தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு! சட்டசபை அடிதடி காணாத நாடு!


சட்டசபையில் அமளி! எதிர்க்கட்சியினர் வெளி நடப்பு! இரு தரப்பாரும் கைகலப்பு!

அவை உரிமை மீறலுக்காக கைது நடவடிக்கை!

அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததற்காகச் சட்ட சபையிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடை நீக்கம்!

முதல்வர் அறிக்கையை ஆதரித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆரவாரம்!

முதல்வர் அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கூச்சல்!

மைக்குகள், மேசைகள் உடைப்பு!

அவையை நடத்த இயலாமல் சபை பலமுறை ஒத்தி வைப்பு!

அமைச்சரவை மாற்றம்! அமைச்சரவையில் உள்ள மூன்று அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக மூன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு!

சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொகுதிப் பக்கமே காணப்படுவதில்லை!

தமிழக சட்ட மன்றத்திற்குப் புதிய கட்டிடம் கட்டப்பட்டது! அது பழைய ஆட்சியாளர்கள் கட்டியதென்பதால் அதனைத் தற்போதைய ஆளும் இயக்கம் மருத்துவமனையாக மாற்றம் செய்ய உத்தரவிட்டது!

இவை போன்ற செயல்கள் தமிழகத்தில் அடிக்கடி சர்வ சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள்!

இதைப் பற்றியெல்லாம் மக்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? மக்களின் வரிப்பணத்தை வீண் செய்யும் இது போன்ற நிகழ்வுகள் தேவைதானா?

இப்படி எவர் வேண்டுமானாலும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடிந்தால் அது சனநாயக நாடு!

எதிர்த்துக் கேள்வி கேட்டால் எத்தகைய பின் விழைவுகள் ஏற்படும் என்பதையும் அதனால் கேள்வி கேட்பவருக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடுமென்றால் அது எந்த நாடு என்பதையும் மக்களின் முடிவிற்கே விட்டுவிடலாம்.

எது எப்படியோ ஒரு வேளை ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் உயரிய நோக்கங்களை, தமிழக மக்கள் சக்தி தெளிவாகப் புரிந்து கொண்டு தமிழகத்தை ஆளும் பொறுப்பினை ஐந்தாம் தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கினால்,

தமிழத்தில் அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் முதல்வர் கூட இருக்க மாட்டார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் அநாவசியமாகக் குறுக்கிடும் பகுதி, இணை, துணை, கிளை, ஒன்றிய, வட்ட, நகர, மாவட்டச் செயலாளர்கள், வாரியத் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என எவருமே இருக்க மாட்டார்கள்!

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் பரரம்பரியம், மரபு, கவுரவம், என்பன போன்ற பிரிட்டன் காலத்திய நடைமுறையில் தற்போது செயல்படும் சட்டசபை எனப்படும் சட்டமன்றமே இனி ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் இருக்கப்போவதில்லை!

தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றி எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல அதிகார பலம் மிக்க ஆளும் கட்சியினர் என்பவர்கள் கூடத் தமிழகத்தில் இனி இல்லை எனும் நிலையைத் தமிழகத்தில் ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைக்கப்போகும் புதிய வாய்மை மன்றம் உருவாக்கும்!

அது எப்படிச் சாத்தியமாகும்?
புதிய வாய்மை மன்றத்தின் செயல்பாடுகள் எப்படியெல்லாம் திகழும்?

என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதென்பது இப்போதைக்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கம் சிதம்பர இரகசிய மறை பொருளாக்கி; வெகு விரைவில் உலகிற்கு உணர்த்திச் சாத்தியமாகப் போகும் உண்மைச் செய்தி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!