இனி ஒரு விதி செய்வோம். இது சுயேட்சைகளின் வெற்றிக் கொண்டாட்ட காலம்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஊழல் இயக்கங்களுக்கு எதிராக, இதுவரை அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்பொழுது நல்லவர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்ளும் பச்சோந்தி குண அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க உள்ளவரா? 

தேர்தல் நேரத்தில் முளைக்கும் காளான் இயக்கங்களின் பசப்புரைகள் நம்பி உங்கள் வாக்கை இவர்களுக்கும் அளித்து வீணாக்கிவிடாதீர்கள். 
மக்களின் பலவீன மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மடை திருப்பி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் புதிய அரசியல் வணிகக்கூட்டங்கள் இவை. 

ஏனெனில் இவர்கள் தேர்தல் நேரத்தில் இப்பொழுது முளைத்த காளான்கள், தேர்தலுக்குப் பிறகு இவர்கள் காணாமலும் போகக்கூடும். 

தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நோடோவிலும் வாக்களிக்காதீர்கள். நான்கூட முன்பு நோடோவில் வாக்களிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் நோடோவுக்கு குறைவான வாக்குகளே முந்தைய தேர்தலில் விழுந்திருந்தன. எனவே நாம் நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வோம்.

உங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சைகள் உட்பட அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகளின் பணபலம், அவர்களிடம் உள்ள குணநலன்கள், மக்களுக்கு இதுவரை அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுகள், அரசியலுக்கு வந்து சொத்து சேர்த்தவரா, சாதி மத அரசியல்வாதியா, வாக்களித்தபிறகு மக்களை மதிப்பவரா, அல்லது மிதிப்பவரா, என ஆயிரக்கணக்கான சந்தேகங்களை முன்வைத்து அவர்களை அலசி ஆராயுங்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு நல்லவரேனும் உங்கள் மனதில் பட்டால் அவர் சுயேட்சையாக இருந்தாலும் அவருக்கே உங்கள் வாக்குகளைச் செழுத்துங்கள்.

வரும் தேர்தல் ஊழலுக்கும், மக்களுக்கும் நடக்கும் நேரடி யுத்தம். 
இந்த யுத்தத்தில் ஊழல் இயக்கங்கள் மட்டுமல்ல இதுவரை ஊழல் இயக்கங்களுடன் கைகோர்த்திருந்த அனைத்து இயக்கங்களும் மண் கவ்வ வேண்டும்.

ஊழல் அரசியல் இயக்கங்கள் தோற்றால் மக்கள் வென்றதாக அர்த்தம். 

ஊழல் அரசியல் இயக்கங்கள் வென்றால் மக்கள் தோற்றதாக அர்த்தம்.

சுயேச்சைகளை இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதன் வாயிலாகத் தமிழகம் தேர்தல் வரலாற்றில் புதிய உலக சாதனையை நிகழ்த்த வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் துவங்கியதிலிருந்து களத்தில் நிற்கும் வேட்பாளர்களை அலசித் தேர்வு செய்வோம். 

ஊழலுக்கும் ஊழல் இயக்கங்களுக்கும் இந்தத் தேர்தலுடன் முடிவு கட்டுவோம்.

ஊழலில் போட்டு குண்டும் குழியுமான சாலைகளிலும், ஊழல் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காகப் படு கேவலமாகிப்போன சாலைகளிலும், மந்தமாக நடக்கும் பாலங்களுக்காக குண்டும் குழியுமான மாற்று வழிகளில் ஐந்தாண்டுகள் நம் வாகனங்களோடு சேர்ந்து நம் முதுகொடிந்ததை கடைசிநேர ஊழல் சாலையில் பயணித்து மறந்துவிடக்கூடாது. 

இந்தச் சாலை அடுத்த மழைக்குக்கூடத் தாங்காது என்பதை மனதில் வைப்போம்.

நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இலவசங்களுக்கு மயங்கி பொய்மை வாழும்வல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் யுத்த களமல்ல. 

நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும்   அறக்களம்

தமிழக அரசின் முத்திரை வாக்கியம்தாம் பொய்மை வாய்மையே வெல்லும் என்பது.

இந்தத் தேர்தலில் அறம் அறக்களம் Honest வெல்ல வேண்டும். 

பொய்மை வென்றால் தோற்கடிக்கப்பட்ட Honest Begger மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்துத்தான் மீட்டெடுக்க முடியும். 

அதற்குள் நாமெல்லாம் அகதிகளாகத்தான் வேறு நாடுகளில் தஞ்சம் புக வேண்டியிருக்கும்.

நாம் இனி எப்படி வாழ வேண்டும்.  அகதிகளாகவா? அடிமைகளாகவா?

வாக்களிக்கும் முன் முடிவு செய்வோம். வாக்களித்துவிட்டு புலம்புதல் தவிர்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!