தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

தமிழ்நாடெங்கும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன! 

உழுதுண்டு வாழும் வேளாண்மை செய்வோரின் இல்லங்களில் வேளாண் இடுபொருட்கள் நிறைந்து வழியும் வசந்த காலத்தின் துவக்கமே தை மாதமாகும்!

பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் மரபு!

ஆரியம் வகுத்த தமிழ்ப் புத்தாண்டு துவங்குவதோ சித்திரை மாதக் கடும் கோடைக் காலததில்! 

வறட்சியும், கடும் வெயிலும் வாட்டி வதைக்கும் இந்த மாதம் நிச்சயமாகப் பண்டைய தமிழர்தம் புத்தாண்டுத் துவக்கமாக இருந்திராது என்பது சித்தர்கள் தரும் பகுத்தறிவுச் சிந்தனையாகும்!

பக்தி மார்க்க மதவாதிகள் மற்றும் கடவுள் மறுப்புப் பகுத்தறிவுவாதிகள் இருவரையும் தவிர்த்துத் தமிழக மக்கள் சித்தர் வழிப் பகுத்தறிவு கொண்டு சிந்தித்தால் தை மாதத் துவக்கமே தமிழ்ப்புத்தாண்டாகத் திகழ வேண்டும் என்பது தெளிவாகும்!

திருவள்ளுவர் ஆண்டும் தை மாதத்தில்தான் துவங்க வேண்டும்! எனவே தமிழராய்ப் பிறந்த அனைவரும் பசுமையும் செழுமையும் ததும்பி, ஆறுகளும், ஏரிகளும் வழிந்து நிறைவாகத் துவங்கும் தை மாதத் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு ஆரியப் பழைய பஞ்சாங்கங்களைக் கழிந்து புதியன புக வேண்டுமென வேண்டி

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் மட்டுமன்றித் தேமதுரத் தமிழ் பேசும் உலக மக்கள் அனைவருக்கும் 

எமது இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை வாரி வழங்கி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்!!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!