கையேந்தி பவன்


ஊராட்சி, நகராட்சி சென்று பிறப்பு இறப்புச் சான்றிதல் கேட்டால்,

வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானச் சான்றிதழ் கேட்டால்,

அரசு உதவிகள் பெற அரசு அலுவலகங்கள் சென்றால்,

மின் வாரியம் சென்று புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால்,

வணிக வரி அலுவலகத்தில் கணக்குச் சமர்ப்பிக்கச் சென்றால்,

ஓட்.டுநர் உரிமம் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றால்,

காவல் நிலையம் சென்று வழக்குப் பதிவு செய்யச் சொன்னால்,

வழக்கு மன்றத்தில் வழக்கு சம்பந்தமாகக் கையொப்பமிட வேண்டுமென்றால்,

பணி நியமன ஆணை பெறச் சம்பந்தப்பட்ட துறைகள் சென்றால்,

பணி மாறுதல் பெறத் துறை சார்ந்தவர்களிடம் ஒபபுதல் பெறச் சென்றால்,

அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதி பெறச் சென்றால்,

பேருந்து நிலையங்களில், இரயில் நிலையங்களில், இரயில்களில்,

போக்குவரத்து நெரிசல்களில், தெருக்களில், பூங்காக்களில், கடற்கரைகளில்,

ஏன் இவ்வளவு சோதனை எனக் கோயில்களுக்குச் சென்றால்,

உலக வாழ்க்கை வெறுத்துச் செத்தபிறகு மயானம் சென்றால்,

செல்லுமிடமெல்லாம் கையேந்தும் கரங்கள்!

பல இடங்களில் அதிகாரக் கையேந்தல்கள்!

சில இடங்களில் பரிதாபக் கையேந்தல்கள்!

உழைப்பாளிகள் நிறைந்து உழைப்பால் உயர்ந்த நாடு எனப் போற்றப்பட்ட என் தாய்த் திரு நாடே!

செந்தமிழ் நாடே!

ஏன் இப்படிக் கண்ட இடமெல்லாம் கையேந்துபவர்கள் நிறைந்த ஏழை நாடாகிப் போனாய்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!