இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எது இலாபம்?

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் முன்பு அமலில் இருந்த வாட் வரி விதிப்பு முறையும் ஒன்றேதான். வாட் வரி விதிப்பிற்கு உட்படாமல் அடம் பிடித்த வணிகர்கள் இப்பொழுதும் இந்த வரி விதிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முன் வராமல் இருப்பார்கள் என்று கருதிதான் மத்திய அரசு காம்பவுண்டிங் டேக்ஸ் என்ற முறையைப் புதிதாகப் புகுத்தியுள்ளது. அதன்படி 20 இலட்சத்திற்கு கீழ் உள்ள வணிகர்கள் ஜிஎஸ்டி வணிகத்திற்கு வேண்டியதில்லை என்றும் 20 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை உள்ள வணிகர்கள் தங்களின் ஆண்டு விற்பனையில் ஒரு சதவிகிதத்தை கட்டினால் போதுமென்றும் விளக்கமளித்துள்ளது. இதன்படி  உள்ளவர்கள் 20 இலட்சத்திற்கு மேல் 30 இலட்சம் ஆண்டு வணிகம் 30 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி 40 இலட்சம் ஆண்டு வணிகம் 40 ஆயிரம் ரூபாய்கள் காம்பவுண்டிங் வரி என 69 இலட்சம் வரை 69 ஆயிரம் வரி என கட்ட வேண்டி வரும். பெரும்பாலான வணிகர்கள் இந்த முறையே தங்களுக்கு இடையூறு இல்லாதது எனக் கருதிக் கொண்டு தங்களை காம்பவுண்டிங் டேக்ஸ் முறையில் உட்படுத்திக் கொள்ள தயாராகி வருகின்றனர். இந்த முறைக்கு மாற விரும்பும் வணி

துறவும் நிர்வாணமும்!

புத்தர் ஆசை துறந்தார். துறவியானார்.  புத்தருக்கு ஆசையின்றிப்போனாலும் அவருக்குச் சீடர்கள் உருவாகினர். புத்தருக்குப் பின் சீடர்களின் ஆசையே புத்த மதமாகி இன்று உலகெங்கும் பரவி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலச் செயல்படுகிறது.  நிர்வாணத்தை வலியுறுத்தும் சமண மதமும் இதே நிலைதான்.  ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றவர்களால் துவக்கப்பட்ட அமைப்புகள் துவங்கி  இன்றுள்ள ஆனந்தர்கள், ஸ்ரீஸ்ரீக்கள், சத்குருக்கள், மடாதிபதிகள் என அனைவரும்  துறவுக்குப் பின்னரே தங்களின் நிலைப்பாட்டை பொன், மண்,பொருட் சேர்க்கைகளோடு தம்மைப் பின்பற்றும் சீடர்களோடு கார்ப்பரேட் நிறுவனர்களாக உலா வருகின்றனர்.  ஒருவரின் துறவுக்குப் பின்னர் அவரால் ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் அது குறித்து சர்ச்சைகளும் எழுவதைப் படித்தும் நடைமுறையில் காண்பதாலும்  துறவுக்கும் நிர்வாணத்திற்கும் உரிய இலக்கணத்தைப் படித்துத் தொலைத்ததாலோ என்னவோ  நிர்வாண ஆசையைக் குளியலறையிலும், துறவு ஆசையைக் கல்லறையிலும் புதைத்து விட முடிவு செய்தோம்.  எம்முடைய துறவால் இன்னொரு கார்ப்பரேட் மதமோ, அமைப்போ இந்த பூமியில் உருவாகித் தொலைந்து அதனை எவர் நிர்வகி