இந்த இனம் வெகு விரைவில் தங்களின் பகையாளி வேட்டுவ இனமல்ல என உணர்ந்து சாதி பிரித்த வடவர்தம் மதவாதச் சூழ்ச்சியில் வீழாது விடுபட்டுத் தமிழ்ச் சாதிகள் ஒழிந்து ஒன்றுபடத் தங்கள் பங்கை உலகிற்கு வழங்குவது சர்வ நிச்சயம்!

வள்ளுவர்! 

ஆதியில் வானவியலில் வல்லுநராகத் திகழ்ந்த இந்த இனம் புவி மாற்றங்களையும் வருங்காலத்தையும் கணிப்பதில் தீர்க்கதரிசிகள்! துல்லியமான சோதிடவியல் பிறந்தது இவர்களால்தான்! வள்ளுவர் பிறந்தது இந்த இனத்தில்தான்! கணிதவியலில் முன்னோடிகள் இன்று வடவர்களால் தாழ்ந்த சாதியாகித் தம் சுயம் மறந்தனர்!

பள்ளர் பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர்!

ஆதியில் அரண்மனைகளில் போர்ப் பறை அறைபவர்களாகவும், ஆடல் பாடல் என ஆனந்தப்பள்ளுப் பாடிக் கலை வளர்ப்பவர்களாக வாழ்ந்து உயர் பிரிவினராக விளங்கிய இவர்கள் வடக்கிற்குத் தமிழினம் அடிமைப்பட்ட ஒரு கால கட்டத்தில் இவர்களை ஒழித்து இவர்களின் இடத்தைத் தமதாக்கிக் கொண்டு வடக்கு இவர்களின் இடத்தைக் கைப்பற்றியது!

தம் சுயம் அறியாமல் காலம் காலமாகத் தாழ்த்தப்பட்டவர்களாகத் தம்மை உருவேற்றிக்கொண்டு இன்றுள்ள சாதிகளாக மாற்றம் பெற்ற பரிதாபத்திற்கு உரியவர்கள் இவர்கள்!

வடக்கு இவர்களுக்கெனவே கட்டுக்கதைகளும் இவர்கள் வாழ்வை இன்றுவரை இருட்டிலேயே வைத்துத் தலையெடுக்க விடாமல் செய்யச் சுருட்டும் சாராயமும் கேட்கும் கற்பனைத் தெய்வங்களை உருவாக்கித் தந்தனர்!

இவர்கள் அதை தமது வாழ்வில் பழகுமாறு செய்து இந்த தெய்வங்களுக்கு அவற்றைப் படைக்கும் பழக்க வழக்கங்களையும் கற்றுத் தந்து, பின்னர் தங்களின்  உயிர் பலியிடும் வழக்கத்தையும் உருவாக்கித் தந்து இவர்தம் சுயம் மறக்கடிக்கப்பட்டனர்!

தங்களின் ஆதிக்கத்தைத் தமிழகத்தில் நிலை நாட்டிக்கொள்ள உயர் சாதியினர் எனச் சிலரை மட்டும் உயர்த்தி அவர்களுக்குக் கீழ் இவர்களை அடிமைப்பட வைத்து இன்றுவரை இவர்கள் தயவுடன் தங்கள் மத ஆதிக்கத்தை நிறைவேற்றி இன்றைக்குக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்ட அரண்மனைகளில் நுழையவும், அதைவிடக் கொடுமையாகத் தாங்கள் வசித்த தெருக்களில்கூட நுழையவிடாமல் தடுத்து வந்துள்ள வடவர்களின் கொடுமையை இவர்கள்தான் முடிவிற்கு கொண்டுவர வேண்டும்! 

நாடார்!

பெயரிலேயே இவர்களின் குணம் தெரிந்துவிடும்! உதாரணத்திற்குப் பெருந்தலைவர் அவர்கள் ஒருவரே போதும்!

செட்டியார்கள்! ரெட்டியார்கள்!

வணிகத்தை வாழ்க்கை முறையாகக் கொண்டு கடல்கடந்து சென்று சீரும் சிறப்புமாகச் செட்டும் குடித்தனமுமாக வாழ்ந்தவர்கள் இவர்கள் என்பதால் செட்டியார் எனவும் இவர்களில் பிரிந்து தெலுங்கு பேசும் மக்கள் ரெட்டியார் எனவும் பெயர் பெற்றனர்!

மருத்துவர் எனப்படும் நாவிதர்!

இன்று தமிழக்க கோவில்களில் முடி காணிக்கை இறக்குபவர்களாக தொழில் செய்யும் இந்த இனம் வடவர்களின் ஆதிக்கத் தமிழகத்தில்தான் இந்நிலைக்குத் தள்ளப்பட்டனர்!

ஆதியில் சித்த மருத்துவர்கள் துணையுடன் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை முறையை நாவிற்கு இதமாகப் பேசி நோயாளிகளைக் குணப்படுத்துவதி;ல்; கை தேர்ந்ததால் நாவிதர் என அழைக்கப்பட்ட இரண சிகிச்சை  மருத்துவ நிபுணர்கள் இவர்கள்! 
இன்று தம் சுயம் மறந்து தாழ்ந்த இனமென தம்மைக் கருதிக்கொண்டாலும் அழகுக்கலை நிபுணர்களாக விளங்கி வளமாக வாழ்கின்றனர்!

மலையாளி!

குறிஞ்சி நிலமாம் மலைப் பகுதியை ஆழ்பவர்கள் என்ற பொருளில் அழைக்கப்பட்டவர்கள்! இன்று கேரள மாநிலத்தவராகப் பிரிந்து மலையாளத் தமிழைப் பேசுபவர்கள்! குறிஞ்சிநிலக் கடவுளாம் முருகனைத் தம் கடவுளாக ஏற்று வணங்கும் நம் கேரள சகோதரர்கள்!

நாயக்கர்! நாயுடு! 
தமிழர்தம் மூன்று கலைகளில் நாடகக் கலைப் பிரிவில் வருபவர்கள் இவர்கள்! புராணக் கதைகளை நடித்துக் காட்டி அதில் வரும் கதாபாத்திர நாயகர்களாக வாழ்ந்த இவர்கள்தான் பின்னாலில் சாதியால் பிரிந்து வடவர்களின் மொழியும் கன்னடமும் கலந்த தெலுங்கு மொழிக்குச் சொந்தக்காரர்களாக மாறிவிட்டனர்!

ஆட்சிக்கட்டிலில் அமரத்துடிக்கும் இன்றைய திரைப்பட நாயகர்களின் முன்னோடிகள் இவர்கள்தாம் எனலாம்! அந்நாளில் தம் நடிப்புத்திறத்தால்தான் இவர்கள் நம் மூவேந்தர் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி நாயக்கர்களின் ஆட்சியைத் தமிழகத்தில் வேறூன்ற வழி செய்தனரோ என்ற சந்தேகம் ஆந்திரத்திலும் தமிழகத்திலும்  தமது நடிப்பால் ஆட்சிகளைப் பிடித்த இரு திலகங்களின் செயலால் உறுதியாகிறது!

தமிழகத்தைப் பொருத்தவரை திரைப்பட மோகத்தால் மக்களைத் தம் வசப்படுத்தி ஆட்சியில் அமர வழி வகுத்த திராவிடக் கட்சிகளை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்த இந்த இனம் அவரது சாதி ஒழிப்பு இலட்சியத்தில் இனி முன்னணியில் நிற்குமென்பது சர்வ நிச்சயம்!

வண்ணார்! 

அந்நாட்களில் தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மூலிகை வளங்களைப் பயன்படுத்தித் துணிகளுக்கு வண்ணம் சேர்க்கும் தொழிற்பிரிவில் வருபவர்கள் இவர்கள்! மக்களின் உடை அழுக்கைச் சுமந்து வெளுத்து வெள்ளையாக்கித் தரும் இவர்களைச் சாதியால் பிரித்துத் தாழ்த்தித் தமிழினம் தன்னை அழுக்காக்கிக் கொண்ட பரிதாபத்தை நாம் என்னென்பது!

இது போன்றுதான் நம் தமிழினத்தின் சாதிப் பிரிவுகளின் பின்னணிக்குச் சரியான காரணம் உள்ளது! தமிழினம் சாதிகளால் பிரிந்தாலும் அதற்கான சரியான வழக்குச் சொல்லைத்தான் தங்கள் சாதிப்பெயருக்கு அடை மொழியாக ஏற்று வந்துள்ளது!
அறிவுடைய தமிழக மாணவர்கள் இனியாவது தெளிவுற்று சாதியென்பது நாம் சார்ந்த தொழில்தானே தவிர வேறு காரணம் ஏதுமில்லை என உணர்ந்து சாதிகளை ஒழித்துத் தமிழினத்தை உயர்த்திச் சாதிப்பவர்களாக மாறவேண்டும்!


வேளாளரின் தோட்டத்தில் வண்ணார் துவைத்த சட்டையணிந்த தாழ்ந்த இனத்தவர் நிலத்தைப் பண்படுத்தி விளைவித்து அவராலே அறுவடை செய்யப்பட்டுச் செட்டியார் எனும் வணிகரிடம் சென்று பிள்ளை எனும் வாடிக்கையாளர் சாப்பிடும் அரிசி எந்த சாதிக்குச் சொந்தமானது?  

ஒவ்வொரு சாதிக்காரரும் தம் சாதியைப் பிடித்துக்கொண்டு இனியும் தொங்கினால் பேருந்துப் பயணம் கூட இனித் தனித்தனியான சாதிக்குதான் தொடங்கப்படவேண்டும்! ஆம் தீவிரமான சாதிமத வெறியர்கள் ஏன் பிற மத சாதியினர் ஓட்டுநராக உள்ள பேருந்தில் ஏற வேண்டும்? இங்கு மட்டும் தவிர்க்கப்படும் சாதிமத பேதங்கள் தமிழர்களின் எல்லா இடங்களிலும் தவிர்க்கப்படுவது ஒன்றும் இயலாத காரியமல்ல! வேண்டியதெல்லாம் எல்லோரும் ஓர் குலம் என்ற உயரிய நாகரீகம்தான்!

நான் அடிக்கடி என்னை சார்ந்தவர்களிடம் சாதிப்பிரிவினைகள் தமிழர்களுக்குள் இருக்கவே கூடாது என்பேன்! அதற்கு அவர்கள் சாதிகளை ஒழிக்கவே முடியாது என ஆணித்தரமாகப் பதிலளிப்பர்! ஆம் சாதிகளை ஒழிக்க முடியாதுதான்! 

ஆனால் சாதிகளை இணைக்க முடியுமே! இன்று முதல் மாணவச் செல்வங்கள் சைவத் தமிழர், வைணவத் தமிழர் என்ற இரு பிரிவுகளுக்குள் தம்மைக் கொண்டு வர வேண்டும்! பள்ளிகளில் சாதி என்ற இடத்தில் சைவத்தமிழர் அல்லது வைணவத்தமிழர் என்று குறிப்பிடுமாறு வற்புறுத்த வேண்டும்! (படிக்கவும் எனது சைவ வைணவத் திருமணங்கள் கட்டுரையினை)

நாளாக நாளாக இதுவே நடைமுறைக்கு வந்துவிட்டால் சாதிகள் தாமாகவே இந்தத் தமிழகத்தை விட்டு அகன்றுவிடும்!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வரவிற்குப் பிறகுதான் தமிழகத்தில் தமிழர் தமது பெயருக்கு பின்னர் சாதிப்பெயர்கள் எனும் வால் ஒட்டிக்கொண்டு எழுதுவதை வெட்டிவிட்டுச் சாதி அடைமொழியைத் தவிர்க்கத் துவங்கினர்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் சாதியவாதத்தையும் மதவாதத்தையும் நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால் வடவர்கள் இன்றுவரை சாதிவெறியில் திலைப்பவர்கள்! இதற்கு ஒரே சாட்;சியம் நம் தமிழகத்திலுள்ள தொலைபேசி டைரிதான்! எனது கருத்தை படித்த பின்னராவது தமிழகத்தில் வசிக்கும் வடவர்களின் பிள்ளைகள் தங்களின் பெயருக்குப் பின்னர் சாதிகளை இணைத்து எழுதுவதைத் தவிர்ப்பார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்!      

இந்த மாற்றம் தமிழகத்தில் அமையவிருக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் நிரந்தரமாகும் நிலை உருவாகும்!

Read More...

கார்த்திகைத் திருவிளக்கு!

Leave a Comment
             
தமிழகம் இயற்கையாகவே முப்புறமும் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பினை உடையது! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமது நுண்ணிய அறிவாற்றலால் கடலின் தன்மையினை நன்கு புரிந்து கொண்ட நமது முன்னோர்கள் கடல் வளம் அழியாது பேணுவதில் மிகுந்த கவனம் செழுத்தினர்!

கால நிலை மாற்றங்களால், கடலில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாக அறிந்து அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினர்!

இதனால்தான் தமிழினம் கடல் கொண்ட லெமூரியாக் கண்டம் தொடங்கி இன்று நாம் வசித்து வரும் தற்போதைய நிலப்பரப்பு வரை தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளது!

திரைகடலோடி திரவியம் கொண்டு கடலின் தன்மையினை முழுமையாக அறிந்திருந்த காரணத்தால்தான் லெமூரியாக்கண்ட காலத்திலேயே வட அமெரிக்க மாயர்;களுடனும், பிற நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள்!
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வெல்ல முடியாத நிலப்பரப்பிற்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய சோழர்கள் கடற்பரப்பில் மிகுந்த ஆதிக்கம் செழுத்தினர்!

அதனால்தான் மேற்கில் கிரேக்கம் தொடங்கி கிழக்கில் கடாரம் வரை வணிகம் மற்றும் கலை கலாச்சாரத் தொடர்புகளையும், தம்மை அடிமைப்படுத்த வந்த வடவரைத் துணிச்சலுடன் போரில் எதிர்கொண்டு இமயத்திலும் தமது புலிக்கொடியைப் பறக்கவிட்டுத் தன் பெயரை கங்கைகொண்டான் எனப் பறைசாற்றிய சரித்திரத்தை வரலாறு மறைத்து விடவும் மறந்து விடவும் முடியாது!

கடலின் ஒவ்வொரு துல்லியமான அசைவுகளையும் இன்றுள்ளது போல அறிவியல் கருவிகள் இல்லாத காலகட்டத்திலேயே தமிழினம் முழுமையாக அறிந்திருந்தது மட்டுமல்லாமல், கடல் சீற்றங்களிலிருந்து தமது நிலப்பரப்பையும், தம்முடைய உழைப்பால் உருவாகும் விளை பெர்ருட்களைக் காத்தும் வந்துள்ளனர்.

பொதுவாகத் தமிழகம் தனது  நில அமைப்புப்படி ஆடி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை மழை பெய்து வளமடைவது வழக்கம். இதன் பின்னர் கடலில் நிகழும் காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் காரணமாக, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புயல் அபாய நிலை இன்று வரை தொடர்வதும் நாம் அறிந்த ஒன்று.

இன்று கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மட்டும் ஏற்றப்படும் மகாதிருவிளக்கு திருவண்ணாமலை துவங்கி இத்திருவிளக்கு வழக்கங்கள் வழக்கற்றுப் போன திருவானைக்கோயில் சுசீந்திரம் , உள்ளிட்ட ஐம்பெரும் சிவத்தலக் கோயில்களிலும் (இப்பொழுதுதான் இவை கோயில்கள்! முன்னர் இவைகள்தான் தமிழக மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள்) ஏற்றப்படும் வழக்கம் முற்காலத்தில் விளங்கியது.

இந்தக் கோவில்கள் கடற்பரப்பிலிருந்து துல்லியமாக நூறு காத தொலைவில் (இன்றைய அளவீட்டின்படி நூறு கிலோமீட்டர்கள்) கட்டப்பட்டவை.

இயற்கைச் சீற்றக் கடல் அபாயங்களைத் தடுக்கவும், இயற்கையைத் தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் திட்டமிட்டுச் சரியான அளவீட்டில் இருக்குமாறு துல்லியமாக அக்காலத் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை இக்கோயில்கள்.

வடவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிராத அக்கால கட்டத்தில் இந்த அறிவியல் திருக்கோயில்களில் கார்த்திகை மாதங்களில் குறிப்பிட்ட நாளில் ஒரே சமயத்தில் மகா விளக்குகள் ஏற்றப்படும். இதே நாட்களில் தமிழர்களின் இல்லங்கள்தோறும் வரிசையாகத் திருவிளக்குகள் ஏற்றப்படும்.

இது இன்று வழக்கத்திலுள்ளது போலப் பக்தியின் அடிப்படையில் அல்ல. முழுக்க முழுக்க விஞ்ஞானத்தின் அடிப்படையிலேதான்.    தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் ஏக காலத்தில் திருவிளக்குகள் ஏற்றப்படுவது போன்றவை மட்டுமல்ல, இன்றும் ஒரு சில இடங்களில் மட்டுமே வழக்கத்தில் உள்ள சொக்கப்பனை கொளுத்துவதும் கூட விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான்.

அது மட்டுமன்றி எண்ணங்களின் வலிமையை உணர்ந்த நம் முன்னோர்கள் இது போன்ற புயல் அபாய நாட்களில் திருவண்ணாமலை திருஆனைக் காவல், சுசீந்திரம் போன்ற முக்கியமான ஐந்து தலங்களிலும் ஒன்று கூடித் தங்களின் எண்ண ஆற்றலை இந்தப் பிரபஞ்ச வெளியில் செழுத்தி புயலின் வலிமையைத் தங்களின் எண்ண ஆற்றல் வழிமையால் வென்று புயல் அபாய இடர்களைக் கட்டுப்படுத்துவர்!

தமிழகம் முழுவதும் இன்றுள்ளது போல இரண்டு நாட்களில் முடிந்து விடும் கார்த்திகை திருவிளக்குகள் ஏற்றப்படும் வழக்கம், செல்வ வளம் மிகுந்த வளமுற்ற தமிழகத்தில் புயல் அபாய நிலை நீங்கும் வரை தொடர்ந்து இதே வித மக்களின் எண்ண அலைகளால் புயல் அபாயங்கள் கட்டுப்படுத்தப்படும் வரை  நீடிக்கும்.

இந்த அறிவியல் ரீதியான தீபங்களாலும், சொக்கப்பனை கொளுத்துதலாலும் வான மண்டலம் சூடேற்றப்படுகிறது. இதன் காரணமாகக் கடலில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை வழுவடையத் துவங்கி மேல்நோக்கி எழும்பி வலிவு குன்றி கடற்பரப்பிலேயே மழை பொழிந்து திசை மாறிச் சென்று விடும். இதன் காரணமாகக் கடற்கரைப் பகுதிகள் மட்டுமே அந்நாட்களில் இலேசான மழைப் பொழிவால் பாதிக்கப்படும்.

அதே போன்று வானவியலில் வல்லுநர்களாகத் திகழ்ந்த தமிழினம் இன்று வழக்கத்திலுள்ள ஆவாவளிப் பட்டாசுகளைப் போலன்றி அந்நாட்களில் ஆற்றல் பொருந்திய வானவெடிகளைப் பயன்படுத்தி மிக நீண்ட தொலைவு பாய்ந்து சென்று புயல் அபாய மேகங்களையும் தேவையற்ற மழைப் பொழிவு ஏற்படுத்தி விளை பயிர்களை நாசப்படுத்தும் மேகங்களையும் கலைந்தோடச் செய்து வெற்றி காண்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்கக் கூடும்!

இத்தகு விஞ்ஞான அறிவால் தமிழினம் தமது விளை நிலங்களையும் விளைச்சலையும் காலம் காலமாகக் காத்து வந்துள்ளது! இன்றோ தமிழினம் இத்தகைய அறிவியல் விஞ்ஞானக் கோயில்களை வடவர்களிடம் இழந்து தவிக்கிறது! தமிழினம் இதை மட்டுமா இழந்தது?.

வடவர்களின் கட்டுக்கதைப் புராணங்களை நம்பி இயற்கைச் சீற்ற விழைவுகளிலிருந்து தப்பிக்க வழியின்றி மட்டுமல்ல அந்நாட்களில் உடற்பயிற்சிக் கூடங்களாக விளங்கி யோக ஆசனம் சிற்பம் பரதம் உள்ளிட்ட கலைகளை வளர்க்கப் பயன்பட்ட பண்பாட்டுத் தலங்களையும் அல்லவா இழந்து தவிக்கிறது!

அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்த இன்றும் கூட நமது விஞ்ஞான அறிவு  பயனற்றுப் போவதையும், புயல் கால ஆபத்துகளைத் தவிர்க்க இயலாத கையறு நிலையில்தான் நமது அரசு செய்வோர் தடுமாறுகின்றனர்!

அதோடு மட்டுமன்றி இக்கால கட்டத்தில் நிகழும் மக்களின் இன்னல்கள்கூட கேலிக்கூத்தாகிறது! தற்பொழுது  ஆட்சி சுகம் அனுபவிப்பவர்களும், ஆட்சி சுகம் அனுபவித்து முடிந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட முந்தைய ஆட்சியாளர்களும், மக்களின் திரைப்பட மோகத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கட்டிலில் ஏறத் துடிப்பவர்களும் தமது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவும், விரிவுபடுத்தவும் நடத்தும் நாடகங்கள் நாடறிந்தது.

ஆயின் அன்றிருந்த நம் முன்னோர்கள் இன்றைய அவலங்களைப் போலல்லாது உண்மையாக மக்கள் படும் துயரங்களை விஞ்ஞான ரீதியில் அறிந்து அதனைத் தீர்க்கும் வழி முறைகளையும் கண்டறிந்து இயற்கையை வென்றனர். இடர்களைக் கலைந்தனர்.

விஞ்ஞானத் தமிழினம் எழ வேண்டும்! மெய்ஞ்ஞான ஆற்றல் பெறவேண்டுமெனில் தமிழகத்தில் இது போன்று அறிவியலுடன் எண்ண ஆற்றல்கள் மேம்பட்ட மக்கள் சக்தி எழ வேண்டும்!

இத்தகைய மெய்ஞ்ஞானத் தமிழினம் நிச்சயம் ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் உருவாக்கப்படும்!

   

Read More...

திருக்குறள் பல்கலைக் கழகம்!

Leave a Comment
தமிழ்த்தாயின் சிரத்தை அலங்கரிக்கும் தகுதிக்குத் தொல்காப்பியம் துவங்கி எத்தனையோ நவஇரத்தின மகுடங்கள் இருப்பினும் தனது தனித்துவத்தால் தமிழ்த்தாயின் சிரத்தை நிரந்தரமாக அலங்கரிக்கும்  நவஇரத்தினங்களைவிட அளவிற்கு அதிகமாக இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரே உயர் சிறப்புடைய எழில்மிகு மகுடம் திருக்குறள்தாம் என்பதை அறிவிப்பதில் தமிழராய்ப் பிறந்தவரெல்லாம் பெருமைப்பட வேண்டும்.
உலகப் பொதுமறை என்றெல்லாம் நாம் நமது திருக்குறளை உயர்த்தி எழுதியும் பேசியும் வருகிறோம். ஆயின் வள்ளுவம் வகுத்த வாக்கினுக்கேற்ப நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டிருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லையென்ற பதில்தாம் இன்றுவரை கிடைத்து வருகிறது.

திருக்குறளிலுள்ள கருத்துக்களை இந்தத் தலைப்பில் எழுதத்துவங்கும்போதே சில அதிகாரங்களிலுள்ள குறள்களின் சிறப்பைப்பற்றி படிக்க நேரிட்டபோது என்னுள் நாம் இதை எழுதுவதற்குத் தகுதியானவர்தானா என்ற கேள்வியும் எழாமலில்லை.

இதற்குக் காரணம் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் திருக்குறளை நான் முழுவதுமாகப் படிக்கவில்லை, அதன்படி நடக்கவில்லை என்ற குற்ற உணர்வுகள் என்னுள் எழுந்தமைதாம். பள்ளிக்கல்வியை  பனிரெண்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டவன் நான். அதன்பின் வணிக வாழ்க்கையில் மிகச் சிறப்புற வாழும் வகை தொலைத்தவன்.
     
   நல்ல வேளையாக, கண் கெட்டபின் பகலவன் வணக்கம் என்ற நிலைக்குச் சற்று முன்னதாகவே வாழ்க்கைச் சூறாவளியில் சிக்கித் தப்பித்தவன். 

      இப்பொழுதெல்லாம் என்னுடைய ஒரு நண்பனாக ஒரு சிறிய திருக்குறள் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொள்கிறேன். அதில் திருவள்ளுவர் வாழ்ந்துகொண்டு எனக்கு வாழும் வழியும் காட்டுகிறார்.

இத்தகு சிறப்பு வாய்ந்த நம் உலகப் பொதுமறையை உலகளவில் கொண்டு சென்றிருந்தும் நம்மளவில் இதுவரை சிறப்புச் செய்யவே இல்லையெனக் கருதுகிறேன். 

தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி நம்மை ஆண்டு வந்துள்ள தலைவர்கள் ஏராளமாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். 

அதன்படி அவர்கள் நடந்தார்களா என்ற கேள்விக்கு அரசியலில் நேர்மை காத்த எனது மானசீகத் தலைவர் பெருந்தலைவர், திரு கக்கன், திரு ஜீவானந்தம் பேரறிஞர்  அண்ணா போன்றவர்கள் தவிர மற்றவர்களிடம் அவரவர்தம் மனசாட்சியைக் கேட்டுத்தாம் பதில் பெற முடியும்.
     என்னைப் பொருத்தவரை திருக்குறளை இளம் வயதிலிருந்தே ஒருசில  குறள்களைப்பற்றியும் அதற்குரிய விளக்கக்களைப் பற்றியும் மட்டுமே மனப்பாடம் செய்து அறிந்திருந்தும் அதன்படி வாழ இயலாத வணிக வாழ்வியல் சூழலில் தள்ளப்பட்டவன். பெரும்பாலான தமிழர்களின் நிலையும் இதே கதிதாம்.

திருக்குறளை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்புகள் இல்லாது போனாலும் என்னை வழிநடத்தும் பிரபஞ்ச சக்திகள் ஓரளவிற்கு என்னுடைய வாழ்க்கை முறையைத் திருக்குறளின் நெறிக்கேற்ப வாழும்படித்தான் வழிநடத்தி வந்துள்ளமையையும் நான் உணர்ந்து தெளிந்தேன். 

அதனால்தான் மனம் தெளிவடைந்து நான் இன்னும் தவிர்க்க வேண்டிய பின்பற்ற வேண்டிய வாழ்க்கை வழி முறைகளை அப்வப்போது வள்ளுவரின் வாக்கைக்கேட்டுத் தெளிந்து அதன்படி வாழ முற்படுகிறேன்.

எனக்கு மட்டுமல்ல உலகினுக்கே பயனளிக்கும் அற்புதமான இந்த உலகப் பொதுமறையைத் தமிழராகிய நாம் நமது பாடத்திட்டத்தில் ஒரு சில அதிகாரங்களையும் அவற்றிலுள்ள ஒரு சில குறள்களையும் மட்டுமே படித்தறியுமாறு வாழ்ந்து வாழ்வு தொலைத்து வந்துள்ளோம்.

இந்த நிலையைச் சற்று மேலானதாக மாற்றியமைக்க தமிழறிஞர்கள் ஒன்றுபட்டு ஒரு மேன்மையான முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுவென நான் கருதுகிறேன். 

ஆம்! இதுவரை பாடத்திட்டத்தின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே அறியப்பட்டு வந்துள்ள நம் பொதுமறை இனிவரும் காலத்தில் பட்டயப்படிப்பாக அனைவரும் படிக்கும்படியான கல்வித் திட்டமொன்றைத் திருக்குறளுக்கெனக் கொண்டுவரவேண்டும்.

இதற்கு முதற்கண் தமிழகத்தில் திருக்குறளுக்கெனத் தனித்துவமான ஒரு பல்கலைக்கழகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். 

அதில் தொடக்கக் கல்விமுதல் பட்டயம் வரை படிப்பதற்குரிய வசதியினை நம் தமிழகத்தின் வருங்காலச் சந்ததியினரின் குழந்தைகளும், திருக்குறளின் மேன்மையை அறிந்த உலகத்திலுள்ள பிற குழந்தைகளும் இங்கு வந்து படித்து வாழும் வகை பெறுகின்ற வழியில் புதியதொரு பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பினை உருவாக்க வேண்டும்..

ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் இதற்கெனத் தனியாகப் பல வகுப்பறைகளும், வள்ளுவத்தையே வாழ்வாகப் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர்களை அவர்கள் படிப்பறிவற்றவர்களாக இருந்தாலும் பரவாயில்லை திருக்குறளை முழுமையாக அறிந்த தகுதியுடன் இருந்தால் கூட அவர்களைத் திருக்குறள் ஆசிரியர்களாக நியமனம் செய்வித்து நம் குழந்தைகள் அதில் சேர்ந்து பயில வழி காண வேண்டும். 

இவ்வாறு திருக்குறள் பாடத்திட்டத்தில் சேர்ந்து கற்க முனையும்  குழந்தைகள் பட்டயப்படிப்பு வரை கசடறக் கற்பவை கற்றபின் ஒரு மிகச் சிறந்த மாணவர் உலகம் இன்னும் பதினைந்து ஆண்டுகளில் புதியதாக உருவாகி, வள்ளுவத்தின் வாக்கின்படி நிற்க அதற்குத் தக என நடப்பவராக முழுமை பெற்று வெளியேறினால் தமிழினத்தின் மேன்மையை அந்தத் தலைமுறையினர்தான் இனி நிர்ணயிப்பர். 

வள்ளுவத்தை உணர்ந்து படிக்க முன்வரும் இத்தகைய உன்னதமான அறிவாளிகளுக்கு உலகிலுள்ள மற்ற விஞ்ஞானக் கல்விகள் அனைத்தும் தாமாகவே வசப்படும்.

அதே போன்று தற்பொழுது பனிரெண்டாம் வகுப்பில் படித்தவர்களைத்  திருக்குறள் பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்துக் குறளின் நெறிக்கேற்ப வாழும் வகையில் ஒரு புதிய தலைமுறையை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கி அதில் சிறப்பாகத் தேர்ந்து நிற்க  அதற்குத் தக  என வாழ விரும்புபவர்களையும், மேற் குறிப்பிட்டவர்களையும்தான் இனி அரசு நிர்வாகத்தில் பணியமர்த்துவது என வரையறுத்தால் (இதற்கென ஒரு சட்டமே இயற்றினாலும் தவறே இல்லை)  வாழ்வியல், துறவியல், நிர்வாக இயல் மற்றும் அரசியலில் நாம் இதுவரை இழந்து வந்துள்ள அறம் முழுவதையும் வள்ளுவம் வழியில் மீட்டெடுத்தவர்களாவோம். 

அதன் பின்னர் அமைகின்ற அரசு அமைப்புகள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது வள்ளுவம் அரசியலுக்கென வகுத்த இருபத்தாறு குறள் நெறிப்படித்தான் தமிழகத்தை ஆளத் துவங்கும். 

தமிழக மக்களும் வள்ளுவம் வகுத்த நூற்று முப்பத்து மூன்று அதிகாரத்தில் அமைந்த ஆயிரத்து நூற்று முப்பது குறள்களின் வழிநடந்து தம் புவி வாழ்க்கையைப் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து இன்பமுடன் வாழ்ந்து இந்தப் பிரபஞ்ச வெளி முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவர்.
    வள்ளுவம் வாழ்ந்த காலத்திலேயே அவர் குறள்களில் நிலவும் சமூக ஒழுக்கக் குறைபாடுகள் இருந்திருக்கக்கூடுமெனவே நாம் இதுவரை தவறாகப் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்துவிட்டோம். ஆயின் அது உண்மையன்று. 

என் உள்ளுணர்வு உணர்த்துவது என்னவெனில் வள்ளுவர் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிச் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற ஒரு மாபெரும் சித்தராவார். 

      இரண்டாயிரம் வருடங்கள் கடந்த நிலையில் வாழும் தமிழினம் எவ்வாறு தம்முடைய காலத்தில் வாழ்ந்த தமிழினத்தை விடத் தாழ்வுற்று, தன்னை அடிமைப்படுத்திய பல்வேறு மொழி சார்ந்த நாகரீகங்களின் தாக்கத்தால் வாழ்வு தொலைந்திருப்பர் எனச் சிந்தித்திருப்பார்.

அத்தகு தாழ்வுற்ற நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் முறை பிறழ்ந்திருக்கும் எனச் சிந்தித்து  அத்தகைய நிலையிலுள்ள மக்கள் மக்கள் மனம் திருந்தி உயர்ந்து வாழும் வாழ்க்கை முறைகளை இப்போதே வகுத்திடுவோம் எனக் கருதியே குறள்களைப் படைத்திருப்பார். 

தமிழினம் படிப்படியாகப் பல்வேறு இனத்தவரின் படையெடுப்புகளால் தனது தனித்துவமான தன்மைகளை இழக்கத் துவங்கிய நாள் துவங்கி இதோ இன்று வரை அவர்தம் குறள் நெறிகள் எக்காலத்துக்கும் தேவைப்படுமாறு சிறப்பதிலிருந்தே இவ்வுண்மையினை நாம் அறியலாம்.

இத்தகு அற்புதச் சித்தரின் வழியில் தமிழினம் முழுவதுமாக நடக்கும் நிலை துவங்க, எனது இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறும் நாள் உருவானால், அன்றுதான் உண்மையிலேயே நம் உலகப் பொதுமறைக்குத் தமிழ் மக்கள் தாமாக முன்வந்து, ஆயிரத்து நூற்று முப்பது குறள்களைப் போன்று ஏராளமான வைர வைடூரிய இரத்தினங்கள் பதிந்த மகுடம் சூட்டிய திருநாளாகும்.

இந்தத் திருநாள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை! 

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் தமிழகத்தில் ஆட்சியமைக்கும்போது நிச்சயம் திருக்குறளுக்கென ஒரு உலகத்தரப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் உருவாக்கப்படும் என்பதில் எமக்குள் அணுவளவும் சந்தேகம் ஏதுமில்லை! 

அது மட்டுமல்ல ஐந்தாம் தமிழ்ச்சங்கம் வள்ளுவம் காட்டும் அறநெறியில்தாம் இனித் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தினையும் மேற்கொள்ளும் என்பதிலும் எமக்குள் மாற்றுக் கருத்து ஏதுமில்லை!

Read More...

சனி, 24 மே, 2014

அன்னைத் தமிழ் இருக்க அடகுத்தமிழ் எதற்கு?

Leave a Comment
நம் அன்னை மொழியின் தனிச் சிறப்பே நாம் உச்சரிக்கும் வார்த்தைக்கேற்ப உன்னதமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழுமாறு நம் முன்னோர்கள் அமைத்திருப்பதுதாம்.

நம்முடைய போதாத காலம் நம் மொழியில் ஏராளமான அயல்மொழி வார்த்தைகள் வந்து குவிந்து வழக்கு மொழி வார்த்தைகளாக மாறிவிட்டன. அவற்றில் இன்று வரை தமிழரை ஆரிய மாயையில் அமிழ்த்து வைத்துள்ள வடமொழி வார்த்தைகள்தாம் ஏராளம்.

இந்த வார்த்தைகள் தமிழர்களின் வாழ்க்கையில் நுழைந்ததை விட அந்த வார்த்தைகளின் எதிர்ப்பத விளக்கம் நம் மொழியின் முதன்மை உயிரெழுத்தாகிய அகரம் சேர்ந்து உச்சரிக்கும்போது ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறையையும், பதத்தையும் குறிப்பதாகவே அமைந்துள்;;ளன.

ஆயின் இதே பதம் தரும் நம் அன்னை மொழியின் உண்மையான வார்த்தைகளுடன் அகரம் சேர்த்து உச்சரிக்க இயலாது. இத்தகு வார்த்தைகள் தம்முடன் அகரம் சேராதவாறு அமைந்து எதிர்மறையான பதத்தையும் ஒழுக்கக்கேட்டையும் குறிப்பதில்லை எனும்போது தமிழ் மொழியின் சிறப்பினை எண்ணி வியப்பில் ஆழ்ந்தோம்!

உதாரணத்திற்குச் சில வார்த்தைகள்
வடமொழி        அகரம் சேர்ந்த வடமொழி  அன்னைத்தமிழ்       எதிர்ப்பதம்
  நீதி                            அநீதி                                        வாய்மை                 பொய்மை
 மங்கலம்                அமங்கலம்                            வளம்                        வளமின்மை
 சுத்தம்                      அசுத்தம்                                  தூய்மை                   தூய்மைக்கேடு
 சத்தியம்                 அசத்தியம்                              உண்மை,                 பொய்மை
 தர்மம்                      அதர்மம்                                   தானம்                      கருமி
 நியாயம்                 அநியாயம்                              உண்மை                  பொய்மை    
 யோக்யம்              அயோக்யம்                            நேர்மை                    பொய்மை    
 சௌகர்யம்           அசௌகர்யம்                        தாராளம்                   நெருக்கடி
 தைரியம்                அதைரியம்                            துணிச்சல்                கோழை
 இம்சை                    அகிம்சை                               துன்பம்                       இன்பம்        

                                              நீதி அநீதியாகும் காலம் இது.

இனி வரும் காலங்களில் தமிழகத்திலுள்ள நீதி மன்றங்களின் பெயர்களும் வாய்மை மன்றங்கள் என மாற்றி அழைக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் வாய்மை மன்ற நடுவர்கள் என அழைக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் தமிழகத்தில் வாய்மை தழைக்கும். தனி மனித ஒழுக்கம் மேன்மையுறும்.

ஒழுக்கம் சார்ந்த சங்கத் தமிழர்தம் அறவாழ்க்கை வாழ அகரம் சேர்ந்து எதிர்ப்பதம் தராது சங்கம் வைத்து வளர்த்த அன்னைத்தமிழ் இருக்க அடகுத்தமிழ் வார்த்தைகள் இனியும் நமக்கு அவசியமா?

ஆதங்கம்!
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதும் சில அற்புதமான பாடல்களில் அவர்கள் அறிந்தோ அறியாமலோ வட மொழி மற்றும் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுகின்றனர்!

சமீபத்தில் பிரபலமான ஒரு பாடலில் அவள் அப்படி ஒன்றும் கலரில்லை என ஆங்கிலமும் ஆனந்த யாழை எனும் பாடலில் பாஷைகள் தேவையில்லை என வடமொழியும் கலந்து எழுதுகின்றனர்! அன்னைத் தமிழில் நிறமில்லை மற்றும் மொழிகள் தேவையில்லை எனும் வார்த்தைகள் உண்டென்பதை இனியாவது இவர்கள் உணர்ந்து சற்றுக் கவனமாக மொழிக் கலப்பின்றி கவிதைகள் எழுத வேண்டும் என்பதே என் போன்ற தமிழ்ப் பற்றாளர்களின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!Read More...

வெள்ளி, 23 மே, 2014

தலை ஆடி! அய்யப்பன்!

Leave a Comment
                  
தலைப்பைப் பார்த்ததுமே ஒரு கேள்வி உங்களிடமிருந்து எழுமென்பது தெரிந்ததுதான்! தலையாடி கேள்விப்பட்டிருக்கிறோம்! அது என்ன தலை ஆடி சற்று விளங்கச் சொல் என நீங்கள் கேட்பதுவும் புரிகிறது! 

நான் வேண்டுமென்று இவ்வாறு எழுதவில்லை! ஆடி மாதத்தின் முதல் நாளன்று தமிழர்களால் கொண்டாடப்படும் தலையாடிக்கு உண்மையிலேயே அர்த்தம் புரிந்துதான் கொண்டாடுகிறோமா என்பதே எனக்கு விளங்காத காரணத்தால் அதற்கான உண்மைக் காரணம் இதுதான் என எனது உள்ளுணர்விலும், சொந்த அனுபவத்திலும் ஏற்பட்டதை  அப்படியே இங்கு விளக்க முற்பட்டிருக்கிறேன்!  

தமிழகத்தில் ஆடிமாதத் துவக்கத்தின் முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் இப்போதைய தலையாடியின் அர்த்தம் இதுதான்! 
    
வடவர்களின் திருமண அமைப்புப்படி தலையாடியைக் கொண்டாடுவதில் முதலிடம் வகிப்பவர்கள் அதே திருமண அமைப்பை ஏற்றுத் திருமணம் புரிந்த புதுமணத் தம்பதியினர்தாம்! 

இந்நாளில் தம் தாய் வீடு திரும்பும் புது மணப்பெண்ணை ஆடி மாதம் முழுவதும் தன் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதியாமல் பிரித்து வைப்பது தொன்று தொட்டு நிலவி வரும் விதிமுறை!

இதற்கு வடவரின் மத அமைப்பு தரும் விளக்கம் ஆடி மாதத்தில் கருத்தரிக்கும் மகளிருக்கு, கடும் கோடைக் காலமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அமையும்! அப்பொழுது நிலவும் கோடை வெய்யில்  கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதுதான்  வடவர்தம் விளக்கம்!  

இவ்விளக்கம் சரியானதெனவே நாமும் காலம் காலமாக அதே விளக்கத்தை ஏற்றுக் கொண்டு வந்துள்ளோம்! தலையாடிக்குத் தாய் வீடு திரும்பும் புது மணப்பெண்ணிற்கு திருமணத்தன்று பேசியபடி சீர்வரிசை செய்ய இயலாவிட்டால் காலம் முழுவதும் கணவருடன் சேர்ந்து வாழத் தலையாடியே தடையாகிப் போவது தனிக் கண்ணீர்க் கதை! அதை இங்கு எழுத முற்பட்டால் எனது எண்ணத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள வழியின்றிப் போய்விடும்! 

தலையாடியன்று எங்கள் கிராமத்தில் தொன்றுதொட்டு நிலவி வரும் வழக்கத்தையும் எனது இளமைக்கால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்வது இந்தத் தலைப்புக்கும் எனது உள்ளுணர்விற்கும், அனுபவத்திற்கும் ஏற்றதாகவே இருக்குமென நம்புகிறேன்! 

தலையாடிக்கு முதல் நாளே சிறுவர்களாகிய நாங்கள் எங்கள் கிராமத்தின் தோட்டங்களின் வேலி ஓரங்களில் வளர்ந்து நிற்கும் ஒருவகை மரத்தின் நீண்ட கழியினை வெட்டிச் சேகரித்து வீடு கொண்டு சேர்ப்போம்! இக் கழியினை எங்கள் ஊர்ப் பெரியவர்கள் அழிஞ்சிக் குச்சியென அழைப்பர்! நாங்களும் இன்றுவரை அதை அப்படித்தான் அழைத்து வருகிறோம்!

இந்த அழிஞ்சிக் குச்சியினைத் தலையாடியன்று தேங்காய் சுடும் பண்டிகைக்கெனவே நாங்கள் சேகரிப்போம்! சேலம் மாவட்டத்தில் மட்டுமே கொண்டாடப்படும் இந்தத் தேங்காய் சுடும் பண்டிகையையும் இங்கு விளக்க வேண்டியதுவும் தலைப்புக்கு மிக அவசியம்தான்! 
   
தலையாடிக்கு முதல் நாளன்றே சிறுவர் சிறுமியர்களான எங்களுக்கு எங்கள் தாய் வழித் தாத்தாவின் தோட்டத்திலிருந்து நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய தேங்காய்கள் பறிக்கப்பட்டு பிரித்துத் தரப்படும்! அவற்றை அன்றே நாங்கள் சொரசொரப்பான தரையில் தேய்த்;து வழுவழுப்பாக்குவோம்!

இதில் இன்னொரு வேடிக்கை சிறுவர்களாகிய நாங்கள் எதிரும் புதிருமாக அமர்ந்துகொண்டு தேங்காயைத் தரையில் உரசுவோம்! அப்பொழுது ஏற்படும் போட்டியில் எங்கள் தேங்காய்கள் மோதிக் கொண்டு உடைபடுவதுவும் எங்கள் கைகளில் காயமேற்படுவதுவும் பின்னர் உடைபட்ட தேங்காய்க்கு மாற்றுத் தேங்காய் வாங்க எங்கள் பெரியவர்களிடம் வசைபட்டதுவும் இன்றும் எனக்கு மனதில் நிலைக்கும் பசுமையான நினைவுகள்தாம்!

அடுத்து அழிஞ்சிக் குச்சியை நன்கு கத்தியால் தோல் நீக்கிச் சீவி வழுவழுப்பாக்குவோம்! பின்னர் வழுவழுப்பாக்கப்பட்ட தேங்காயின் மூன்று கண்களில் ஒன்றில் துளையிட்டு உள்ளிருக்கும் நீரைப் பாதியாக வெளியேற்றிவிட்டு அதன் உள்ளே தயாராக வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் நாட்டுச் சர்க்கரையினை இட்டு நிரப்பி பின்னர் அத் துளையினை அழிஞ்சிக் குச்சியின் கூர்முனை கொண்டு கெட்டியாக அடைப்போம்! 

அதன் பின்னர் அழிஞ்சிக்குச்சிக்கும் தேங்காய்க்கும் மஞ்சள் பூசி திருநீரு மற்றும் குங்கும திலகமிட்டு அலங்கரிப்போம்! இப்போது தேங்காய் சுடும் பண்டிகைக்கான தேங்காய் தயாராகி விட்டது. மாலை மூன்று மணியானதும் சிறுவர்களாகிய நாங்கள் அனைவரும் அவரவர் தேங்காய்களுடன் ஓரிடத்தில் ஒன்றுகூடி சருகுகள் நிரப்பித் தீ மூட்டித் தேங்காய்களைச் சுடுவோம்! 

இங்கும் தேங்காய் சுடுவதற்கு முண்டியடித்து ஏற்படும் போட்டியில் வலுத்தவர்களின் செயலால் இளைத்தவர்களின் தேங்காய்கள் உடைபடுவதும், அழிஞ்சிக்குச்சியின் முனையைத் தீயில் வாட்டும்போது அது எரிந்து தேங்காய் தனியாவதும் மற்றுமொரு வேடிக்கை!

இறுதியாக அனைவரது தேங்காய்களும் ஒருவழியாகச் சுட்டு முடித்தவுடன் வேகவேகமாக அனைவரும் எங்கள் ஊர்ப் பிள்ளையார் கோயிலை நோக்கி ஓடுவோம். எங்கள் குணம் அறிந்து எங்கள் பெரியவர்கள் ஏற்கனவே செய்திருந்த எச்சரிக்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு எங்களில் பெரும்பாலானவர்கள் அந்தத் தேங்காய்களைச் சரியாகப் பிள்ளையாரின் தலையில் அடித்து உடைத்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையைச் செயல்படுத்த ஓடிவிடுவர்!
    
இதை நன்கு அறிந்த எங்கள் பெரியப்பா தனது கடை ஆட்களை அனுப்பி நாங்கள் சிதறவிட்ட தேங்காய்களை திரட்டி வீடு சேர்ப்பார். இளவயதில் கடவுள் பயமுள்ள நானும் என் சகோதரிகளும் மட்டும் தேங்காய்களை ஒழுங்காகப் பிள்ளையார் முன்பு உடைத்து கற்பூரம் கொளுத்திக் கும்பிட்டு சகோதரிகள் தத்தம் தேங்காய்ச் சிதறல்களுடன்  வீடு திரும்பிய பிறகே நான் மற்றவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க ஓடுவேன்!

எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? எங்கள் கையில் தேங்காய் சுட்ட பின்னர் எஞ்சிய அழிஞ்சிக் குச்சியுடன் எங்கள் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள முள் காட்டில் பதுங்கியுள்ள ஓணான்களைத் தேடிப் பிடித்து அவற்றை அழிப்பதுதான்! இந்த முட்டாள்த்தனச் செய்கைக்கு எங்களுக்குக் கற்பிக்கப்பட்ட அர்த்தம் என்ன தெரியுமா? 

இராமாயண இராமன் இலங்கையைக் கடக்கப் பாலம் அமைத்தபோது இராமாயணக் கதைப்படி குரங்கு இனமாகச் சித்தரிக்கப்பட்ட தமிழர்களின் வானர சேனை மட்டுமன்றி பிற உயிர்களெல்லாம் தம்மாலான உதவிகள் அவனுக்குச் செய்தனவாம்! 

குறிப்பாக அணில் தன் பங்கிற்கு தாகத்தில் தவித்தவர்களுக்குத் தண்ணீர் கொணர்ந்து தந்ததாம்! அதனால் அணில் மேல் பரிவுற்ற இராமன் அதன் முதுகில் அன்புடன் தடவியதால்தான்தான் அதன் முதுகில் நீண்ட விரல் படிவ அடையாளம் தோன்றியதாம்! 

ஆனால் எங்களால் வேட்டையாடப்படும் ஓணான்கள் தம் பங்கிற்கு தாகத்தில் தவித்தவர்களுக்கு சிறுநீரைக் கொணர்ந்து தந்தனவாம்! அதனால்தான் இவற்றைக் கொன்று குவிக்க வேண்டுமாம்! இந்தக் கட்டுக்கதையை வழிவழியாகத் தமிழினச் சிறுவர்களுக்கு தமிழினத்தை மதத்தால் அடிமைப்படுத்திய வடவர்கள்தாம் திரித்து போதித்திருக்க வேண்டும்! நாங்களும் காலம் காலமாக இந்த முட்டாள்த்தனமான செயல்களில் வீணாகி ஓணான்களை வீரத்துடன் அழிக்கக் கிளம்பும் நிலைக்கு வந்துவிட்டோம்! 

அன்றைய தினத்தின் விபரீதம் கருதி உள்ளுணர்வாலோ என்னவோ பெரும்பாலான ஓணான்கள் எங்களிடம் சிக்காமல் பதுங்கி விடும்! அப்படியும் சிக்கும் பல அப்பாவி ஓணான்களுடன் சில பாம்புகளும் எங்களால் கொல்லப்படும்! 

அதிக உயிர்களைக் கொன்றவர்கள் அவற்றின் வாலைப் பிடித்து வானில் எறிந்து வெற்றிக் களிப்புடன் வீடு திரும்புவர்! அப்படித் திரும்பும்போது விளையாட்டிற்கு ஒருவரை ஒருவர் அழிஞ்சிக் குச்சியால் அடித்துக் கொள்வோம்! அதைக் கண்ணுறும் எங்கள் பாட்டி அப்பா அழிஞ்சிக் குச்சி கொண்டு அடித்துக் கொள்ளாதீர்கள் அழிந்து போய்விடுவீர்கள் என எச்சரிப்பார்! 

பக்தியறிவு தொலைந்து பகுத்தறிவுக்கு என் மனம் மாறிய தற்போதைய மனநிலையில் எனது இளமைக்காலச் செயலை நினைத்தால் வெட்கமும் வேதனையும் வடவர்களின் கட்டுக்கதைகளில் வீழ்;ந்து தவித்த அவலமும் நன்கு புரிகிறது! இப்பொழுது எனது உள்ளுணர்வு நடந்த கதை இதுதான் என ஆணித்தரமாகவே நம்பத் துவங்கிவிட்டது! 

                                 தமிழகத்தில் ஆரிய திராவிட யுத்தம் 
    
ஆரிய திராவிட யுத்தத்தின் விளைவுதான் மகாபாரதக் கதை! நாகரீகத்தில் உயர்ந்தவர்களும் பரதக்கலை வளர்த்ததால் பிற தேசத்தவர்களால் பரத கண்ட நிலத்தவரென அழைக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் அந்நாளைய வாழ்க்கை முறை அன்பு வழி ஒன்றுதான்!

முதலாவது ஆரிய திராவிட யுத்தமாகிய இராமாயணத்திலேயே ஒப்புக்கொண்ட இலங்கை போன்ற தங்க மயமான திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களையும் உயரிய பண்பு நலன்களையும் ஏராளமான செல்வ வளங்களைத் தமது திரைகடலோடித் திரவியம் தேடிய ஆற்றலாலும் கடுமையான உழைப்பாலும் நிறைத்துச் செழித்து வாழ்ந்திருந்த உயரிய இனம் தமிழினம்! 

இராமாயண யுத்தத்திலிருந்து மீண்டு மொழியறிவற்ற ஆரியர்களுக்கு மொழியறிவு கற்றுத் தந்து அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சீர்பட்டு தம் வாழ்வு நெறிகளை மீண்டும் சீரமைத்துக்கொண்ட மற்றுமொரு தருணத்தில் நாடு பிடிக்க வந்த நாகரீகமற்ற இனம்தான் ஆரியர்! கௌரவ சேனையினரான இவர்களின் படையெடுப்பின்போது நடைபெற்ற இரண்டாவது ஆரிய திராவிட யுத்தம்தான் மகாபாரதக் கதை! 

அன்பு வழி வாழ்ந்த தமிழினம் ஆரியரின் காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தின் விழைவால் ஏராள உயிர்ச் சேதத்தைச் சந்தித்திருக்க வேண்டும்! அந்நாளில் இன்றைக்கு ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வாழ்ந்திருந்த தமிழர்தம் வழிகாட்டியாகிய கண்ணன் ஆரியர்களின் தாக்குதலுக்குத் தப்பிப் பிழைத்த தமிழர்களை நெறிப்படுத்த வழங்கியதே கீதா உபதேசம்! அத்தகு தருணத்தில்தான் வடவர்களால் கண்ணனும் கொல்லப்பட்டிருக்க வேண்டும்!

வடக்கு கண்ணன் கங்கைக்கரையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்தம் பாதங்கள் அழகிய புறாக்கள் போலத் தென்பட்டதால் வேடன் ஒருவன் விட்ட அம்பு தைத்து தனது மானிட வாழ்வை முடித்துக் கொண்டதாக ஒரு கதையையும் மகாபாரத யுத்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற சண்டையில் கங்கைக் கரையோரம் வளர்ந்திருந்த புற்களைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டபோது கண்ணன் கொல்லப்பட்டதாக மற்றொரு கதையையும் கூறுகிறது!

என்னைப் பொறுத்தவரை திருவரங்கக் காவிரிக்கரையில் பாலின வேறுபாடு அற்று கோபியர்களுடன் விளையாடிக் கழித்து வாழ்ந்தவனாகத்தான் கண்ணன் இருந்திருக்க வேண்டும்! வைகைக் கரையாம் மதுரையில் பிறந்த கண்ணன் வடவர்களாகிய அரக்க வம்சத்தைச் சார்ந்த கம்சனுக்குப் பயந்து அவனது தாயால் காவிரிக்கரையில் தனது மாற்றாந்தாயின் அரவணைப்பில் வாழ அனுப்பப்பட்டிருக்க வேண்டும்!

கதை புனைவதில் வல்லவர்களாகிய வடக்கு மதுரையை மதுரா எனத் திரித்துக் காவிரியைக் கங்கையென மாற்றி கௌரவர்களாகிய ஆரியரைப் பாண்டவர்களெனவும் பாண்டவர்களாகிய தமிழர்களை அரக்கர்கள் எனவும் திரித்து கதை கட்டிவிட்டது! சத்திரியன் சூத்திரன் என வர்க்க பேதத்தை முழுவதுமாகப் பிரதிபலிக்கும் மகாபாரதக் கதையை எழுதியவர்கள் ஆரிய மதம் சார்ந்தவர்கள் என்பதைக்கூடத் தமிழினம் பகுத்தறிவுடன் நோக்க இன்றுவரை மறுக்கிறதே.

எது எப்படியோ தமிழகத்தில் நிகழ்ந்த இந்தத் கொடிய யுத்தத்தின் தாக்கம் எப்பொழுதும் தொடரக் கூடாதெனத்தான் மகாபாரத யுத்தம் துவங்கிய தமிழ் மாதமாகிய ஆடிமாதத்தின் முதல் நாளன்று வடவர்களின் காட்டுமிராண்டித்தனமான யுத்த முறையான கல் ஆயுதம் கொண்டு மண்டைகளை உடைக்கும் யுத்த முறை எக்காலத்தும் தமிழ் மண்ணில் தொடரக்கூடாதென்பதை உணர்த்தத்தான் தேங்காயில் நவதானியம் நிரப்பி வடவர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட கற்பனை தெய்வமான பிள்ளையாரின் தலையில் உடைக்கும் வழக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றியிருக்க வேண்டும்!

இதைத் தடுக்க அந்நாளில் முற்பட்ட தீவிர வடவர்கள் பிள்ளையார் சிலைமுன்பு குனிந்து தங்கள் தலையில் இந்;த தேங்காய் உடைப்பினை ஏற்றுக் கொண்டதே பின்னாளில் மகாதானபுரத் தேங்காய் உடைப்பு நிகழ்விற்கு வடவர்களால் கட்டுக்கதைகளுடன் வித்திட்டிருக்கக்கூடும்! இன்றுவரை மூளையைச் சிதைக்கும் இந்த முட்டாள்;த்தனத்தையும் தமிழினம் பக்தி முறையாக்கிக் கொண்டதுதான் வேதனையிலும் வேதனை!

அதற்குப்பின்னும் தமிழினம் வடவர்களின் கற்பனைக் கதைகளை நம்பித் தனது சுயத்தன்மையினை இழந்துவிட்ட ஓரு கால கட்டத்தில்தாம் மேற்கூறிய அணில் ஓணான் கதைகள் புகுத்தப்பட்டு தமிழினம் அதனைக் காலம் காலமாக நம்பித் தொலைத்து வந்துவிட்டது!

மகாபாரத யுத்தம் தன் பூமியில் நிகழ்ந்ததாக கதை கட்டும் வடக்கு ஆடிப்பண்டிகையைக் கொண்டாடுவது கிடையாது! இதிலிருந்தே வடவர்களின் கட்டுக்கதைகள் நமக்குப் புரிந்திருக்க வேண்டும். என்ன செய்வது? வடவர்களால் தமிழகத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட பிள்ளையார் ஊர்வலங்களில் அதிதீவிரமாக ஈடுபாடு காட்டி மதவாத அமைப்புகளில் பங்கேற்று நமது நீர்நிலைகளை மாசு படுத்திக் கொண்டிருக்கும் பக்தி மார்க்கத் தீவிரவாதத் தமிழினத்தைக் கறையேற்ற இன்னொரு பெரியார்தான் பிறந்து வரவேண்டும்! அதற்குள் ஆரியர்களின் சேது சமுத்திரத்திட்டத் தடையெனும் படையெடுப்பில் தமிழினம் வங்கக்கடலில் மூழ்கடிக்கப்படப் போவதென்னவோ சர்வ நிச்சயம்! 

தலையாடி கொண்டாடும் புதுமணத் தம்பதியினரைப் பிரித்து வைக்கும் தமிழின வழக்கத்தின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ஆரிய திராவிட யுத்தம் நிகழ்ந்த ஆடி மாதத்தில் கருவுறும் பெண்ணிற்குப் போர்க்குணம் படைத்த வாரிசு பிறக்கும் என்பதாலும் ஆரிய திராவிட யுத்தம் தொடங்கிய கசப்பான அந்த மாதத்தில் தமிழினத்திற்கு வாரிசுகளே பிறக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தினாலும்தான் தலையாடி கொண்டாடும் புதுமணத் தம்பதியினரைப் பிரித்து வைக்கும் வழக்கம் தமிழகத்தில் தோன்றியிருக்க வேண்டுமென்பதே எனது தீர்க்கமான முடிவு!

மகாபாரத யுத்தம் தொடங்கி முடிவுக்கு வந்து தமிழினம் நிம்மதிபெற்ற பதினெட்டாம் நாள் அன்று இனி இப்படி ஒரு யுத்தம் வரக்கூடாதெனத் தலை முழுக ஏற்படுத்தப்பட்டதே ஆடிப் பதினெட்டுப் பண்டிகை!

அதே போன்று கழுவாடியென ஆடி மாதக் கடைசியில் கத்தி முதலான ஆயுதங்களை ஆற்றில் கழுவும் வழக்கம் கூட இரத்தக்கரை படிந்த யுத்தங்கள் இனித் தமிழகத்தில் வரக் கூடாதென்ற நோக்கத்தில்தான்!

பெண்கள் குங்கும திலகம் இட்டுக்கொள்ளும் வழக்கம்கூட இந்த நிகழ்விற்கு பிறகுதான் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்!

மஞ்சளின் பிறப்பிடம் தமிழகம்! இதுபோன்ற யுத்தங்களால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவர்! எனவே இரத்தம் சிந்தும் இது போன்ற யுத்தங்கள் இனித் தமிழகத்தில் வேண்டாம் என்பதைக் குறிக்கவே மஞ்சளில் சில கலவைகளைச் சேர்த்து இரத்தச் சிவப்பாக்கி அதைப் பெண்கள் இடும் திலகமாக்கினர் தமிழர்கள்! 

பதினெட்டாம் பெருக்கன்று தமிழ்ப் பெண்கள் சுமங்கலி நோன்பிருந்து தனது கணவருக்கு மஞ்சள் கயிறு கட்டும் பழக்கம் தற்போது நிலவுகிறது! இதுகூட வடவர்களின் ஆதிக்கத் தமிழகத்துப் பிற்கால வழக்கம்தாம்! 

உண்மையில் சண்டைகள் ஓய்ந்து சகோதரத்துடன் வாழ்வோம் என்ற தமிழினத்தின் உயரிய கருத்தினை ஏற்று மனந் திருந்திய அந்நாளைய வடவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டப்பட்டதாக இவ்வழக்கம் இருந்திருக்க வேண்டும்! 

இதுவே வடக்கில் சகோதரத்துவத்தை உணர்த்த தங்கை தமையனுக்குக் கட்டப்படும் ராக்கிப் பண்டிகையாகப் பின்னாலில் ஆடி மாதத் துவக்கத்தில் வடக்கிலும் வடவர்களின் மூன்றாவது ஆரிய திராவிட யுத்தத்தின் ஆதிக்கத் தமிழகத்தில் புரோகித ஆரியர்கள் வயிறு வளர்க்க சுமங்கலிப் பூசை எனவும் மாற்றப்பட்டு விட்டது! 

இப்பொழுதும் கூட ஆடி மாதத்தில்தான் பெரும்பாலான குடும்ப உறவுகள் பிரிகின்றன! எங்கள் குடும்பமே இதற்குச் சான்று இன்றும் இலங்கையில்கூட ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில்தான் தமிழர்களுடனான சிங்களவர்களின் யுத்தம் உச்ச நிலையை அடைகிறது!

எனது பாட்டி கூட எங்கள் குடும்பப் பிரிவினை பெரும்பாலும் நிகழ்ந்த ஆடி மாதங்களில் அப்பா இது போர்க்கள காலமப்பா நிதானத்தைக் கடைப்பிடியுங்கள் என்று எங்களை மன்றாடி வேண்டுவார்! 

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் தமிழினம் ஆடிப்பண்டிகையை எப்படிக் கொண்டாடுவதென! ஏன் ஆண்டிற்கொருமுறை நம் பித்தலாட்ட அரசியல்வாதிகளால் நமது கர்நாடகச் சகோதரர்களுடன் சண்டை நிகழ்வும் நடைபெறுவதுகூட இந்த ஆடிமாதத் துவக்கத்தில்தானே! அவர்களுடன் மட்டுமா நமது யுத்தம் தொடர்கிறது? நமது பிற சகோதரர்களான ஆந்திரர்களுடனும் கேரளத்தவர்களுடனும் இதே மாதத்தில்தானே தண்ணீர்ப் பிரச்சினை ஏற்பட்டு வேண்டாத தேவையற்ற கசப்பான யுத்தங்கள் தோன்றுகின்றது!

நம் அரசியல்வாதிகளிடம் நிலவுகின்ற தற்போதைய நிறம் மாறுகின்ற ஓணான் குணங்களையும் அந்நாளில் இராமாயண இராமனுக்குத் துணை போன பச்சோந்தி குணத் தமிழர்களையும் கருத்தில் கொண்டுதான் ஆடி மாதத்தில் பச்சோந்தி குணங்களை தமிழர்கள் தங்களிடமிருந்து தலை முழுக வேண்டும் என நம் முன்னோர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்!

நாம்தான் அதை தவறாகப் புரிந்து கொண்டு ஓணான்களையும் பச்சோந்திகளையும் பாம்புகளையும் பலிவாங்கி நம் உயர் நாகரீகத்தை அடியோடு தொலைத்து விட்டோம்!

இதே தேங்காய் சுடும் பண்டிகைக்கும் இன்றைய கேரளத்தின் சபரி மலையில் இலட்சக்கணக்கான தமிழர்களால் வணங்கப்படும் அய்யப்பன் சந்திதியில் உடைக்கப்படும் நெய்த்தேங்காய் வழிபாட்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு!

அந்த ஒற்றுமை இதோ இவ்வாறுதான் துவங்குகிறது!

அய்யப்பன்!

தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களின் அளவற்ற வருகையால் தான் தவம் செய்யும் வனப்பகுதியில் மூச்சுத் திணறி வாழ்பவன்! 
சபரிமலையில் நிலவும் அசுத்தக் கேடுகளை அய்யப்ப பக்தர்களே ஒப்புக்கொள்கின்றனர்!

ஆண்டு முழுவதும் உழைத்த பணத்தைப் பூசைகள், தானங்கள்  எனப் பல வழிகளில் செலவழித்து அய்யப்பன் சந்நிதிக்கு வருடம்தோறும் சென்று வந்தால்தான் தாம் ஆண்டு முழுவதும் நலமாக இருப்போமென நம்பிக்கை சுமந்த பக்தர்களின் மாறிவரும் தற்போதைய தவறான பழக்க வழக்க முறைகள்  சீர்பட வேண்டுமென்பதே பெரும்பாலானவர்களின் நோக்கம்!

அய்யப்பனின் வரலாறு பற்றியும் அங்கு கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் பற்றியும் விமர்சிப்பதல்ல என் போன்றவர்களின்  நோக்கம்! ஆனாலும் பக்தியின் பெயரால் வரலாற்றில் மறைக்கப்பட்ட சில உண்மைகளைப் பக்தர்களுக்கு எடுத்து இயம்ப வேண்டியது எனது கடமை!

பதினெட்டாம்படி!

பதினெட்டாம்படித் தத்துவம் ஆன்மீகவாதிகளால் பலவாறாக விளக்கப்பட்டுவிட்டது! ஆனால் இந்தப் பதினெட்டாம் படிக்கும் மகாபாரத ஆரிய திராவிட யுத்தத்திற்கும் ஏராளமான ஓற்றுமைகள் உண்டு! 

இன்றைய சபரிமலை அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதி என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை! மகாபாரத யுத்தம் நடைபெற்ற பதினெட்டு நாட்களின் நினைவைத் தமிழர்கள் மறவாதிருக்க ஏற்படுத்தப்பட்டதே பதினெட்டாம்படித் தத்துவம்!

இமயம் முதல் குமரி வரை விரிந்து பரந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய தமிழர்களான பாண்டவர்களது நிலங்கiளை ஆரியர்கள் வஞ்சத்தால் அபகரித்துக்கொண்டனர்! அவற்றைக் கண்ணன் தலைமையில் மீட்டெடுக்க நடைபெற்ற யுத்தமே மகாபாரத யுத்தம்! 

மகாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது! இதில் கலந்துகொண்ட தமிழ் மன்னர்களில் அய்யப்பனும் ஒருவர்! பஞ்ச பாண்டவர்கள் என்றால் ஐந்து நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று அர்த்தம்! 

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பவையே ஐவகை நிலங்களாகும்! இதில் அய்யப்பன் குறிஞ்சி நிலத்திற்குச் சொந்தக்காரர்! இலட்சக்கணக்கான தமிழர்களால் வணங்கப்படும் இவருக்கு இணையாக இலட்சக்கணக்கான கேரள மக்களால் வணங்கப்படுபவர் அதே குறிஞ்சி நிலக்கடவுளாக தமிழர்களால் வணங்கப்படுபவர் தமிழ்க்கடவுள் முருகன்! 

சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாசானத் திருமேனி படைத்த பழனி மலையில் நின்ற நிலையில்  அமர்ந்த முருகனும் ஆண்டிக்கோலத்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி இருப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

வரலாறும் அர்ச்சுனனின் வாரிசுகள் தமிழகத்திலிருந்து இன்றைக்கு சபரிபீடம் என அழைக்கப்படும் இடததிற்குச் சென்று தங்கியதாகத்தான் இயம்புகிறது. 

எனவே அர்ச்சுனன் தவம் செய்த இடத்தில் அர்ச்சுனின் தவக்கோலச் சிற்பத்தை வைத்து அந்தக் குடும்பம் வழிபாடு செய்திருக்கவேண்டும். பின்னர் மதவாதத்தில் வீழ்ந்த சபரி பீடம் தற்போது உலவும் கதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆகக் கண்ணனின் உபதேசம் கேட்டும், அயலவர்களாக இருந்தாலும் பகையிடம் போர் செய்ய மறுத்த அர்ச்சுனன்தான் அய்யப்பனாகவோ அல்லது முருகனாகவோ இங்கு கருதப்பட வேண்டிய உண்மையான சான்றாகிறது! 

இது போன்ற கொடிய யுத்தங்கள் இனி இந்தத் தமிழ் தேசத்தில் நடைபெற வேண்டாம் எனவும், யுத்த எண்ணம் தவிர்த்தவர்கள் மட்டுமே என்னிடம் வாருங்கள் எனவும் போர் செய்ய மறுத்து ஆயுதங்கள் துறந்து காட்டில் சென்று தவம் செய்ய அர்ச்சுனன் அமர்ந்துவிட்ட இடமாகத்தான் சபரிமலை இருந்திருக்க வேண்டும்!  

அத்தகு நிலையில் அய்யனே அப்பனே என அவரைக் கெஞ்சி அழைத்து மீண்டும் போர் செய்ய அழைக்க முயற்சித்த கண்ணனின் செயலை நினைவு கூறவே அய்யப்பன் என்ற பெயர் அவருக்கு வந்திருக்க வேண்டும்!

தமிழகத்தில் ஆடி மாதத் துவக்கத்தில் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகைக்கும் அய்யப்பன் சந்நிதிக்கு இருமுடியில் சுமந்து சென்று உடைக்கும் நெய் நிரப்பப்பட்ட தேங்காய் வழிபாட்டிற்கும் அவ்வளவான வித்தியாசம் கிடையாது! 

தமிழகத்தில் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை ஒரே நாளில் முடிந்துவிடுவது! எனவே இந்த பண்டிகையில் சுடப்படும் தேங்காயும் அதில் நிரப்பப்படும் நவதானியங்களும் அன்றைய தினமே படைக்கப்பட்டு மக்களுக்கு உணவாகிவிடும்!

ஆனால் ஆதி நாட்களில் கால்நடையாகப் பல நாட்கள் சுமந்து சென்று அய்யப்பன் சந்நிதிக்குக் கொண்டு போகும் தேங்காயில் இது போன்று நவதானியம் நிரப்பி கொண்டு சென்றால் அது கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால்தான் அதில் நெய் நிரப்பிக் கெடாமல் கொண்டு சென்று அய்யப்பன் சந்நிதியில் உடைக்கும் வழக்கம் உருவாகியிருக்க வேண்டும்!

இது ஒரு உறுதிமொழி போன்றதுதான்! நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து உடலையும் மனதையும் தூய்மையாகப் பராமரித்துப் பின்னர் கால் நடையாக நடந்து சென்று அய்யப்பன் சந்நிதியில் நெய்த் தேங்காயை உடைத்து எந்தச் சமயத்திலும் சொத்து சுகங்களுக்காகச் சகோதர யுத்தங்களில் ஈடுபட மாட்டோம் என்று அந்த அய்யப்பனிடம் சரணமடைவதையே பதினெட்டாம்படி தத்துவம் காட்டுகிறது! 

ஆதியில் இந்த பயணம் ஆடி மாதத்தின் முதல் நாள் கிளம்பி ஆடிப்பதினெட்டாம் நாளன்று சபரிமலை சென்றடையுமாறு இருந்திருக்க வேண்டும்!

இதுவே கார்த்திகை மாதத்தில் விரதம் துவங்குவதென பின்னர் வந்த காலங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்! இன்றுள்ளது போன்று பஜனைகள், பக்தி முறைகள் எதுவுமே அந்நாட்களில் இருந்திருக்க வாய்ப்பில்லை! 

ஒருவர் புதியதாக ஏதாவது செய்ய அதை மற்றவர்கள் பின்பற்ற இதுவே இந்நாட்களில் ஏராள மாற்றங்களுடன் முகம் சுழிக்கும் வண்ணம் அமைந்துவிட்டது! வருடம் முழுவதும் தவறு செய்துவிட்டு அய்யப்பன் சந்நிதிக்குச் சென்றால் மட்டும் செய்த தவறுகளின் வினைகள் தீர்ந்துவிடுவதில்லை! அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும்! 

மண்டல விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து தங்களின் உடலையும் மனதையும் தூய்மையாக்கிக்கொண்டு சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இலட்சக்கணக்கில் சென்று அவதிப்பட வேண்டியதில்லை! 

வருடம் முழுவதும் செல்லும் வண்ணம் தங்களின் வழிபாட்டு முறையை மாற்றிக்கொண்டு இயற்கை நேசனாம் அய்யப்பன் அங்கு அமர்ந்துள்ள நோக்கத்தினை சரியாக புரிந்துகொண்டு அவன் சந்நிதியில் தங்களின் எண்ணங்களை இயற்கை சக்திகளிடம் சுயநல நோக்கமின்றி செழுத்தினால் இயற்கை வேண்டிய வளங்களை வாரி வழங்கும்!

தூய்மை கடை பிடிப்பதை விட்டுவிட்டு வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா செல்வதுபோலச் சென்று தங்கள் செயலால் வனத்தைப் பாழ் செய்பவர்கள் பேசாமல் தங்களின் இருப்பிடத்திலிருந்தே அந்த அய்யப்பனின் தூய்மையான எண்ணங்களுடன் தொடர்பு கொண்டு இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்பதே புறத்தூய்மையும் மனத்தூய்மையும் இல்லாது சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அய்யப்ப பக்தர்களிடம் நான் முன்வைக்கும் தாழ்மையான வேண்டுகோள்!

குறிப்பு!
கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்கள் நான் ஒவ்வாமை நோயின் பிடியில் இருந்தபோது பக்தி மார்க்கத்தில் இருந்தேன். அப்பொழுது இந்த நோய் குணமானால் அய்யப்பன் சந்நதிக்கு வருவதாக வேண்டிக்கொண்டேன். 

எனது நோய் குணமாகிப் பல ஆண்டுகள் சென்றபின்பும் ஐய்யப்பன் சந்நிதிக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை! மேலும் சித்தர்களின் எண்ணங்கள் என்னுள் ஆக்கிரமிக்கத் துவங்கியதால் எங்கும் நிறைந்த பிரபஞ்சப் பேராற்றல் என்னுள் நிறைவது போன்ற உணர்வுகளால் கோயில்களுக்குச் செல்வதும் குறைந்து விட்டது.

இந்நிலையில் ஐய்யப்பன் சந்நிதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது! எனது மைத்துனருடன் கோவையிலிருந்து அவரது நண்பர்கள் இருவருடன் செல்வதென முடிவாயிற்று!

ஒரே நாளில் சென்று திரும்புவதாக எங்கள் பயணம் அமைக்கப்பட்டிருந்தது. கோவை சென்று அங்குள்ள அய்யப்ப சேவா சங்கக் கோயிலில் இருமுடி கட்டிக் கொண்டோம்! 

கோவைக் கேரள நண்பரின் அழகிய சிறு வயது மகள் கரங்களால் எங்களின் இருமுடிப் பையில் அரிசியும் நாணயங்களும், நூறு ரூபாய் பணமும் இடப்பட்டுக் கட்டப்பட்ட பின்னர் எங்களின் பயணம் துவங்கியது! 

கடந்த 2013 ஆம் ஆண்டு சித்திரை மாதத் துவக்கத்திற்கு முந்தைய நாளில் நானும் அய்யப்பன் சந்நிதியில் இருந்தேன்.

என்னுள் அழுத்தமாகப் பதிந்த மேற்கண்ட பழைய நிகழ்வுகள் உறுதியாயிற்று! போர் செய்ய மறுத்துத் தவம் செய்யப் புறப்பட்ட அர்ச்சுனனே அய்யப்பன் வடிவில் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டேன்!

ஐயப்பன் கோயில் விதிப்படி நான் முதன் முதலாக அங்கு செல்வதால் கன்னிச்சாமி! எனக்கோ அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியதோடு மட்டுமன்றி நான் அங்கு கண்ட காட்சிகள் இனியும் அடிக்கடி அங்கு சென்று தவம் செய்யும் அர்ச்சுனனின் தவத்தினைக் கலைப்பதில்லை எனும் உறுதியான கொள்கையுடன் திரும்பினேன்!

வருமானத்திற்கெனவே அடர் வனத்தின் அமைதியைக் குலைக்கும் விதமாகக் கேரள அரசு கட்டியுள்ள ஏராளமான கட்டிடங்கள்,

வழி பாட்டு முறை என்ற பெயரில் வன விலங்குகளை அச்சுறுத்தும் வண்ணம் வழியெங்கும் ஒலிக்கும் வெடிச்சத்தங்கள்,

ஐயப்பன் சந்நிதியைச் சுற்றி குறைவான கூட்டத்திலும் கூட அன்று நிலவிய தூய்மையின்மைக் குறைபாடுகள்,

ஐய்யப்ப பக்தர்களால் வழியெங்கும் வீசப்பட்டு கிடக்கும் நெகிழிக் கழிவுப் பொருட்கள்,

ஆர்வத்துடன் அய்யப்பனைத் தரிசிக்க வந்து பருவமெய்திய சிறுமிகள் எனக் கேரளப் பெண் காவலர்களின் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி வாய் விட்டுக் கதறிய இரண்டு  கேரளச் சிறுமிகளின் கண்ணீர் சிந்திய முகங்கள்,

இவைகளும் இனி ஐய்யப்பன் சந்நிதிக்கு செல்லப் போவதில்லை என்ற உறுதியை என்னுள் ஏற்படுத்தின!

எங்கும் நிறைந்த பிரபஞ்சப் பெருவெளியில் கலந்து நிற்கும் அந்த அய்யப்பன் எனப்படும் அர்ச்சுனனின் எண்ணங்கள் இங்கிருந்தவாறே என்னுள் நிறைந்து உணரப்படும்போது அடிக்கடி அந்கு சென்று அந்த வன உயிரிகளின் நேசன், இயற்கைக் காவலன் அய்யப்பனின் தவத்தைக் கலைக்கப்போவதில்லை!

கொசுறுக் குறிப்பு!

நாங்கள் சென்றிருந்த மாதம் சித்திரைக்கு முதல் நாளான பங்குனியின் கடைசி நாள்!

கடுமையான வெயிற்காலம் அது! காலையில் அய்யப்ப தரிசனம் முடித்தவுடன் பம்பா திரும்பத் துவங்கினோம்! முன்னதாக அதிகாலையில் முதன் முறையாக அய்யப்பன் சந்நிதி செல்லும் மலைப்பாதையில் பயணக்களைப்பு தெரியாமல் இருக்க வழி நெடுக அய்யப்ப பக்தர்கள் ஒலித்த சாமியே சரணம் அய்யப்பா என்ற கோசத்தை மனதுக்குள் உச்சரித்தவாறு நானும் சென்றதால் பயணக் களைப்பே தெரியவில்லை!

அதே போன்று மதியம் கடும் வெயிலில் திரும்பி பம்பா ஆற்றை நெருங்கும்போது பாதையெங்கும் வெயிலின் கொடுமை தகித்தது! ஒரே நாள் பயணமென்பதால் பாதணி அணியாது பழக்கப்படுத்தாத கால்கள் சூடு தாங்காமல் தவித்தது! என்னை விட வயதில் இளைய எனது மைத்துனருக்கு இந்த அனுபவம் இன்னும் கடுமையாக இருந்தது!

மைத்துனரோ கடுமையான சூட்டை மட்டுமே கவனித்தவாறு வந்தார்! பம்பாவில் முதற் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருந்த ஒரு மண்டபத்தில் கருமை நிறக் கருங்கல் தளம் பாவியிருக்க கடும் வெயிலில் அங்கு நிழலுக்கு ஒதுங்க முற்பட்டு அது தோசை சுடும் கல் போலத் தகித்திருந்ததால் அதிலும் சூடு பட்டு மேலும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு, கடுமையான வெப்பம் நிறைந்த தார்ச் சாலையில் நடந்து  திரும்புவதற்குள் சூடு தாங்காமல் அவரது பாதங்கள் கொப்பளித்துப் போனது!

இதற்கு நேர் மாறாக நான் எனது மனதை அதே சாமியே சரணம் என்ற அய்யப்பனின் கோசத்தில் திசை மாற்றியதால் எனது எண்ணங்கள் வெயிலின் தாக்கத்திலிருந்த எனது பாதங்களைக் கொப்பளிக்காமல் காத்தது!

மாரியம்மன் கோயில்களில் தீ மிதிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தீ தங்களைச் சுடாது என்ற மனநிலையிலேயே கடப்பதால் அவர்கள் பாதங்கள் பாதிப்படைவதில்லை என்பதையும் தீ சுடும் என்ற மன நிலையில் கடப்பவர்கள் பாதி தூரம் கடப்பதற்குள் சூடு தாங்காமல் தவித்து ஓடி விடுவதையும் கண்ட அனுபவம் ஐய்யப்பன் கோயில் பயணத்தில் எண்ணங்களை மடை மாற்றியதால் கிடைத்த இந்த அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிந்தது!

இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும்! அடுத்த ஆண்டே மீண்டும் புதிய நண்பர்களுடனும் எனது மைத்துனருடனும் ஐயப்பன் சந்நிதிக்குச் செல்ல நேர்ந்தது! இந்த முறை எனது குடும்பத்தவர்களின் வழி அனுப்புதலோடு பயணம் துவங்கியது.

ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக வாகனத்திலிருந்து இறங்கும்போது அதன் கதவில் சிக்கி அணிந்திருந்த ஐயப்ப மாலை அறுந்துவிட்டது! நண்பர்கள் பதறினர்!

நானோ இது இயல்பாக ஏற்பட்டது! சகுனம் சரியில்லை என மூடத்தனமாக மனதை நான் சஞ்சலப்படுததிக் கொள்ள மாட்டேன் எனப் புன்னகையுடன் சொல்ல ஒரு நண்பர் அருகிலிருந்த கடையிலிருந்து நூல் வாங்கி வந்து அதை சரி செய்தார்!

இந்த முறை மழைக் காலம்! எனவே வெய்யிலின் தாக்கமற்ற அவ்வப்போது கடுமையாகவும் சற்று மனதிற்கு இதமான மழைச் சாரலும் நிறைந்த இரண்டாவது ஐயப்பன் தரிசனம்!

மூன்றாவது அழைப்பு அவரிடமிருந்து வந்தால் ஒருவேளை நான் அங்கு செல்லக்கூடும். அது அய்யப்பனின் அழைப்பாக மட்டுமே தவிர எனது விருப்பமாக நிச்சயம் இருக்கப் போவதில்லை!

முருகன் உட்பட இந்தப் புவியைக் காக்கப் போராடும் இயற்கை சக்திகள் எங்கு அழைத்தாலும் எப்பொழுது அழைத்தாலும் மட்டுமே நான் அங்கெல்லாம் செல்ல முடிகிறது! எந்தக் காரியமென்றாலும் மூன்று முறை என்பதாகத் தமிழர் வழக்கம் உள்ளது! எனவே எனது அடுத்த அய்யப்ப பயணம் நிறைவேறினால் அதுவே போதும் என்ற மன நிலையுடன் நிறைவு கொள்வேன்!

மேலும் அன்றும் அந்த வனப்பகுதியில் நான் நடந்து வரும்போது இதோ இந்தப் பாடல் வரிகள்தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது!

நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே!

இதை நான் செல்லும் பாதையில் கண்டு கொண்டேன் இந்தக் காட்டிலே!

எஙகும் நான் பார்க்கிறேன்! எதிரொலி கேட்கிறேன்! கேட்கிறேன்!

Read More...

வாய்மை மன்றங்கள்!

Leave a Comment
அறியாத வயது! இளமைக்கே உரிய துள்ளல்! இளவரசனின் தேர் அதி வேகமாக அந்தி மாலை நேரத்துத் தென்றல் காற்றைக் கிழித்தவாறு விரைந்து கொண்டிருந்தது!

எதிர்பாராத விதமாகக் தேரின் குறுக்கே ஓடி வந்தது ஒரு கன்றுக்குட்டி! இளவரசன் தேர்க்குதிரைகளை இழுத்து நிறுத்துவதற்குள் விபரீதம் நிகழ்ந்தது! 

அந்தோ! தேர்ச்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய அந்தக் கன்றுக்குட்டி பரிதாபமாகத் தன் இன்னுயிர் துறந்தது!

செய்வதறியாமல் அரண்மனைக்குத் திரும்பினான் இளவரசன்!

மறுநாள் விடிந்தது! அதிகாலைப்பொழுது! அரண்மனை வாயில் எதிரே கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மணி இடைவிடாது ஒலிக்கும் சப்தம்!

உறக்கம் கலைந்து எழுந்த மன்னர் ஏவலர்களை அனுப்பி விசாரிக்க, மணியை அடிப்பது ஒரு தாய்ப்பசு என்ற தகவல் கிடைத்ததும் விரைந்தோடி வெளியில் வந்தார்!

தன் கன்றின் மீது தேரை ஏற்றிக் கொன்ற குற்றத்திற்காக வாய்மை வேண்டிக் கண்ணீருடன் கதறி நின்றது அந்தப்பசு!

உடனடியாக அரசவை கூட்டப்பட்டது!  மன்னர் இளவரசனை விசாரித்தார்! குற்றம் செய்ததாக அவனும் ஒப்புக்கொண்டான்! 

மன்னர் உடனடியாகத் தம் தீர்ப்பினை வழங்கினார்!

தீர்ப்பின் விபரம் இதுதான்! இளவரசன் விரைவாகத் தம் தேரை ஓட்டிய அதில் சிக்கி உயிழந்த கன்றுக்குட்டி எவ்வாறு துடிதுடித்து இறந்ததோ அவ்வாறே இளவரசனையும் அதே தேர்ச்சக்கரத்தில் இடறச்செய்து மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதாம்!

மன்னரின் ஆணை உடனடியாக நிறைவேற்றப்பட்டு இளவரசன் தேர்ச்சக்கரத்தில் இடப்பட அவனது உயிரும் பிரிந்தது!

மதுரை அரண்மனை! 
அழுத கண்ணீருடன் தலைவிரிக் கோலத்தில் படு கோபமாகக் காட்சியளித்த அந்தப்பெண் மன்னரைச் சந்திக்க வேண்டுமென்கிறாள்!

வாயிற் காவலர்கள் தடுக்கவே அவர்களின் வேல்களைத் தட்டிவிட்டுப் புயலென அரண்மனையின் விசாரணை மண்டபத்தை அடைகிறாள் அப்பெண்!

யாரம்மா நீ என்கிறார் மன்னர்! எடுத்த எடுப்பில் தேரா மன்னா என அழைத்துத் தன் வழக்கினை அஞ்சாது உரைத்து இறுதியாகத் தன் கையிலிருந்த சிலம்பினை ஓங்கித் தரையில் அடிக்கிறாள் அவள்! உடைபட்ட சிலம்பிலிருந்து மாணிக்கப் பரள்கள் மன்னரின் உதட்டிலும் பட்டு அவையெங்கும் பரவுகின்றன!

மன்னருக்குத் தம் தவறு புரிகிறது! ஆராயாமல் தவறாகத் தீர்ப்பளித்து அந்தப் பெண்ணின் கணவரைக் கொன்ற தானே கள்வன் என நெஞ்சம் பதறியவாறு தன் தவறான செய்கையால் தனது ஆட்சியின் செங்கோலும் வெண்கொற்றக் குடையும் தாழ்ந்ததெனக் கதறி அக்கணமே தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான் மன்னன்!

இது தமிழின மன்னர்களின் வாய்மையை இன்றுவரை உலகிற்குப் பறை சாற்றிக்கொண்டிருக்கும் உண்மை நிகழ்வுகள்!

சற்று கற்பனைக்காக இன்றைய நிலையில் இதே போன்று மன்னர்கள் இருந்திருந்தால் இந்த வழக்குகள் இப்படிக்கூடத் திசை மாறியிருக்கும்!

தேர்க்காலில் விழுந்து இறந்ததற்குக் கன்றுக்குட்டியின் தற்கொலை எண்ணமே காரணம்! தனது கன்றினைத் தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தவறி அக் கன்றினைத் தற்கொலைக்குத் தூண்டியதற்குக் காரணமான பசுவினைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவு!

வாதி கொண்டு வந்த இன்னொரு காற்சிலம்பும் மன்னருக்கே உரியது! மன்னர் சோழ நாட்டுக்கு ஒரு முறை மரியாதை நிமித்தம் வந்திருந்தபோது தனது மனைவிக்கு அணிவிப்பதற்காக மாணிக்கப் பரல்கள் இடப்பட்ட காற் சிலம்புகளை வாங்கி வந்திருந்தார்!

அதில் ஒன்றுதான் களவு போனது! எனவே வாதியின் போலியான வாதம் செல்லாது! மன்னர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்காகவும், அரண்மனைக் காப்பாளர்களையும் மீறி அரசவைக்கு வந்து அவையின் நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் வாதிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது!

தமிழகத்தில் இன்றைய வாய்மை மன்றங்களின் நிலை இத்தகையதுதான் என்பதை ஊடகங்களில் அவ்வப்போது வரும் செய்திகள் பறை சாற்றுகின்றன! செல்வாக்குள்ள அரசியல்வாதிகளின் வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன!

நில அபகரிப்பு போன்றவற்றிற்கு வழக்குரைஞர் நியமித்துச் செலவிட இயலாத வறியவர்களின் வழக்குகளும் நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு அவற்றிற்கும் இதே நிலைதான்!

வாய்தா வாங்கியே நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு வழக்குகள் தேங்கிக் கிடக்கும் இன்றைய வழக்கு மன்றங்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதுதாம். 

இதைவிடக் கொடுமையென ஊழல் செய்த நடுவர்களை மாற்ற வேண்டுமென வழக்குரைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதாக ஊடகங்களில் வரும் செய்தியையும் நாம் ஆழ்ந்த கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது!

எனினும் இந்த நிலை இப்படியே தொடரப் போவதில்லை! வழக்கு மன்றங்களில் வலியவர்களுக்கு ஒரு நியாயம், எளியவர்களுக்கு ஒரு நியாயம் என்ற நிலையும் ஒரு நாள் மாறத்தான் போகிறது!

அப்படி மாறும் காலம் வரும்போது  இனி தமிழகத்திலுள்ள அனைத்து கிளை மாவட்ட, உயர் வாய்மை மன்றங்களும் இதோ இப்படித்தான் செயல்படப் போகின்றன!

எப்படி என்பதை நாம் நம் தமிழினத்தின் சங்க கால நிகழ்விற்குள் சென்றுதான் விரைவில் நனவாகப் போகும் கனவினைக் காணத் தயாராக வேண்டும்!

அரச அவை! அரியாசனத்தில் பால் மணம் மாறாத இளம் சிறுவன்! 

வழக்குத் தொடுக்க இரு நடுத்தர வயதினர் அவைக்கு வருகின்றனர்! 

அரியாசனத்தில் அமர்ந்திருந்த சிறுவனைக் கண்டவுடன் அவர்களுக்குத் தயக்கம்!

இந்தச் சிறுவனா நம்முடைய வழக்கினைத் தீர்த்து வைக்கப் போகிறவன்?

வந்தவர்களின் தயக்கம் உடனடியாகச் சிறுவன் மனதில் பட்டது! அவன் இருவரையும் நோக்கித் தாங்கள் நாளை இதே அவைக்கு வாருங்கள்! வேறு ஒருவர் உங்களின் வழக்கினை விசாரித்து நியாயம் வழங்குவார் எனக்கூறி வழியனுப்பி வைக்கிறான்!

மறுநாள் அரச சபை கூடுகிறது! அரியாசனத்தில் மிகக் கம்பீரமாக நரைத்த முடியுடன் ஒரு வயோதிகர் அமர்ந்திருக்கிறார்! 

வந்தவர்கள் தங்கள் வழக்கின் விபரங்களைத் தெரிவிக்கின்றனர். வழக்கின் தன்மையைக் கவனமாகக் கேட்டறிநத அந்த முதியவர் வந்தவர்களே வியக்கும் வண்ணம் மிகச் சரியான நியாயத்தை வழங்குகிறார்.

வழக்கு தொடுக்க வந்தவர்களின் முகத்தில் வழக்கு எவருக்கும் பாதகமின்றி முடிந்ததற்காக மகிழ்ச்சிப் புன்னகை! அவையோ தீர்ப்பின் தன்மையை நினைந்து வியந்து சிலிர்த்தது! 

அரியாசனத்திலிருந்த முதியவர் தன்னுடைய நரைமுடியைக் கலைகிறார்! 

வழக்கு தொடுத்தவர்கள் உட்பட அவையுமே ஒரு கணம் திகைப்பில் ஆழ்ந்து அடுத்த கணம் அவை முழுக்க ஆரவாரத்துடன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தவரை வாழ்த்திய ஒலி விண்ணில் எதிரொலித்தது!

நரை முடித்து நியாயம் சொன்னது நேற்று அதே அரியாசனத்தை அலங்கரித்த இளம் பால் மணம் மாறாச் சிறுவன்தாம்! 

நியாயம் சொல்ல வயது ஒரு தடையாகாது என நிரூபித்த இந்தச் சிறுவன் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழின வரலாற்றில் இன்றும் பேசப்படுகிறான்!

இவன் போலவே மிக இளம் வயதில் வாய்மை மன்ற நடுவராகி ஏராளமான சிக்கலான வழக்குகளைத் தீர்த்து வைத்த கதைகளுக்குச் சொந்தமானவன் மரியாதை இராமன்!

நான்கு சுவர்களுக்குள் சட்டப் பிரிவுகளையும், திறமையான வாதங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பாரபட்சமான தீர்ப்புகள் இனி வரும் தமிழகத்தில் வழங்கப்படப்போவதில்லை! 

இதோ மேற்கண்ட வழியில் வழக்கின் தன்மையை அது நிகழிடத்திலேயே உரிய புலனாய்வுகளை தேவைப்பட்டால் நடுவர்களே மேற்கொண்டு இனி வரும் காலங்களில் வழக்குகளைக் கையாண்டு நியாயம் வழங்கும் நிலை உருவாகும்!

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைக்கப் போகும் தலைமை வாய்மை மன்றத்தின் புதுமையான செயல்பாடுகளால் ஏராளமான

சிபிக்களும், நெடுஞ்செழியன்களும், கரிகாலர்களும், மரியாதை இராமர்களும் நடுவர்களாக அமர்ந்து

வழக்குகளைத் தெள்ளத்தெளிவாக வழக்கின் நிகழ்விடமும் நடுவர்களே நேரடியாகவோ மறைமுகமாகவோ சென்று ஆராய்ந்து நியாயம் வழங்கும் வகையில் வாய்மை மன்றங்கள் செயல்பட்டு

இனி வரும் காலங்களில் வழக்குகள் இன்றி வழக்குரைஞர்களின் தேவையும் குறைந்து சட்டப் படிப்பிறகும் அவசியமின்றிச்

சட்டக் கல்லூரிகளே காத்து வாங்கும் நிலையும் நிச்சயம் ஒரு நாள் வரத்தான் போகிறது!

Read More...