இலஞ்சமும் ஊழலும் அடியோடு ஒழிந்தால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்!


1) இலஞ்சமும் ஊழலும் அடியோடு ஒழிந்தால் ஏராளமான வரிப்பணம் அரசுக்கு கிடைக்கும்!
2) வரிப்பணம் ஏராளம் மீதமாகும் நிலை உருவானால் வரிகள் குறையும் நிலை உருவாகும்!
3) உலகத்தர சாலை வசதிகள்!
4) உலகத்தர சுகாதார வசதிகள்!
5) திட்டமிடப்பட்ட கிராமப்புற வீட்டு வசதி அமைப்பு!
6) திட்டமிடப்பட்ட நகர்ப்புற வீட்டு வசதி அமைப்பு!
7) அதி நவீன வசதிகள்  கொண்ட போக்குவரத்து வசதிகள்!
8) உலகத் தரக் கல்வி வசதி!
9) விபத்துகள், தற்கொலை உணர்வுகள், அற்ற நிலை உருவாதல்!
10) மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தல்!
11) கடன் சுமை விலகுதல்!
12) சேமிப்புத் திறன் கூடுதல்!
13) ஏற்றத் தாழ்வு நிலை அகலுதல்!
14) அறியாமை, கல்லாமை, மூடப்பழக்க வழக்கங்கள் விலகுதல்!
15) உழைப்பாளர்கள் பெருகிச் சோம்பிக் கிடககும் நிலை விலகுதல்!
16) உலகத்தர விளையாட்டுத் திறன்!
17) கொலை, கொள்ளை, வன்முறைகள், பேராசை, வக்கிரங்கள், அற்ற நிலை!
18) அன்பு, கருணை, இரக்கம், வாய்மை, கடமை உணர்வுகள் பெருகுதல்!
19) வழக்கு மன்றங்கள், சிறைச்சாலைகளுக்கு வேலையற்ற நிலை!
20) கலை, பண்பாடு, நாகரீகம் பெற்ற மக்கள் கொண்ட சமுதாய அமைப்பு நிலை!
21) அடக்குமுறை, ஏகாதிபத்தியம், அலட்சியப் போக்கு அகலுதல்!
22) தனி மனித ஒழுக்கம் மேம்படுவதால் நாட்டின் ஒட்டு மொத்த ஒழுக்கம் மேன்மையுறல்!
23) தலை சிறந்த ஆட்சியினரின் செயல்பாட்டால் சுற்றுச் சூழல் மேம்படுத்தப்பட்டு மழை வளம் பெருகும் சீரான நிலை!
24) மது, போதை, சூது போன்ற தீய பழக்க வழக்கங்கள் அகலுதல், -----------------------------------------------

நாட்டின் வளர்ச்கிக்குப் புற்று நோயைவிடக் கொடுமையான இலஞ்சம் ஊழல் எனும் இந்த இரண்டு சொற்களுக்கு உரிய அவமானகரமான செயல் ஒழிந்து விட்டால் எழுத எழுத ஏராளம் நன்மைகள் கிடைப்பதைக் காண்கிறோம்!

இலஞ்சமும் ஊழலும் அறவே இந்த நாட்டிலிருந்து ஒழிந்துவிட்டால் ஏற்படப்போகும் மேற்கண்ட நன்மைகளை விட இன்னும் அளப்பரிய நன்மைகளைப் பெறுவதற்குரிய சிறந்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு தேர்தலிலும் இன்னமும் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இரண்டு மத்திய மாநிலத் தேர்தல்கள், இடையில் மூன்றாவதாக வரும் உள்ளாட்சித் தேர்தல்களைச் சில நாட்கள் தங்களை மகிழ்விக்க வரும் திருவிழாக்களாக எண்ணி மகிழ்ந்துவிட்டு தங்களின் வாழ்வாதாரங்களையும், நாட்டின் முன்னேற்றத்தையும் இந்த இரண்டு நோய்களுக்குச் செலவிடவே தங்களின் உழைப்பினை வரிப்பணமென வீண்செய்யும் மக்களை எண்ணி மனம் கலங்குகிறது!

தேர்தல் திருவிழாக்கள் கடுமையான சட்டங்கள் வாயிலாக இன்னும் எளிமையாக்கப்பட வேண்டும். பணபலமற்ற சாமான்யர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெரும் நிலை உருவாக வேண்டும்! 

இந்த மாற்றம் ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் நிச்சயம் உருவாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!