அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நட்டத் தவறுக்குக் காரணம்

அரசுப்பேருந்து வழித்தடங்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தனியாருக்கு ஒதுக்குவதாக அரசு முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன!

தரமற்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு அரசுப் பணிமனைகளில் கட்டப்படும் பேருந்துகள் வண்ணம் பூசி அழகாகக் காட்சியளித்தாலும்

வெகு விரைவில் தளர்ச்சியுற்று சன்னல் கண்ணாடிகள் ஆடுதல், மேற்கூரைகளில் மழை நீர் ஒழுகுதல், லொடலொடவெனச் சத்தம் எழுப்புதல்!

அரசுப் பேருந்துகளின் பணிமனைகளில் காணப்படும் அலட்சியம் காரணமாகத் தூய்மையின்றி இருத்தல்,

பழுதடைந்த பாகங்களை உடனடியாகச் சரி செய்யாததால் விரைவில் காயலான் கடைக்குச் செல்லும் தரத்தில் காட்சியளித்தல்!

(சமீபத்தில்கூட ஏராளமான எலும்புக்கூடாகி நிற்கும் பேருந்து அணிவரிசையை ஒரு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் கண்டு நெஞ்சம் பதறியது)

ஒரே தரத்திலுள்ள அரசுப் பேருந்துகள்!

ஆயின் கட்டண விகிதமோ சாதாரணம், விரைவு, இடைநில்லா, குறித்த நிறுத்தங்களில், எனப் பல்வேறு விதத் தாறுமாறான கட்டணங்கள் காரணமாக சாதாரணப் பேருந்துகள் ஓரளவு நிறைந்த நிலையில் செல்ல

அதிகக் கட்டணப் பேருந்துகள் இரவு நேரங்கள் தவிரப் பெரும்பாலும் பகலில் இரண்டு மூன்று நபர்களுடன் காத்து வாங்கிச் செல்லும் நிலை!

(இதே சமயம் தனியார் பேருந்துகளில் மக்கள் புளிமூட்டையாக அடைபடாமல் பயணிக்கும் நிலையைத் தமிழகத்தில் காண்பது அரிதிலும் அரிது)

தனியார் பேருந்துகள் அரசுப் பேருந்துகளுக்கு முன்னும் பின்னும் இயக்கும் வண்ணம் நேர நிர்ணயம் செய்யப்படுவதால் காத்திருந்து சொகுசாகவும் விரைவாகவும் செல்லும் தனியார் பேருந்துகளில் ஏறவே விரும்பும் மக்கள்!

ஒரு தனியார் பேருந்துக்கு முன்னர் கிளம்பும் அரசுப் பேருந்து தனது மந்தமான பயணத்தை வெளிப்படுத்துவதும், பின் தொடர்ந்து வரும் தனியார் பேருந்து இந்த வாகனத்தை முந்திச் சென்று காத்திருக்கும் பயணிகளை அள்ளிச் செல்லும் நிலை!

ஊழல் மிகுந்த நிர்வாகம் இவையெல்லாம்தான் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் நட்டத்தில் ஓடுவதற்கு அதி முக்கிய காரணம்!

அரசுப்பேருந்தும் தனியார் பேருந்துகளும் ஒரே வித கட்டணம் வசூலிக்கும் நிலையில்

தனியார் பேருந்துகள் மட்டும் நிறைந்த தரத்துடனும், விரைந்த வேகத்துடனும், அதிக இலாபத்துடனும் இயங்குவதைக் கருத்தில் கொண்டாலே

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நட்டத் தவறுக்குக் காரணம் எங்கிருக்கிறது என்பது சிறு குழந்தைக்குக்கூட விளங்கிவிடும்!

அரசியலில் சூரப்புலிகளாக விளங்கும் இன்றைய நம் ஆட்சியாளர்களுக்கும் எதிர்த்து அறிக்கைகள் விடும் எதிர்க்கட்சியினருக்கும் இவையெல்லாம் எம்மைப்போன்ற பாமரர்கள் எழுதி விளக்க வேண்டிய அவசியம் இல்லைதான்!

என்ன செய்வது! அடிக்கடி இது போன்ற செய்திகளைப் படிக்கும்போது  பாரதி பாடிய நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடல் வரிகள் மனதில் வந்து வலிக்கிறதே!

டீசல் இல்லை 
உதிரி பாகங்கள் இல்லை
இன்சூரன்சு இல்லை
டோல் கட்டணம் இல்லை

இனி ஊழல் செய்ய எதுவும் இல்லை

லாக் டவுன் காலத்தில் தனியார் பேருந்துகள் புத்தம் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட நிலையில்

எப்படி சாத்தியம்
ஓடும் தனியார் பேருந்துகள் அனைத்தும் ஊழல்வாதிகள் வசம்.

பழைய தனியார் பேருந்து உரிமையாளர்கள் காணாமல் அடிக்கப்பட்டனர்

அரசுப் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்கள் லஞ்சம் கொடுத்து வாங்கிய வேலையை சரிகட்ட தனியார் பேருந்துகளின் சமரசக் கையேந்தல்

ஆளும் கட்சி தொழிற்சங்கம் அதன் கூட்டணி பச்சோந்தி தொழிற்சங்கங்கள் அடிக்கும் ஊழல் கொள்கையும் இதில் அடங்கும்
 



இதுவும் சில காலமே

வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!