செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

ஊழலுக்குத் துணை போகும் கடவுள்கள்?

Leave a Comment

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் இன்று ஆளும் இயக்கத்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவி இழந்த முன்னால் முதல்வரின் பிறந்த நாளுக்கு பல்வேறுவிதமான வேண்டுதல்களுடன் அவர் மீண்டும் அரியணை ஏற வேண்டுமென தடபுடலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கோயில்கள் அருகில் மட்டுமல்ல கோயில்களின் உட்புறங்களிலும் ஆளும் இயக்கக் கொடி தோரணங்கள் பிரம்மாண்டமான கட்அவுட்டுகள் காண்போர் முகம் சுழிக்கும் வண்ணம் காட்சியளிக்கின்றன!

கடவுளர்களும் ஊழலுக்குத் துணை போகின்றனரா எனும் எம் போனற பாமரர்களின் சந்தேகம், ஆளும் இயக்கத்தவர்களின் வேண்டுதல்கள் ஒரு வேளை நிறைவேறி முன்னாள் முதல்வர் அரியணை ஏறும் காலம் வரும்போதுதான் தீரும்!

அப்படி ஒரு நிலை உருவானால் தமிழகத்தில் வாய்மை தோற்றுவிட்டதோடு மட்டுமன்றி கடவுள்கள் ஊழலுக்கும் துணை போவார்கள் என்றுதான் கருத வேண்டி வரும்!
Read More...