குப்பைத் தொட்டிகள்

காய்கறிக் கழிவுகள்,

நெகிழிப் பைகள்,

கிழிந்த பாய்கள்,

உடைந்த பாட்டில்கள்,

உடைந்த குண்டு, குழல் விளக்குகள்,

பயன்படாத குருந்தகடுகள்,

கிழிந்த பள்ளிப் பைகள்,

உபயோகமற்ற பழைய செருப்புகள், காலணிகள்,

இரும்பு ஆணிகள்,

வாகனக் கழிவுகள்,

உயவு ஆயில் கழிவுகள்,

சாயக் கழிவுகள்,

பேப்பர், நெகிழி தேநீர்க் கப்புகள்,

இவற்றுக்கெல்லாம் சிகரமாக
கள்ளக் காதலில் பிறந்து கொல்லப்பட்ட சிசுக்ககள்,

இன்னும் எழுத ஏராளம் உள்ள இவையெல்லாம்
தமிழகத்தில் ஏராளமாகக் கொட்டப்படும்
குப்பைத் தொட்டிகள் எது தெரியுமா?

அவை நம்முடைய வீடுகள் அலுவலகங்களின் வாசலில் அமைந்துள்ள
சாக்கடைகள்தாம்!

இவ்வளவும் செய்து விட்டு சாக்கடைகள் அடைபட்டுக் கொசு உற்பத்திச் சாலைகளாக்கி கொசுக்கடியில் இரவு முழுக்க சுகப்படுவதும், வியாதி வாங்கிச் சுகப்படுவதும்,

சாக்கடைகளைச் சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் அவற்றைச் சேகரித்து வீட்டு முன் குவித்து வைத்து அவை மீண்டும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் வரை அந்த நாற்றத்தைச் சுகமாக அனுபவிப்பதும்,

அடை மழைக் காலங்களில் கழிவுக் குப்பைகளால் அடைபட்ட சாக்கடைகளில் மழை நீர்  செல்ல வழியின்றிச் சாலைகளில் பெருக்கெடுத்தோடும் சாக்கடைக் கழிவு நீர் கலந்த நீரில் ஆசை தீர நடந்து ஆனந்தப்படுவதும்தான்

நம் தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!