அன்னைத் தமிழ் இருக்க அடகுத்தமிழ் எதற்கு?

நம் அன்னை மொழியின் தனிச் சிறப்பே நாம் உச்சரிக்கும் வார்த்தைக்கேற்ப உன்னதமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழுமாறு நம் முன்னோர்கள் அமைத்திருப்பதுதாம்.

நம்முடைய போதாத காலம் நம் மொழியில் ஏராளமான அயல்மொழி வார்த்தைகள் வந்து குவிந்து வழக்கு மொழி வார்த்தைகளாக மாறிவிட்டன. அவற்றில் இன்று வரை தமிழரை ஆரிய மாயையில் அமிழ்த்து வைத்துள்ள வடமொழி வார்த்தைகள்தாம் ஏராளம்.

இந்த வார்த்தைகள் தமிழர்களின் வாழ்க்கையில் நுழைந்ததை விட அந்த வார்த்தைகளின் எதிர்ப்பத விளக்கம் நம் மொழியின் முதன்மை உயிரெழுத்தாகிய அகரம் சேர்ந்து உச்சரிக்கும்போது ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறையையும், பதத்தையும் குறிப்பதாகவே அமைந்துள்;;ளன.

ஆயின் இதே பதம் தரும் நம் அன்னை மொழியின் உண்மையான வார்த்தைகளுடன் அகரம் சேர்த்து உச்சரிக்க இயலாது. இத்தகு வார்த்தைகள் தம்முடன் அகரம் சேராதவாறு அமைந்து எதிர்மறையான பதத்தையும் ஒழுக்கக்கேட்டையும் குறிப்பதில்லை எனும்போது தமிழ் மொழியின் சிறப்பினை எண்ணி வியப்பில் ஆழ்ந்தோம்!

உதாரணத்திற்குச் சில வார்த்தைகள்
வடமொழி        அகரம் சேர்ந்த வடமொழி  அன்னைத்தமிழ்       எதிர்ப்பதம்
  நீதி                            அநீதி                                        வாய்மை                 பொய்மை
 மங்கலம்                அமங்கலம்                            வளம்                        வளமின்மை
 சுத்தம்                      அசுத்தம்                                  தூய்மை                   தூய்மைக்கேடு
 சத்தியம்                 அசத்தியம்                              உண்மை,                 பொய்மை
 தர்மம்                      அதர்மம்                                   தானம்                      கருமி
 நியாயம்                 அநியாயம்                              உண்மை                  பொய்மை    
 யோக்யம்              அயோக்யம்                            நேர்மை                    பொய்மை    
 சௌகர்யம்           அசௌகர்யம்                        தாராளம்                   நெருக்கடி
 தைரியம்                அதைரியம்                            துணிச்சல்                கோழை
 இம்சை                    அகிம்சை                               துன்பம்                       இன்பம்        

                                              நீதி அநீதியாகும் காலம் இது.

இனி வரும் காலங்களில் தமிழகத்திலுள்ள நீதி மன்றங்களின் பெயர்களும் வாய்மை மன்றங்கள் என மாற்றி அழைக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் வாய்மை மன்ற நடுவர்கள் என அழைக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் தமிழகத்தில் வாய்மை தழைக்கும். தனி மனித ஒழுக்கம் மேன்மையுறும்.

ஒழுக்கம் சார்ந்த சங்கத் தமிழர்தம் அறவாழ்க்கை வாழ அகரம் சேர்ந்து எதிர்ப்பதம் தராது சங்கம் வைத்து வளர்த்த அன்னைத்தமிழ் இருக்க அடகுத்தமிழ் வார்த்தைகள் இனியும் நமக்கு அவசியமா?

ஆதங்கம்!
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதும் சில அற்புதமான பாடல்களில் அவர்கள் அறிந்தோ அறியாமலோ வட மொழி மற்றும் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுகின்றனர்!

சமீபத்தில் பிரபலமான ஒரு பாடலில் அவள் அப்படி ஒன்றும் கலரில்லை என ஆங்கிலமும் ஆனந்த யாழை எனும் பாடலில் பாஷைகள் தேவையில்லை என வடமொழியும் கலந்து எழுதுகின்றனர்! அன்னைத் தமிழில் நிறமில்லை மற்றும் மொழிகள் தேவையில்லை எனும் வார்த்தைகள் உண்டென்பதை இனியாவது இவர்கள் உணர்ந்து சற்றுக் கவனமாக மொழிக் கலப்பின்றி கவிதைகள் எழுத வேண்டும் என்பதே என் போன்ற தமிழ்ப் பற்றாளர்களின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!