இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரிப்பணம்!

ஆட்டோக்காரர் செழுத்தும் வரிப்பணம்! நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நமது மத்திய மாநில அரசுகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் வரி எப்படி இந்த அரசுகளுக்குச் சென்றடைகின்றன என்ற விபரம் கூடத் தெரியாதவர்களாகவே விளங்;கி வருகிறோம்! இதனை முறையாக அறிந்து கொள்ளும் ஆற்றலுக்கு பெரிய அளவிலான கல்வி அறிவு கூட மக்களுக்கு தேவையில்லை! இந்த அரசுகளுக்கு வரி வருவாய் எப்படி வந்தால் எங்களுக்கென்ன? அதனைத் தெரிந்து கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற பதில் நம்மிருந்து வருகின்றது என்றால் நாம் நமது தற்போதைய துயர வாழ்க்கையைக் களைவதற்கும்  நமது சந்ததியின் எதிர்காலத்தை உயர்த்துவதற்கும் முன் வராதவர் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்! சரி அதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டால் நமக்கு என்ன பயன் என்று நாம் கேட்க ஆரம்பித்தாலே நமக்குள் வரிப்பணம் பற்றிய விழிப்புணர்வு தோன்றி விட்டது  நமது தேர்தல் நேரத்து வாக்கு வங்கி வீணாவது தடுக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம்! இதன் விழைவால் ஊழல் அரசியல்வாதிகள் நம் தமிழகத்தில் உருவாவது தடுக்கப்பட்டு ஒரு ஊழலற்ற புதிய அமைப்பு உருவாவதற்கு நாம் உதவப்

தமிழ் எதிரிகள்

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்! கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்குவோம்! தமிழ்மொழியை ஆங்கில மொழி அழித்து வருகிறது! தமிழர்களிடையே தமிழ் மொழி ஆர்வம் குறைந்து வருகிறது என்ற கடுமையான எதிர்ப்புகள் தற்பொழுது தமிழகம் எங்கும் உலவி வருகிறது!     இந்த எதிர்ப்புகளுக்குத் தலைமையேற்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை இதுவரை ஆண்டு வந்துள்ளவர்கள்தாம்! இவர்கள் தவிர தங்களைத் தமிழ் மொழிக்குக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, புதிதாக ஆட்சி பீடம் ஏறத் துடிப்பவர்கள் பலரும் தற்பொழுது தமிழகத்தில் புற்றீசல் போலப் புறப்பட்டுள்ளனர்! இவர்களின் அம்பு முனையின் இலக்கும் இலட்சியமும் தமிழக முதல்வர் பதவியினைக் குறி வைத்துத்தான்! இடையில் சிக்கிக்கொண்டு இவர்களின் அம்பு துளைத்து இரத்தம் சிந்துவது தமிழினமும் தமிழ் மொழியும்தான்! தமிழினம் வழக்கம்போல நதி மூலம் ரிசி மூலம் பார்க்கக்கூடாது என்ற சொல் வரிகளுக்கேற்ப பழைய காவலர்களையும் ஏற்றுக் கொண்டு, புதிய காவலர்களையும் ஏற்றுக் கொண்டு, தங்களின் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில்தான் தொடர்ந்து சேர்த்து வருகின்றனர்! தங்களின் குழந்தைகளின் எதிர

ஆயிரம் கரங்கள் நீட்டி

புதிய சூரியனின் பார்வையிலே! உலகம் விழித்துக்கொள்ளும் நேரமிது! ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி! கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி கர்ணன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி என்ற பாடலை இதன் இனிமை காரணமாக அடிக்கடி கேட்க விரும்பி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அந்தப்படத்தின் ஒலி நாடா ஒன்றை வாங்கி அடிக்கடி கேட்பது எனது வழக்கம்! இந்தப் பாடலில் இடம்பெற்ற கருத்தின் மீதோ இப்பாடலில் வரும் வரிகள் எதைப் போற்றிப் பாடப்பட்டது எனவும் கூட நான் அறிந்து கொள்ள முற்பட்டதில்லை! தற்பொழுது பிரபஞ்ச சக்திகளின் வெளிப்பாடு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் விழைவாக நான் காலை எழுந்து காலைக்கடன்கள் முடித்து குளித்தவுடன் கதிரவனை வரவேற்க வீட்டின் மாடிக்குச் சென்று விடுவது வழக்கம்! உலக மக்கள் அனைவரும் சாதி மத பேதங்களால் பிளவுபட்டு நின்று ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ முற்படாவிட்;டாலும் தம் வாழ்நாள் முழுவதும் பிரபஞ்ச சக்திகளைச் சார்ந்தே வாழ வேண்டி வரும்! கதிரவன் அவர்களில் பிரதானமானவன்! கதிரவனின் இயக்கம் நின்று போனால் பிரபஞ்ச வெளியிலிருந்து இந்தப் பூமிப் பந்து விலகிச்

பிரபஞ்ச சக்திகள்!

                    உலகெங்குமுள்ள மக்களின் நம்பிக்கைப்படி காலம் காலமாகக் கடவுள் ஒருவர்தான் எனும் நம்பிக்கை சரியல்ல எனப் பிரபஞ்ச சக்திகள் என்னுள் ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்து விட்டன! உலகில் உயிர்கள் தோன்றிய பின்னர் படிப்படியாக மாற்றங்கள் அடைந்து மனித இனம் மற்ற உயிரினங்களை விடச் சற்று மேம்பட்டு சிந்திக்கின்ற திறனை அடைந்தன! நாகரீகமின்றி கண் போன போக்கில் வனங்களில் கூட்டம் கூட்டமாகத் திரிந்து காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்து வந்த மனித இனம் கால வெள்ளத்தில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து, தங்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்திக் கொள்ளத் துவங்கியது! எல்லையில்லாத உலகில் நாடோடிக்கூட்டமாக வாழ்ந்த மனித இனம் தனக்கென இருப்பிடம் தனக்கென வேளாண்மை செய்ய வயல்கள் என எல்லை வகுக்கத் துவங்கின! அதுவே பின்னர் விரிவடைந்து இனம் மொழி மதம் நாடு எனப் பேதங்கள் உருவாகத் துவங்கின! பின்னர் தனது எல்லைகளை விரிவு படுத்துவதென்ற செயலில் ஈடுபடத் துவங்கி போர்களில் ஈடுபட்டு மனித இனம் தங்களுக்குள் அடித்துக் கொண்டு வாழத் துவங்கின! ஓவ்வொரு இனமும் கடவுள் வழிபாட்டை ஏற்படுத்தத் துவங்கின! இதன் காரணமாக மனித இனத்திற்கு

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!     ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! நமது சங்க கால இலக்கியங்கள் இதனை நன்கு விளக்கியுள்ளன! வாழ்த்துவதற்கு வயது பேதம் தமிழரிடத்தில் இருந்தது கிடையாது! பெரியவர்களைச்  சிறியவர்கள் சந்திக்கும்போது பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்துவதும் பதிலுக்கு சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்துவதும் பழங்காலத் தமிழர்தம் மரபு! மனநிறைவாகவும் உளமாறவும் வாழ்த்துதல் நிகழ்வதால் இருசாராருக்கும் அறிவியல் ரீதியான நன்மைகள் நிகழுகின்றன! இவ்வாறு வாழ்த்தும்போது சிறியோரால் வாழ்த்து பெறும் பெரியவர்களின் வயது நீடித்து வந்துள்ள விந்தையையும் பதிலுக்கு பெரியோர்தம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பெறும் சிறியோருக்கு அவர்தம் அறிவும் அன்பும் நிறைக்கப்படுவதை உலகோர் ஒப்புக்கொள்வர். அது மட்டுமன்றி தமிழர்கள் இயற்கையையையும் இந்த பிரபஞ்ச வெளியையும் வாழ்த்துகின்ற தன்மையை வெளிப்படுத்தி அதன் வாயிலாக இயற்கையிடமிருந்தும் இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். இன்றுவரை தமிழகம் வந்தாரை வாழவைத்து அச்சமின்றி வாழ

தமிழக வாக்காளர்களே விழித்திடுங்கள்!

                   இதோ 2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள ஏராளமான அரசியல் இயக்கங்கள் தங்களுக்கு இத்தனை தொகுதியாவது கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால் கிட்டத்தட்ட ஏழு முனைப்போட்டிதான்  தமிழகத்தில் நடைபெறுமென்பது முடிவாகிவிட்டது. கடைசி நேரத்தில் எந்த இயக்கம் எங்கிருந்து எங்கு தன் பச்சோந்தி குணம் காட்டி நிறம் மாறி அணி மாறும் என்பதுவும் மதில்மேல் பூனை நிலையாகிவிட்டது. இன்றைய தமிழக ஆளும் இயக்கம் தங்களுக்குள்ள குறிப்பிட்ட சதவீத மக்களின் ஆதரவுடன் நாற்பது தொகுதிகளிலும் வென்று மத்தியில் பிரதமர் பதவியும் தம்முடையதாகும் என்ற கனவுடன் ஏராளமான பொருட்செலவுடன் பிரம்மாண்ட மேடைகள் அமைத்து பரப்புரை செய்து வருகிறது. மதவாத இயக்கமெனக் கருதப்படும் வட நாட்டு இயக்கமும் முரண்பாடான கூட்டணியைத் தமிழகத்தில் அமைத்துக்கொண்டு எப்படியாவது தமிழகத்தில் தனக்கென இதுவரை இல்லாத வாக்கு சதவீதத்தை முரண்பாடான இயக்கங்களின் தயவில் பெற்றுத் தமிழகத்தில் தன்னுடைய வரவைப் பதிவு செய்யத் துடிக்கிறது. குடும்பப் பதவிச்சண்டை காரணமாகத் தள்ளாடித் தவிக்கும் இயக்கமும் எப்படியாவது தன்னுடைய செல்வ

கட்அவுட் கலாச்சாரம்

தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரத்தை வேரறுப்போம்! தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் கமிசன் எடுத்த அதிரடியான நடவடிக்கையில் முதன்மையானது தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பல்வேறு இயக்கங்களின் பிரம்மாண்டமான கட்அவுட்டுகளை அப்புறப்படுத்தியதுதாம். தமிழகத்தில் இதுபோன்ற கட்அவுட்கள் தங்களின் தலைவர்களின் பிறந்தநாள்தான் (பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை எல்லோருக்கும் வருவது போன்றதுதான் எனினும்) உலகத்திலேயே புதிய அதிசயமான நாள் என்பதுபோல ஏராளமான அடைமொழிகளுடன் தங்கள் தலைவரை வாழ்த்தும் கட்அவுட்கள், மேலும் இயக்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த தலைமைக்கு நன்றிகூறும் விதமாக வைக்கப்படும் கட்அவுட்டுகள், ஆளும் எதிர்கட்சியினரின் சுய தம்பட்ட ஜால்ரா ரக கட்அவுட்டுகள், தலைவர்கள் தங்கள் பகுதிக்கு வரும்போது அவர்களைக் கவர்வதற்காகவும், தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் வைக்கப்படும் ஜால்ரா ரக கட்அவுட்டுகள், (சில தலைவர்கள் தாங்கள் இருப்பதை காட்டிக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு சொந்த வேலையாக வர நேர்ந்தாலும் தங்களுக்கென ஒரு ஜால்ரா கும்பலை வைத்துக்கொண்டு

அங்குசம்!

அங்குசம்! இந்தத் தலைப்பிற்கு முக்கிய காரணமே நமது இன்றைய வாக்கு வங்கியின் பரிதாப நிலையினை மனதில் கொண்டுதான்! தமிழக மக்கள் தங்களின் தற்போதைய மன நிலையிலிருந்து திருந்தி, மகத்தான மாற்றங்கள் பெற்று உயர் வாழ்வு பெற வேண்டுமென்ற நோக்கில்தான்! தங்களது வியர்வை சிந்தி உழைத்த உழைப்பில் தாம் அளிக்கும் ஏராள வரிப்பணத்தை முறையாகச் செலவிட்டு, தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில்தான், தமிழகத்தில் சங்க காலம் தொடங்கி இன்றுள்ளது போன்ற தேர்தல் முறை ஏற்படுத்தப்பட்டது! மக்களுக்குத் தொண்டாற்றத் தகுதிமிக்க நபர்களைத் தேர்வு செய்யவே குடவோலை முறையில் வாக்களிக்க வைத்து, மக்கள் பிரதிநிதித்துவத் தத்துவத்தை உலகிற்குத் தந்தனர்  சோழர்கள்! மக்களாட்சித் தத்துவம் இந்த முறையில்தான் தழைத்தோங்க வழி காணப்பட்டது நம் தமிழகத்தில்! இன்றுள்ள மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தானது என்பதை எவரும் மறுக்க இயலாது! யானை கட்டிப் போரடித்த பெருமைக்குரிய தமிழினம் என்பதுவும், குடவோலை முறையில் நேர்மையுடன் ஆண்ட முன்னோடித் தமிழினம் நாம் என்பது, நமது இன்றைய தலைமுறைக்கு சரியாகச் சென்றடையவில்லை என்றே நான் கருதுகிறே

பகுத்தறிவும் நானும்!

பகுத்தறிவும் நானும்! பொருள் தேவை ஆனால் பொருளேதான் எல்லாமா? எத்தனை மக்கள் பொருள் பொருள் என்று அலைகிறார்கள்! தேட வேண்டியது பொருள் ஒன்றே என்று ஏமாறுவோர் எண்ணிக்கை ஏராளம்! முயற்சி முழுவதையும் பொருள் ஈட்டலிலேயே செலவிட்டுவிட்டு தவிப்பதா மனிதப் பிறவியின் நோக்கம்? புகழ் அறத்தின், ஒழுக்கத்தின், நீதியின், ஆணிவேர்களிலிருந்து வளர வேண்டும்! உண்மை வெளிப்பட நெடுங்காலம் பிடிக்கலாம். அது மிகத் தொலைவில் இருக்கலாம். எனினும் மக்களின் அறியாமை உதிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆதாரமற்ற பக்தியறிவுக் கருத்துகள் சருகுகளாக வீழ வேண்டும். அதுவரை பகுத்தறிவைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். இது தொல்லையைத் தேடிக்கொள்ளும் போக்குதான். இருந்தாலும் பகுத்தறிவைப் பயன்படுத்துவோரால்தான் இவ்வுலகம் இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது. இனியும் வளரும். காலம் காலமாக குறுக்குக் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொண்ட மூட நம்பிக்கைகள், பக்தி நடைமுறைகள், பழைமைக் கோட்பாடுகள், பொய்யான கருத்துக்கள் கேள்விக்குறியாகும் நிலை பகலவன் வெளிச்சம் பரவும்போது இருளானது வெளியேறுவது போன்று, மக்களிடம் பகுத்தறிவு எனும் அசுர வளர்ச்சியால் வெளியேற்றப்பட

சம்சாரம் அது மின்சாரம்!

சம்சாரம் அது மின்சாரம்! தமிழகத்தில் அதிகரித்துவரும் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளால் தற்பொழுது கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது! எம்மைக் கேட்டால் இதற்கு ஆட்சியாளர்களிடமும் மக்களிடமும் உள்ள அலட்சியமான போக்குதான் அதி முக்கிய காரணம் என்போம்! நம் அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்துவது கிடையாது! அளவிற்கு அதிகமாக மின்சார செலவினை அவர்களின் மக்களுக்கு அவ்வளவாக உதவாத நலத் திட்டங்களுக்கு செயல்படுத்துவதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு செலவிடுகின்றனர்! இதை மறுப்பவர்கள் உடனடியாக தமிழகம் முழுவதும் நாள்தோறும் திருவிழா என ஆடம்பர மேடைகள் அமைத்து ஏராள நல திட்டங்களை துவக்குவதாக அறிவிப்பதற்கு செலவிடும் மின்சாரம் அவர்களுக்கு எப்படி வந்தது என்பதை தெளிவாக்க வேண்டும்! அது போலவேதான் நம் மக்களும் தங்களின் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த முன்வருவதில்லை! உண்மையிலேயே அரசிற்கு மின் பகிர்மானத்தில் பற்றாக்குறை இருந்தால் அதை உணர்ந்து மக்களாகிய தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கு மறுத்துவிட்டு அரசின் மீது குறை சொல்வதையே வழக்க

கோயில் போல நிமிர்ந்த நெஞ்சம் இருந்திட வேண்டும்!

கோவிலா! கோயிலா! அரண்மனைகளா? தலைப்பிற்குரிய இடங்கள் அதற்குரிய தகுதியுடன் விளங்குகிறதா என்பதை நம் தமிழக மக்கள்  உணர வேண்டும்! நம் பக்தி மார்க்கம் குழப்பம் நிறைந்தது என்பதற்கு இருவேறு கருத்துகளுடன் நிலவும் இந்தச் சொல் ஒன்றே போதும்!  நம் மக்கள் ஆண்டவன் உறைவதாக கருதப்படும் இடங்களை இந்த தலைப்பிலுள்ளவாறு இருவேறு விதங்களில் அழைக்கின்றனர்! தமிழ் மொழியின் சிறப்பே ஒரு வார்த்தையின் உச்சரிப்பிற்கேற்ப அதற்குரிய  பொருள் விளங்குமாறு அமைக்கப்படுவதுதான்! இவ்வகையில் நோக்கினால் கோவில் என அழைப்பது தவறானதாகும்! கோயில் என அழைப்பதுதான் சரியான தமிழ் வார்த்தை! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கும்படி செய்து உலகமே இன்றுவரை அதை கண்டுகளித்து வியப்புடன் பார்க்கும்படி கட்டிடக்கலையின் நுணுக்கத்தை உலகிற்கு தந்தவர் இராச இராச சோழர்! ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைபெற முடிந்த ஒரு கோயிலை கட்டியவர் தனது அரண்மனையை அதைவிட மிகச்சிறப்பாக அமைத்திருக்கவேண்டும்! அரசியல் நிகழ்வுகளால் இவை போன்ற அரண்மனைகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நோக்கு எனில் இவ்வாறு பலநூறு ஆ

கட்சி நிதி!

ஊருக்காக வெளிச்சம் போட க்  கொடுத்த பணத்திலே! தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்திருப்ப ர் கட்சி நிதியிலே! கட்சி நிதி! இந்த நிதி எப்படி வந்தது? யாரிடம் பெறப்பட்டது என்பது இன்றைய கட்சிகளைப் பொருத்தவரை ஒரு சிதம்பர இரகசியம் எனலாம்! கட்சி நிதியைப் பொருத்தவரை இந்த நிதி இரு வழிகளில் வருகின்றது! ஒன்று தனது காரியத்தை முடித்துக் கொள்ள உதவுமென்ற நோக்கில் பயனாளி தானாக முன்வந்து தருவது! இதுவும் நம் தேசத்தின் அதிவேக வளர்ச்சியினை முடக்கும் இலஞ்சமும் ஒன்றுதான்! இரண்டாவது வகை வற்புறுத்தலின் வாயிலாகவும் மிரட்டுதலின் வாயிலாகவும் பெறப்படுவது! முதலாவதை விட இந்த வழிதான் மிகவும் கேவலமான வழியாகும்! இது மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்காது வழிப்பறி செய்கின்ற தாதாக்களின் செயலென்றுதான் கூற முடியும்! 1..05.08 மே தினத்தன்று செய்தித்தாளினைப் படிக்க நேர்ந்தபோது கட்சிகளின் நிதி பற்றி மக்கள் கணக்கு கேட்கலாம் என்ற செய்தியினைப் படிக்க நேர்ந்தது! மக்களது எண்ணங்கள் வலுப்பட ஆரம்பித்து விட்டதின் தொடக்கம் இதுவெனவே நாம் கருதவேண்டும்! இன்றுள்ள அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் மக்கள் வரிப்பணத்தில் தங்