பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே! பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே! நல்லவரெல்லாம் நலம் பெறுவார்! என்ற நம்பிக்கை பிறக்கிறது!

பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே!
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே!
நல்லவரெல்லாம் நலம் பெறுவார்!
என்ற நம்பிக்கை பிறக்கிறது!

        பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அருகமைந்தது முன்னர் நான் பணியாற்றிய எங்கள் வணிக நிறுவனம்!

எங்களிடம் தான் வாங்கிய எழுது பொருட்களுக்கு பணம் போதவில்லை என்றால் அடுத்த நாளே மீதியைத் தந்து விடுவதாக வாக்களிப்பர் மாணவியர்!

நாங்கள் மாணவியின் பெயர் மற்றும் படிக்கும் வகுப்பினைக் கேட்டுக்கொண்டு கடன் தருவோம்;! அடுத்தநாள் மாலை நாங்கள் மறந்து விட்டாலும் தான் வாங்கிய பொருளுக்குரிய மீதித் தொகையினை (அது ஒரு ரூபாயாக இருந்தாலும்) மிகச் சரியாகத் தந்துவிட்டு நன்றி கூறி விடைபெறும் மாணவியரின் நேர்மை குணம் கண்டு நாங்கள் அகம் மகிழ்வோம்;!

நூற்றுக்குத் தொன்னூற்றென்பது சத மாணவச் செல்வங்கள் எங்களின் நம்பிக்கையை வீண் செய்ததில்லை! தவறும் ஒரு சத மாணவச் செல்வமும் மறதியால்தான் அந்தத் தவறைச் செய்திருப்பார்!

பள்ளிப் பருவத்தில்தான் மாணவச் செல்வங்களிடம் நேர்மை குணம் நிறைந்து வழிவதை எங்களால் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது!

அதே சமயம் பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட மற்றவர்கள் வாங்கிய பொருளுக்குப் பணம் போதவில்லை என்றால், எங்களிடம் அடுத்த முறை தருவதாக வாக்களித்தாலும் நேர்மை தவறித் தங்களின் பாக்கியைத் தருவதற்குத் தவிர்ப்பதையும் பலமுறை எங்களால் சந்திக்க முடிந்தது!

இதற்கு முழுக் காரணம் இந்தத் தொகையைத் தராவிட்டால் இந்த வணிகருக்கு என்ன ஆகிவிட போகிறதென்று அவர்களிடமுள்ள  அலட்சியம்தாம்!

இந்த எமது அனுபவத்தால் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு, சக மக்களிடம் பழகி, தங்களின் படிக்கும் பருவத்தில் கட்டிக்காத்த நேர்மையைத் தவற விட்ட, நம் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் நிலையை எண்ணிப் பரிதாபப்படத்தான் முடிகிறது!

எனினும் இந்த நிலை ஒரு நாள் மாறத்தான் போகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில் இணையும் ஏராளமான மாணவ மாணவியர் நம் தாய்த்தமிழகத்தில் சங்க காலத்தில் நிலவிய தமிழர்தம் வாய்மை குணத்தை மீட்டெடுப்பர் என்ற எமது இலட்சியக் கனவு நிறைவேறும் நாள் வெகு விரைவில் வரும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!