கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே.

கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும் உலகின் முதல் கிரானைட் கோயில் என்ற பெருமை பெரும் தஞ்சை பெரிய அரண்மனை ( இன்றைய பிரகதீசுவரர் கோயில் )

நூறாண்டுகள் கடந்த நிலையிலும் கம்பீரமாக நிற்கும் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் போன்று தமிழகமெங்கும் இன்றும் காலத்தை வென்ற நிலையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஏராளமான வட்டாட்சியர் அற மன்றம், அணைகள், பாலங்கள், இதர வெள்ளையர் காலக் கட்டுமானங்கள்.

இவையெல்லாம் ஊழலில்லாக் கட்டுமானத்திற்கு இன்றும் வலுவான சாட்சியங்கள்.

தமிழக்தில் இனி எந்தக் கட்டுமானமாயினும், அதன் ஒப்பந்ததாரர் அந்தக் கட்டுமானத்திற்கு எத்தனை ஆண்டுகள் உத்தரவாதம் தருவார் என்ற உறுதிமொழியுடன், 

தற்பொழுதுள்ள விலைகுறைவு ஒப்பந்தப் புள்ளிகளுக்குப் பதில் நீடித்த ஆண்டுகள் உத்தரவாதமுள்ள, அதிகவிலை ஒப்பந்தப் பணிகள் மட்டுமே விலைப்பட்டியல் கோரப்படும்.

கொடுத்த உத்தரவாதத்திலும் தரத்திலும் தவறு இழைக்கும் ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் இனி எவ்விதக் கட்டுமானத் தொழிலும் செய்ய இயலாத வண்ணம் சட்டமும், அவர்தம் கட்டுமான ஒப்பந்தத் தொகையைச் சொத்துக்களைக் கையகப்படுத்துதல் வாயிலாக மீட்கும் உரிமை அரசுக்கு உண்டெனச் சட்டம் இயற்றுவோம்.

ஊழல் கட்டுமானங்களுக்கும் ஊழல் அரசியலுக்கும் நிரந்தர விடை கொடுப்போம்.
இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்.

இது சிவன்மலை ஆள்பவர் கட்டளை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!