ஐந்தாம் தமிழ்ச்சங்க அரசியலில் தாய்மை உணர்வு!


 ஐந்தாம் தமிழ்ச்சங்க அரசியலில் தாய்மை உணர்வு!
தாய்மை! தமிழ் மொழியிலுள்ள இந்தச் சொல்லுக்குள் எத்தனை ஆழமான அர்த்தமும் அதற்குரிய உன்னதமும் பொதிந்துள்ளது என்பதை நான் பெண்ணாக மாறி; அதை அனுபவித்துதான் எழுத முடியும்!
எனினும் எனது அடுத்த பிறவியில் நான் பெண்ணாகப் பிறந்து இந்த உணர்வினைக் கட்டாயம் பெறுவேன்! உயிர் எந்த உடலையும் எடுக்குமென்ற சித்தர்கள் வாக்கு அறியாதவனா நான்?
தாய்மை உணர்வை அனுபவிக்க ஆணாகிய என்னால் முடியாவிட்டாலும் தாய்மை உணர்வின் வெளிப்பாட்டினைப் பல்வேறு கட்டங்களில் நானும் அனுபவித்துள்ளேன்!
உடற்கூற்றில் அழகற்ற பெண்ணாக இருந்தாலும் தாய்மை அடைந்த நிலையில் ஒருவரைக் காணும்போது ஓர் உன்னத அழகு அவரிடமிருந்து ஏராளமாக வெளிப்படுவதைக் கண்டு நான் அதிசயத்துள்ளேன்! தாய்மையின் அற்புதமான பருவம்; வெளிப்படுத்தும் உண்மை இது!
இன்றுள்ள பெண்களுக்குத் தாய்மை உணர்வு குறைந்து வருவதாகவே நான் கருதுகிறேன்! இது கற்பனையுமல்ல! எனது வணிக அனுபவத்திலேயே நான் இதை நேரடியாகக் கண்டுள்ளேன்!
அதிலும் குறிப்பாக பெண்களே பெண்ணுக்கு எதிரான உணர்வுடன் இருப்பதை நான் நேரடியாகப் பலமுறை கண்டு அதிர்ந்துமிருக்கிறேன்!
முன்னர் நான் பணி புரிந்த எங்கள் கடைக்கு தங்களின் இரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் வரும் பெண்கள் ஆண் குழந்தைகள் கேட்கின்ற விலை உயர்ந்த பொருட்களை எவ்வித மறுப்புமின்றி வாங்கித் தருவதையும் அதே சமயம் பெண் குழந்தைகள் விரும்பும் பொருட்களை அவர்கள் முகம் வாடும்படி வாங்கித்தர முடியாதென மறுப்பதையும் பலமுறை நான் கண்டுள்ளேன்!
இங்கு பொருட்களில் மட்டுமல்ல பாரபட்சம்! உணவிலும் கூடத்தான்! பெண் குழந்தைக்கு ஒரு ரூபாய்க்கு இனிப்பு வாங்கித்தர மறுக்கும் தரும் தாய் ஆண் குழந்தை கேட்;டவுடன் பத்து ரூபாய்க்கு விலை உயர்ந்த இனிப்பினை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கித் தருவார்! அடுத்து தனது மகளுக்கும் அதே விலையில் வாங்கித் தருவாரா என நான் எதிர் பார்ப்பேன்;! என் எண்ணத்தில் பெரும்பாலும் மண்தான் விழும்!
இதுவாவது பரவாயில்லை! ஆண்பிள்ளை தன்னோடு இருப்பவன் பெண் பிள்ளை அடுத்த வீடு செல்பவள்தானே என அவர்கள் நினைப்பதாக நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம்!
ஆனால் கல்வியிலும் பெண் குழந்தைகளுக்குப் பாரபட்சமான நிலைப்பாடு இருப்பதுதான் என்னுள் வேதனை உணர்வுகளைப் பரவ விடுகிறது!
எங்கள் கடைக்கு வரும் தொன்னூறு சத பெண் குழந்தைகளின் சகோதரர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதை நாங்கள் நேரடியாக ஒரு ஆய்வின் வாயிலாக விசாரித்து அதிர்ந்துள்ளோம்!
இது போன்ற மனநிலையுடைய பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளுக்குக் கல்வியிலும் பாரபட்சம் காட்டினாலும், தங்களுக்குக் கிடைக்கும் பாரபட்சக் கல்வியிலும் தங்களின் திறமையை உயர்வாக வெளிப்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று வெளிக்காட்டும் பெண்; குழந்தைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன்!
இத்தகு பாரபட்சத்துடன் வளர்ந்து வந்துள்ள மாணவியர்தான் இனி வரும் எதிர்காலத் தமிழகத்தில் தாய்மை உணர்வு தழைத்தோங்கப் பாடுபட வேண்டும்! தங்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் இனியும் தடைபடாத வண்ணம்; தமது எதிர்காலப் பெண் சந்ததியினர் பெற வேண்டுமென்ற உறுதியான மன நிலையை இவர்கள் பெற வேண்டும்!
சரி தலைப்பிற்கு வருவோம்! அரசியலில் தாய்மை உணர்வு இன்றுள்ளதா என்றால் நிச்சயம் கிடையவே கிடையாது! சோந்த வாழ்விலேயே தாய்மை உணர்வைத் தொலைத்துள்ள நமது அரசியல்வாதிகளுக்கு அரசியல் வாழ்வில் தாய்மை உணர்வு எங்கே வரப் போகிறது?
இந்தப் போக்கு இப்படியே தொடர இனியும் தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது! தாய்மை உணர்வுள்ள தொண்டு மனம் படைத்த நல்லவர்கள்தாம் இனி வருங்காலத் தமிழகத்தை வழி நடத்துகின்ற பொறுப்பிற்கு வரவேண்டும்!
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் சுட்டிக்காட்டும் நல்ல தொண்டு மனம் கொண்ட தேர்தல் பிரதிநிதிகள், தங்களுக்கு வாக்களித்த மக்களைக் காட்டிலும் தங்களுக்கு எதிராக வாக்களித்த மக்களின் மனநிலையில் மகத்தான மாற்றங்கள் உருவாகும் வகையில் நல்லவர்களாக நிச்சயம் தாய்மை உணர்வுடன் நடந்து கொள்வர்!
தராசின் இரு பக்கமும் சரிசமமாக நிற்பது போன்று தங்களை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்திய மக்களையும் தங்களுக்கு எதிராக வாக்களித்த மக்களையும் பாரபட்சமின்றி நடத்துமாறு வாய்மையே வெல்லும் ஐந்தாம் தமிழ்ச் சங்கத் தாய்மை உள்ளம் கொண்ட நல்லவர்கள் செயல்படுவர்!
இந்த மகத்தான மாற்றங்கள் பெண்களுக்கென ஐம்பது சத இட ஒதுக்கீடுடன் கூடிய வாய்மை மன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைய இருக்கும் எமது ஐந்தாம் தமிழ்ச்சங்க இயக்கத்தால் நடைமுறைப்படுத்தப் போவது நிச்சயம் நடந்தே தீரும்! இதனை நடைமுறைப்படுத்தத் தயாராகும் தாய்மை உள்ளங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!