பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் வேண்டுகோள்!

ஏழைப் பங்காளர் என அழைக்கப்பட்ட,

தமிழத்தில் பாமர மக்களின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் இன்று!

மாற்று இயக்கத்தவர்களும் போற்றிய இன்றும் போற்றுகின்ற ஒரே உத்தமத் தலைவர்!

பெருந்தலைவரை எமது மானசீகத் தலைவராக ஏற்ற வயது முதல் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு இன்றுவரை வாழ முற்படுவதில் எனக்குள் ஏராளப் பெருமிதம் உண்டு!

ஏராளமான அதிகாரம் படைத்திருந்தும் மக்களோடு மக்களாகப் பழகி மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட அந்தத் தலைவரின் வழியில் நடப்பதாகச் சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால்

அவர் காட்டிய வழியில் மனசாட்சிக்குப் பயந்து உண்மையாக வாழ்பவருக்கே அந்தப் பெருமை உரித்தாகும்!

காமராசரின் வழி நடப்பதற்கே ஒரு தகுதி வேண்டும்!

அந்தளவிற்குத் தமிழத்தில் எளிமையாக வாழ்ந்து மறைந்தாலும் சரித்திரமாக என்றும் வாழும் தகுதிக்கு உரியவர் கருப்பு காந்தி காமராசர் மட:டுமே!

தமிழக இளைய சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என மக்களின் வியர்வையில் உருவான ஏராளமான செல்வத்தில் உல்லாசமாகத் திலைக்கும் பல்வேறு நபர்களைக் கண் மூடித்தனமாகத் தலைவர்களாக ஏற்று வாழ முற்படுகின்றனர்!

உல்லாசத் தலைவர்கள் அவர்தம் சொந்த நலன் தவிர்த்துத் தமிழக நலனுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கப்போவதில்லை!

இதை உணர்ந்து மாற்றம் விரும்பும் தமிழக இளைய சமுதாயத்திற்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக வைக்கும் ஒரே வேண்டுகோள் இதுதாம்!

தமிழகத்தை உலகளவில் மதிக்கத்தக்க ஒரு நாடாகச் செய்ய ஏராளமான கனவுகளுடன் செயல்பட்ட காமராசரைக் காலம் ஏனோ நீண்ட வருடங்கள் வாழ அனுமதிக்கவே இல்லை!

காமராசரைத் தமிழகம் இழந்ததுகூட

வாய்மை தோற்றுப் போனால் பொய்மை எவ்வாறெல்லாம் தலையெடுத்து ஆடும் என்பதை

தமிழக மக்கள் அனுபவித்துத் தெளிந்து

நல்லவர்கள் மீண்டும் ஆளும் நிலை உருவாகாதா என ஏங்கும் நிலையை அடைய நேரிடும் என எச்சரிக்கவேதாம்!

எனவே தமிழக இளைய சமுதாயம் தாங்கள் தற்பொழுது பின்பற்றி வரும் தலைவர்களைச் ஒரேயடியாக வரும் ஆடிப்பதினெட்டுடன் தலை முழுகி மறந்துவிட்டு

கண்காணாத தெய்வமாக வானுலகில் உறைந்து வாழும் காமராசரைத் தமிழகத்தை வாழ்விக்க வந்த கடவுளாகக் கருதி

அவரையே மானசீகத் தலைவராகக் கொண்டு அவர் வழியில் எளிமையாக வாழத் துவங்கி

காமராசரைத் தமிழகம் உள்ளவரை மறவாத தமிழ் நெஞ்சங்கள் எடுக்க வேண்டிய சபதமாக


வரும் இரண்டாயிரத்துப் பதினாராம் ஆண்டில்
போலியான அரசியல்வாதிகளைப் புறமுதுகிட்டோடச் செய்து

கர்ம வீரர் காமராசர் கனவு கண்ட உலகை ஆளும் தமிழகம் உருவாக

தமிழகத்தில் பாமரர்களும் ஆட்சிக்கு வந்து நன்மைகள் செய்வதற்கு வசதியாக

பணம் படைத்த அரசியல்வாதிகளை தேர்தல் களத்தில் மண் கவ்வச் செய்து

செல்வாக்கற்ற வசதியற்ற எளிமையான பாமரர்களும் ஆட்சிக்கு வரும் நிலையை ஏற்படுத்த

காசுக்கு வேசியாகி விலை போகாத தன்மானமிக்க ஓட்டு வங்கி படைத்த ஏராளமான காமராசர்கள் நிறைந்த தமிழகமாக மாறி,

கர்மவீரர் கனவு கண்ட உன்னதத் தமிழகம் உருவாக இளைய சமுதாயம் முன்வர வேண்டுமென்பதே

கர்மவீரரின் பாதம் பணிந்து அவர்தம் இந்த இனிய பிறந்த நாளில் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக விடுக்கும் வேண்டுகோள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!