நான்குபேர் நான்கு விதமாகப் பேசுவர்!

தானியங்கி வர்த்தகத் துறையில் எனககு ஒரு ஆண்டுகள் மட்டுமே பணி புரிந்த அனுபவம்! 

எனது சிறிய தந்தையாருடன் இணைந்து இந்த வர்த்தகத்தைத் தொடர முற்பட்ட ஒரு ஆண்டிலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வேறு வழியின்றி எங்களுக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத ஒரு ஊரில் அமைந்திருந்த மற்றொரு கிளையினை எங்கள் முதலீட்டிற்கு ஏற்ப பிரித்துக்கொண்டு அங்கு சென்று வணிகம் செய்வதென முடிவு செய்தேன்! அப்பொழுது வனக்கு வயது பத்தொன்பதுதான்!

எனக்கிருந்த குறைவான வணிக அனுவத்தைக் கருத்தில் கொண்டு எனது சித்தப்பாவும் அவரது நண்பர்களும் தனித்து ஒரு நிறுவனத்தை துவக்காதே என அறிவுறுத்தினர்! ஏன் தந்தையும் அவர்கள் அறிவுரையை ஏற்றுத் தனியே தொழில் துவங்க அச்சப்பட்டார்!

எனினும் எனது முடிவு இறுதியாக இருந்ததால் எனது தந்தையும் வேறு வழியின்றி தனித்து வணிகம் செய்ய ஒப்புக்கொண்டார்! நாங்கள் வணிகம் செய்ய முடிவு செய்த ஊர் எங்களுக்கு முற்றிலும் புதியது! ஓரிரு பழுது பார்ப்பவர்களின் அறிமுகம மட்டுமே எங்களுக்கு அப்போது இருந்தது! குறிப்பாக அந்த ஊரில் ஒருவர் மட்டுமே தனித்து பெரிய பணிமனையைக் கொண்டிருந்தார்!

எங்கள் வணிகமோ கடன் கொடுத்தால் திரும்ப வராத ஒரு வழிப் பாதை போன்றது! பெரிய பணிமனையை உடையவரை மட்டுமே நம்பி நாங்கள் வணிகம் செய்தாக வேண்டிய கட்டாயம்! எனினும் கடன் கொடுத்து எங்கள் முதலை நாங்கள் இழக்க விரும்பவில்லை!

இந்த நிலையில் அவரைப் புறக்கணித்துவிட்டு அதே ஊரில் உள்ள சிறிய பழுது பார்க்கும் பணிமனை உரிமையாளர்களை வாடிக்கையாளர்களாகப் பெற்று வணிகம் செய்யத் துவங்கினோம்! எங்கள் முதலீட்டுக்கு ஏற்ற ஊரல்ல அது! வணிகமும் மிகக் குறைவாகவே துவங்கியது!

இந்த வணிகத்தில் நான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ஏராளம்! ஏராளம்!
போலிகள் உலவும் வணிகம் எங்களுடையது! எனக்கோ இந்த வணிகத்தில் நேர்மையை மட்டுமே கடைப்பிடிப்பது எனத் தீர்மானமாகிவிட்டது! எனவே தரமான பாகங்களை வாங்கிப் பொருத்தும் பணிமனை உரிமையாளர்களை நாங்கள் தேடிப்பிடித்து வணிகம் செய்யத் துவங்கினோம்! 

எங்கள் வணிகத்தில் நாங்கள் காட்டிய நேர்மையும், அசலான பாகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றதாலும் அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் எங்களின் பெயர் பரவி அங்குள்ள அசலான உதிரி பாகங்கள் பொருத்தும் பணிமனை உரிமையாளர்கள் எங்களைத் தேடி வரத் துவங்கினர்! 

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் எங்களுக்குப் போட்டியாளர்களே இல்லாத நிலையில் நாங்கள் அந்த ஊரில் தரமான உதிரிபாகங்களை மிக மலிவாக விற்பனை செய்து வளர்ந்திருந்தோம்! அதன் பிறகு அந்த ஊரில் இருந்த பெரிய பணிமனை உரிமையாளர் நான்கு நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு எங்களுக்கு எதிராக ஆரம்பித்த ஒரு நிறுவனமும் எங்களின் தரம் மற்றும் நேர்மை காரணமாக ஐந்தாண்டுகளில் மூடுவிழா கண்டது!

இலாப நோக்கமின்றிய நிலையில் நாங்கள் எங்கள் நிறுவனத்தை நடத்துவதற்காக வாங்கிய கடன் தொகைகள் காரணமாகவும் எனது குடும்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகள் காரணமாகவும் பத்தாம் ஆண்டில் எங்களுக்கு ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக நாங்கள் எங்களது வீடு மற்றும் நகைகளை விற்பனை செய்ய வேண்டியதாயிற்று!

இந்த நிலையில் நான் ஏற்கனவே எனக்குப் பழக்கமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்த அருகிலிருந்த நகரில் தனித்து வணிகம் செய்வதெனத் தீர்மானித்தேன்!

இது குறித்து எனது நண்பர்கள் உறவினர்கள் எனப் பலரிடம் விவாதித்தேன்! தலைப்பிற்கேற்றவாறு நான்கு பேர் நான்கு விதமாகச் சொன்னார்கள்! அவை எல்லாமே என்னை நம்பிக்கையிழக்கச் செய்வனவாகவே இருந்தன!

நான் வணிகம் செய்வதாகத் திட்டமிட்டிருந்த நகரில் கடும் போட்டிகள் நிலவுவதாகவும், அங்கு வணிகம் துவக்கினால் வணிகம் செய்வதே கடினம் எனவும், மேலும் நான் அங்கிருக்கும் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட இயலாது எனவும், பலரும் பலவிதமாகச் சொல்லத்துவங்கினர்! இறுதியாக நான் அங்கு ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய்க்கு கூடவா வணிகம் ஆகாது என வினவ அதுகூட முடியாதெனத்தான் பதில் வந்தது! எனவே நான் அத்துடன் எவரிடமும் இனி கருத்து கேட்பதில்லை என முடிவு செய்துவிட்டேன்!

அதன் பின்னர் நான் அந்த நகரில் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய்க்கு வணிகம் கிடைத்தால் போதும் என்ற இலக்குடன் எனது வணிகத்தைத் துவக்கினேன்! 
வணிகம் துவங்கிய பின்னர் உண்மையைச் சொல்லப்போனால் என்னுடைய விலைதான் அந்த நகரிலேயே மிகவும் குறைவாக இருந்தது! நான் எதிர்பார்த்த தினசரி ஐநூறு ரூபாய் என்ற வணிக இல்க்கும் எனக்கு முதல் மாதத்திலிருந்தே கிட்டியது!

வணிகம் துவங்கிய ஓராண்டிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் நான் சந்தித்த சில விழைவுகள் மற்றும் தவறுகள் காரணமாக எனது வணிக வாழ்வு அங்கும் முடிவுக்கு வந்த பத்தாவதாம் ஆண்டுக்கு முந்தைய ஒன்பதாம் ஆண்டில் அங்கு எனது தினசரி சாரசரி வணிகம் ரூபாய் எட்டாயிரமாகும்! அதாவது வணிக மொத்த விற்றுமுதல் அளவு அந்த ஆண்டு ரூபாய் இருபத்தைந்து இலட்சங்களாகும்!

இளமையில் எனக்கிருந்த துணிச்சலும், அதன் பின்னர் ஒரு ஊரில் வணிகம் செய்து பெற்ற அனுபவம் இரண்டும்தான் எனது நம்பிக்iயின் பெரிய முதலீடாக இந்தப் பெரிய நகரிலும் இருந்தது! அதுவே என் எதிர்பார்ப்பிற்கு இணங்க சீரான வணிக வளர்ச்சியையும் கொடுத்தது! 

இந்த இரண்டு இடங்களிலும் நான் செய்த பெரிய தவறே கடன் வாங்கிக் கடன் கொடுத்து வணிகம் செய்ய முற்பட்டதுதாம்! முதல் ஊரில் சொத்துக்களும் நகைகளும் இருந்ததால் என்னால் அந்தக் கடன்களை அடைக்க முடிந்தது! இரண்டாவது நகரிலோ எனக்கு வணிகத்தில் முதல் ஊரில் கிடைத்த அதே கசப்பான அனுபவங்களே கிடைக்க நான் பட்ட கடன்களை அடைக்க வழியின்றியே எனது வணிகத்தை முடிவிற்குக் கொண்டு வரவேண்டியதாயிற்று!

தலைப்பிற்கே வருவோம்! வணிகத்தைப் பொருத்தவரை நாம் விவாதிக்கும் நான்குபேரும் நான்கு விதமான கருத்துகளைத்தான் சொல்வார்கள்! நம்பிக்கையளிக்கும் விதமாகச் சொல்பவர்கள் குறைவுதான்! நாம் நம்முடைய வணிகத்தில் கொண்டுள்ள அனுபவம், வணிக நேர்மை, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதம், நம்முடைய வணிகம் அமைகின்ற இடம் என்பன போன்றவற்றை நாம் எவ்வாறு சரியாகக் கணித்து நடந்து நம் வணிகத்தைக் கையாள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வணிக எதிர்பார்ப்பு நிச்சயம் ஈடேறும் என்பதுதாம் என் இருபத்தைந்தாண்டு கால வாழ்வில் நான் கண்ட உண்மையான அனுபவமாகும்!

கருத்துகள்

  1. நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்களா அல்லது உங்களுடைய அந்தக் கனவை நிதியுடன் நிறைவேற்ற விரும்புகிறீர்களா?
    உங்கள் பில்களைச் செலுத்த, உங்கள் வணிகத்தைத் தொடங்க அல்லது விரிவாக்க உங்களுக்கு கடன் தேவையா?
    கடனளிப்பவர்கள் அல்லது வங்கிகளிடமிருந்து அதிக கடன் கட்டணம் / தேவைகள் இருப்பதால் கடன் பெறுவதில் சிக்கல் உள்ளதா?
    எந்தவொரு நியாயமான காரணத்திற்காகவும் உங்களுக்கு கடன் தேவையா?
    ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாலினம் அல்லது இருப்பிடம் எதுவாக இருந்தாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன் வழங்க நாங்கள் வந்துள்ளோம், ஆனால் வயது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
    உங்களுக்குத் தேவையான தொகை குறித்த பேச்சுவார்த்தைக்கு எங்களிடம் திரும்பிச் செல்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
    எங்கள் கடன் வகை
    நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி ரீதியாக உதவ இந்த கடன் உருவாக்கப்பட்டது. எந்தவொரு காரணத்திற்காகவும், வாடிக்கையாளர்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எங்கள் நிறுவனத்திடமிருந்து பொருத்தமான கடன் திட்டத்தைக் காணலாம்.

    விண்ணப்பதாரரின் தரவு:
    1) முழு பெயர்:
    2) நாடு
    3) முகவரி:
    4) செக்ஸ்:
    5) வேலை:
    6) தொலைபேசி எண்:
    7) பணியிடத்தில் தற்போதைய நிலை:
    8 மாத வருமானம்:
    9) தேவையான கடன் தொகை:
    10) கடன் காலம்:
    11) இதற்கு முன் விண்ணப்பித்தீர்களா:
    12) பிறந்த தேதி:
    குளோரியா எஸ் கடன் நிறுவனத்தை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும்:
    {gloriasloancompany@gmail.com} அல்லது
    வாட்ஸ்அப் எண்: +1 (815) 427-9002
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!