இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது ஒரு நல்ல துவக்கம்!!

பிறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!  இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!  என்ற கவிஞரின் வைர வரிகளுக்கேற்ப மறைந்தாலும் என்றென்றும் மக்கள் நினைவுகளில் வாழும் கலாம் அவர்களின் மறைவுகூட ஒரு நல்ல தொடக்கத்திற்கு வித்திட்டுள்ளது. திரு கலாம் அவர்கள் மறைவுச் செய்தியினை உலகம் கேட்டது 27.07.15 அன்று இரவு 8.30 மணி வாக்கில்தாம். இதைக் கேள்விப்பட்ட நேரம் முதல் நாடெங்கும் உள்ள மக்கள் மனதில் சோக இருள் சூழ்ந்தது. எனினும் அவரின் மறைவைக் கேட்டவுடன் நள்ளிரவு வரையில்கூட ஆங்காங்கே மக்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செழுத்தி வருவதாக ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வரத்துவங்கின. மறு நாள் காலை கலாம் அவர்கள் வாழ்ந்த இராமேசுவரத்தில் மட்டும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதாகவும், (கவனியுங்கள் அதுகூட அவர் மீது அந்தத் தீவு மக்கள் கொண்டிருந்த அபரிமிதமான பாசத்தின் காரணமாகத்தானே தவிர கட்டாயத்தின் காரணமாக அல்லவே அல்ல) அந்தத் தீவில் வாழும் மீனவர்கள் கலாம் அவர்களின் மறைவு காரணமாக மூன்று நாட்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கப் போவதில்லை என முடிவெட

கலாம் அவர்களின் கனவுகள் விதைக்கப்படப் போகின்றன.

எனக்குள் ஏற்பட்ட ஒரு உந்துதல் காரணமாக திரு அப்துல் கலாம் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு முதன்முறையாகக் கடந்த 22.07.15 அன்று ஒரு கடிதத்தை எழுதினேன்.  அந்தக் கடிதம் எழுதிய கணம் முதல் நேற்று 27.07.15 வரை  எனது இடது கண் புருவம் தொடர்ந்து பலமாகத் துடித்தவண்ணம் இருந்தது. ஏதோ நிகழப் போவதாக என்னுள் ஒரு உள்ளுணர்வு.  எனினும் அது நல்லதாகவே இருக்க வேண்டும் என்றே எனது ஆழ்மனதுக்குச் சொல்லி வந்தேன். எனினும் நாம் விரும்பாதது நடந்தே விட்டது. அந்த மாமனிதரை இன்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும், பாரத மக்களும், உலகெங்கும் வாழும் மக்களும் இழந்து தவிக்கிறோம். அலைகள் தாலாட்டும் இராமேசுவரம் மண்ணில் இந்த மாமனிதரின் உடல் நாளை புதைக்கப்பட்டாலும், பாரத இளைஞர்களைக் கனவு காணுங்கள் என உறக்கம் தட்டி எழுப்பிய அவர்தம் கனவுகள் புதைக்கப்படப் போவதில்லை. அவை விதைக்கப்படப் போகின்றன. அந்தக் கனவுகள் முளைத்து ஆல்போல் உயரும்போது இந்த உலகம் முழுமையும் அவர் விரும்பிய கனவுகள்படியே காட்சியளிக்கும்! நல்லோர்களின் மரணங்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததற்காகப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று இசுலாத்

பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் வேண்டுகோள்!

ஏழைப் பங்காளர் என அழைக்கப்பட்ட, தமிழத்தில் பாமர மக்களின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் இன்று! மாற்று இயக்கத்தவர்களும் போற்றிய இன்றும் போற்றுகின்ற ஒரே உத்தமத் தலைவர்! பெருந்தலைவரை எமது மானசீகத் தலைவராக ஏற்ற வயது முதல் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு இன்றுவரை வாழ முற்படுவதில் எனக்குள் ஏராளப் பெருமிதம் உண்டு! ஏராளமான அதிகாரம் படைத்திருந்தும் மக்களோடு மக்களாகப் பழகி மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட அந்தத் தலைவரின் வழியில் நடப்பதாகச் சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால் அவர் காட்டிய வழியில் மனசாட்சிக்குப் பயந்து உண்மையாக வாழ்பவருக்கே அந்தப் பெருமை உரித்தாகும்! காமராசரின் வழி நடப்பதற்கே ஒரு தகுதி வேண்டும்! அந்தளவிற்குத் தமிழத்தில் எளிமையாக வாழ்ந்து மறைந்தாலும் சரித்திரமாக என்றும் வாழும் தகுதிக்கு உரியவர் கருப்பு காந்தி காமராசர் மட:டுமே! தமிழக இளைய சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என மக்களின் வியர்வையில் உருவான ஏராளமான செல்வத்தில் உல்லாசமாகத் திலைக்கும் பல்வேறு நபர்களைக் கண் மூடித்தனமாகத் தலைவர்களாக

தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள மகத்தான இழப்பு

தமிழ்த்திரையுலகில் ஆதிக்கம் செழுத்திய பாரம்பரிய கருநாடக இசையைப் பின்னுக்குத் தள்ளி மேற்கத்திய இசைக் கருவிகள் துணை கொண்டு மெல்லிசையைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்வித்து இசை சாம்ராஜ்ஜியம் நடத்தி வந்த திருமிகு எம் எஸ் விசுவநாதன் அவர்களின் இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள மகத்தான இழப்பேயானாலும் அன்னார் வயோதிகம் காரணமாகத் தம் இன்னுயிர் நீத்து அவர்தம் உடல் இந்த மண்ணில் புதைக்கப்பட்டாலும் அவர் உயிர் விதையாக முளைத்து மீண்டும் பிறப்பெடுத்து தமிழிசையை உலகெங்கும் பரவச் செய்வார் என்ற நம்பிக்கைகளுடன் அவர்தம் உறவினர்களுக்கும் மெல்லிசை மன்னரின் இசை அபிமானிகளுக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் மின்சார இலாகாவில் இலட்சம் கோடிகளில் ஊழல்!

தமிழகத்தில் மின்சார இலாகாவில் இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியும், முன்பே இவர்கள் ஆட்சியில் பெரும் கொள்ளை நடந்திருப்பதாக ஆளும் கட்சியினரும் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர். குடிசை வீடுகளுக்கு இலவசம் என அறிவித்து நடுத்தர மக்களின் பயன்பாட்டில் உபயோகத்திற்கு ஏற்பக் கட்டணம் எனப் பகற்கொள்ளை அடித்தும், சததமின்றித் தங்களின் இயக்கப் பொதுக்கூட்டங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தைக் கொக்கி போட்டுத் திருடும் சுயநல அரசியல்வாதிகள் இன்றுவரை ஒன்றை மட்டும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றனர் என்பதுதாம் எம்போன்ற பாமரர்களுக்கு இன்னும் விளங்கவே இல்லை! கோடி கோடியாகக் கொள்ளையிட்டு வாழ்ந்தாலும் ஒரு நாள் அந்த கொள்ளையிட்ட மனிதன் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரும்.  அப்போது அந்த மனிதனின் உடலில் போர்த்தப்படுவது பிறந்த வீடு புகுந்த வீடு என்ற இரண்டு இடத்துத் துணிக் கோடி மட்டும்தாம்!  இதுதான் தமிழினம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக எளிதாக விளங்க வைக்கச் செய்த தத்துவ விளக்கம். சுடுகாடு போகின்ற உடம்பு இந்த இரு கோடிகளுடன் போகிறது! அதுவரை அந்த உடம்பு கொள்ளையிட்ட கோடிகள

மரங்களைக் காப்போம்! வெப்பக் கொடுமையிலிருந்து மீள்வோம்!

ஈரோட்டில் சத்தி சாலை மற்றும் இரயில் நிலையச் சாலை இரண்டிலும் இரண்டு எடை மேடை நிலையங்கள் செயல்படுகின்றன இந்த இரு எடை நிலையங்களிலும் அதிகாலையில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் ஈரோட்டில் அமைந்துள்ள பல்வேறு ஆலைகளுக்கு எரிபொருள் தேவைக்கென இரண்டு ஆட்கள் கட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு தடித்த அடிப்பகுதி உடைய மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் அடியோடு வெட்டி வரப்படுகின்றன! நாள்தோறும் தவறாமல் இவ்வாறு வெட்டி வரப்படும் மரங்கள் பெரும்பாலும் மழை வளம் குன்றிய மணப்பாறை போன்ற ஊர்களிலிருந்துதாம் வருகின்றன. தினமும் ஏராளமான அளவில் ஒரு நகருக்கே இவ்வளவு வாகனங்களில் விறகுகளுக்கென வெட்டி வரப்படும் மரங்களின் சராசரி அளவினை தமிழக அளவில் கணக்கிட்டால் தலை சுற்றி மயக்கமேற்படும் நிலை உருவாகிறது. இது போன்று வெட்டி வரப்படும் மரங்கள் வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளதா என்பதும் தெரியவில்லை. ஏராளமான அளவில் தமிழகமெங்கும் இவ்வாறு வெ;ட்டப்படும் மரங்களை நாம் இழப்பதால் ஓரு பக்கம் ஆக்சிஜன் இழப்பும், மழை வள இழப்பும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தினசரி அவசியமான நிழல் இழப்பு என ஏராளமும், மறு ப

அழைத்தவர் குரலுக்கு வருவோம்!

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றார் கீதையிலே கண்ணன். வைணவனாகப் பிறந்ததாலே என்னவோ அவரின் வரிகளை இன்று வரை எங்கள் குடும்பம் பின்பற்றி வருகிறது. நாங்கள் வணிகத்திற்கென சொந்த ஊரை விட்டு வேற்றூர் சென்று நிரந்தரமாகக் குடியேற வேண்டிய நிலையேற்பட்டது. எங்கள் சொந்த ஊரிலிருந்து நாங்கள் குடியேறிய ஊர் சுமார் 70 கல் தொலைவில் இருந்தது. தொலைபேசி வசதிகள் துவங்கியிருந்த காலம் அது. எங்கள் உறவினர்கள் தங்களின் குடும்பத் திருமணம் போன்றவற்றிற்கு எங்களை அழைக்க வேண்டுமென்றால் எங்கள் ஒரு குடும்பத்திற்காகவே இவ்வளவு தொலைவு வர வேண்டும்.  இரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்களையும் குறிப்பாக வசதி குறைந்த குடும்பத்தவர்களை எனது தந்தை முடிந்தவரை ஒரு தொலைபேசி அழைப்பில் தெரிவித்தாலே நாங்கள் உங்கள் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வோம் எனத் தெரிவித்து அவர்களின் சிரமத்தைக் குறைப்பார்.  துக்க காரியமென்றால் தொலைபேசியில் தகவல் தெரிவித்தாலே உடனடியாக எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே சென்றுவிடுவோம். எனது தந்தையிடமிருந்து பிரிந்து நான் மேலும் இருபது கல் தொலைவிலிருந்த வேறு நகருக்கு வணிகம் செய்யச