இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அயோத்திப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!

அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் மத்தியில் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது திரு மோடி அரசு!  அயோத்தியில் மீண்டும் பாபர் மசூதியும், புதிதாக இராமர் கோவிலும் அருகருகே கட்டப்படும் சுமுகமான நிலை உருவாகிறது என வைத்துக்கொள்வோம்! இந்துக்களுக்கு ஆண்டு முழுவதும் ஏதேனுமொரு காரணத்திற்காகத் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்! இசுலாமிர்களுக்கும் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு வழிபாடுகள் மாதந்தோறும் நடைபெறும். அது மட்டுமன்றி அவர்களின் தினசரி வழிபாட்டு வழக்கமாக ஐந்து வேளைகள் தொழுவதற்காக பாபர் மசூதிக்கு வருவர்! இப்வாறான நிலையில் இரு வழிபாட்டுத் தலங்களும் அருகருகே அமைக்கப்பட்டால் இரு தரப்பாரில் தீவிர மதப் பற்றுள்ள எவரேனும் ஏதேனுமொரு அற்ப காரணத்திற்காகக் கலகத்தை ஏற்படுத்த முயலுவார்!  இது பெரிய அளவில் பரவி நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாவதுடன், வருடம் முழுக்க அயோத்தி மீண்டும் மீண்டும் கலவர பூமியாகத்தான் மதவாத சக்திகள் உள்ளவரை இரத்தச் சகதியில் குளித்து நிலைத்திருக்கும்.  இதனால் முழுமையாகப் பாதிக்கப்படப்போகும் பரிதாபத்திற்குரிய

நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்!

தமிழகத்தில் அருவருக்கத்தக்க புதிய நாகரீகம் பரவி வருகிறது. அரசியல் இயக்கத் துலைவர்கள், சாதித்தலைவர்கள், வன்முறை குணம் கொண்டவர்கள் எவரேனும் இறந்து விட்டால் உடனடியாகக் கடையடைப்பு நடத்தச் சொல்லி அவர்தம் ஆதரவாளர்கள் வற்புறுத்துகின்றனர். மறுத்தால் கடைகளை அடித்து உடைப்பது சொத்துக்களை நாசம் செய்வது மட்டுமின்றி மரங்களை வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தினைத் தடை செய்தல், பேருந்துகள், வாகனங்களைக் கல்வீசித் தாக்குதல், கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்குதல், தீ வைத்துக் கொளுத்துதல் என இவர்களின் வன்முறைப் பட்டியல் நீளும்! சில நேரங்களில் தலைவர்களுக்கு உடல் நலக் குறைபாடு எனும் வதந்தி பரவினால்கூட மேற்கண்ட வன்முறைச் செயல்கள் அரங்கேறுகின்றன! பூமிப்பந்தில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்கு எவரும் பிறப்பெடுத்து வருவதில்லை. அவரவர் உடல்வாகு மற்றும் வினைகளுக்கேற்ப இந்த பூமியில் சராசரியாக எழுபது வயது வரை மட்டுமே எவரும் வாழ இயலும். பொதுவாக வயதானவர்களுக்கு உடல் நலக் குறைவு அடிக்கடி வருவதென்பதுடன் மரணமும் வருவதென்பது உலக நியதி. இந்த நியதிக்கு எவருமே தப்ப இயலாது! இதற்கெல்லாம் வன்முறை பரப்புவ

வரிகள்! வரி ஏய்ப்பு! வரிச் சீர் திருத்தம்!

வரிவிதிப்பு முறை இனக்குழு முறை தோன்றி அவைகள் அரசுகளாக மாற்றம் பெற்ற காலம் முதல் செயல்பட்டு வருகிறது. வரி விதிப்பு பொதுவாக மென்மையான வழி முறை, வன்மையான வழி முறை என இரு வகைப்படும்! மென்மையான வரி விதிப்பு முறையைப் பின்பற்றியவர்களின் செயல் வரலாற்றில் எத்தகைய இடம் பிடித்ததோ நாம் அறியோம்!  ஆனால் வன்மையான வரி விதிப்பு முறையைப் பின்பற்றியவர்களை வரலாறு இதுவரை கொடுங்கோலர்களாகத்தான் சித்தரித்து வந்துள்ளது! பொதுவாக வரிவிதிப்பிற்கு உட்பட இன்றுள்ள பெரும்பாலானவர்கள் உடன்பட மறுக்கின்றனர்.  இதற்கு முதன்மையான காரணம் வருமான வரி! இரண்டாவது காரணம் வரிகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள்!  பொருளாதார மேம்பாடு என்ற காரணத்தைக் காட்டி பல்வேறு வகைகளில் வரிகளைத் திணித்த காரணத்தால்தான் காங்கிரஸ் அரசு மக்களால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது.  செட்டிநாட்டுச் சீமான்! கோமான்! எனப் புகழப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சருக்குச் சாமானியர்களைவிட நடுத்தர மக்கள் எந்த அளவிற்கு தாம் விதித்த குறிப்பாகச் சேவை வரிகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என எண்ணியிருக்கவே மாட்டார்! 

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!

        முதலியார்! வடவர்களின் கட்டுக்கதைகளை நம்பிப் பிள்ளையாரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு சாதியால் ஆதியில் முதலில் பிரிந்தவர்களே முதலியார்கள்! ஆம் இச்சாதிப்பெயரை பிரித்துச் சொல் அறிந்தால் சாதியால் முதலில் யார் பிரிந்தவர்கள் எனும் கேள்வி பிறக்கும்.  இன்றைய திருச்செங்கோட்டுப் பகுதியில் வாழ்ந்து அந்நாட்களில் தமிழர்தம் புறநானூற்றுப் பாடல் வரிகளில் வரும் தமிழ்த் திருமணங்களுக்குக் கூரைப்புடவை நெய்து கொடுத்த குலம் இது!  தமிழினத்திற்குப் பருத்தியால் ஆன ஆடை கொடுத்த இவர்கள் பின்னர் வடவர்களின் சாதி வலையில் வீழ்ந்து வடவர்தம் திருமணங்களுக்குப் பட்டுப்புடவை நெய்வதற்குக் காஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பின்னர் பிள்ளையாரைத் தெய்வமாக ஏற்றுச் சாதிப் பிரிவில் முதலாவதாக வீழ்ந்து இன்று வரை வடவர்தம் வழக்கங்களை ஏற்று வழி நடக்கும் தமிழினம்!  வடவர்களின் ஆட்சியிலிருந்து தமிழினத்தை நிரந்தரமாக மீட்டுத்தந்த பெரியாரின் மாணவர் அறிஞர் அண்ணாவின் வழியினை மீண்டும் இவ்வினம் பின்பற்றிச் சாதி ஒழிப்பில் முன்னணியில் நிற்க வேண்டும்!         வன்னியர் படையாட்சி கண்டர்! தமிழின வரலாற்றில் வடவர்களின்

கார்த்திகைத் திருவிளக்கு!

              தமிழகம் இயற்கையாகவே முப்புறமும் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பினை உடையது! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமது நுண்ணிய அறிவாற்றலால் கடலின் தன்மையினை நன்கு புரிந்து கொண்ட நமது முன்னோர்கள் கடல் வளம் அழியாது பேணுவதில் மிகுந்த கவனம் செழுத்தினர்! கால நிலை மாற்றங்களால், கடலில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாக அறிந்து அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினர்! இதனால்தான் தமிழினம் கடல் கொண்ட லெமூரியாக் கண்டம் தொடங்கி இன்று நாம் வசித்து வரும் தற்போதைய நிலப்பரப்பு வரை தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளது! திரைகடலோடி திரவியம் கொண்டு கடலின் தன்மையினை முழுமையாக அறிந்திருந்த காரணத்தால்தான் லெமூரியாக்கண்ட காலத்திலேயே வட அமெரிக்க மாயர்;களுடனும், பிற நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள்!   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வெல்ல முடியாத நிலப்பரப்பிற்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய சோழர்கள் கடற்பரப்பில் மிகுந்த ஆதிக்கம் செழுத்தினர்! அதனால்தான் மேற்கில் கிரேக்கம் தொடங்கி கிழக்கில் கடாரம் வரை வணிகம் மற்றும் கலை கலாச்சாரத் தொடர்புகளையும்

திருக்குறள் பல்கலைக் கழகம்!

தமிழ்த்தாயின் சிரத்தை அலங்கரிக்கும் தகுதிக்குத் தொல்காப்பியம் துவங்கி எத்தனையோ நவஇரத்தின மகுடங்கள் இருப்பினும் தனது தனித்துவத்தால் தமிழ்த்தாயின் சிரத்தை நிரந்தரமாக அலங்கரிக்கும்  நவஇரத்தினங்களைவிட அளவிற்கு அதிகமாக இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரே உயர் சிறப்புடைய எழில்மிகு மகுடம் திருக்குறள்தாம் என்பதை அறிவிப்பதில் தமிழராய்ப் பிறந்தவரெல்லாம் பெருமைப்பட வேண்டும். உலகப் பொதுமறை என்றெல்லாம் நாம் நமது திருக்குறளை உயர்த்தி எழுதியும் பேசியும் வருகிறோம். ஆயின் வள்ளுவம் வகுத்த வாக்கினுக்கேற்ப நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டிருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லையென்ற பதில்தாம் இன்றுவரை கிடைத்து வருகிறது. திருக்குறளிலுள்ள கருத்துக்களை இந்தத் தலைப்பில் எழுதத்துவங்கும்போதே சில அதிகாரங்களிலுள்ள குறள்களின் சிறப்பைப்பற்றி படிக்க நேரிட்டபோது என்னுள் நாம் இதை எழுதுவதற்குத் தகுதியானவர்தானா என்ற கேள்வியும் எழாமலில்லை. இதற்குக் காரணம் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் திருக்குறளை நான் முழுவதுமாகப் படிக்கவில்லை, அதன்படி நடக்கவில்லை என்ற குற்ற உணர்வுகள் என்னுள் எழுந்தமைதாம். பள்ளிக்கல்வியை  பனிரெண்

அன்னைத் தமிழ் இருக்க அடகுத்தமிழ் எதற்கு?

நம் அன்னை மொழியின் தனிச் சிறப்பே நாம் உச்சரிக்கும் வார்த்தைக்கேற்ப உன்னதமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழுமாறு நம் முன்னோர்கள் அமைத்திருப்பதுதாம். நம்முடைய போதாத காலம் நம் மொழியில் ஏராளமான அயல்மொழி வார்த்தைகள் வந்து குவிந்து வழக்கு மொழி வார்த்தைகளாக மாறிவிட்டன. அவற்றில் இன்று வரை தமிழரை ஆரிய மாயையில் அமிழ்த்து வைத்துள்ள வடமொழி வார்த்தைகள்தாம் ஏராளம். இந்த வார்த்தைகள் தமிழர்களின் வாழ்க்கையில் நுழைந்ததை விட அந்த வார்த்தைகளின் எதிர்ப்பத விளக்கம் நம் மொழியின் முதன்மை உயிரெழுத்தாகிய அகரம் சேர்ந்து உச்சரிக்கும்போது ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறையையும், பதத்தையும் குறிப்பதாகவே அமைந்துள்;;ளன. ஆயின் இதே பதம் தரும் நம் அன்னை மொழியின் உண்மையான வார்த்தைகளுடன் அகரம் சேர்த்து உச்சரிக்க இயலாது. இத்தகு வார்த்தைகள் தம்முடன் அகரம் சேராதவாறு அமைந்து எதிர்மறையான பதத்தையும் ஒழுக்கக்கேட்டையும் குறிப்பதில்லை எனும்போது தமிழ் மொழியின் சிறப்பினை எண்ணி வியப்பில் ஆழ்ந்தோம்! உதாரணத்திற்குச் சில வார்த்தைகள் வடமொழி        அகரம் சேர்ந்த வடமொழி  அன்னைத்தமிழ்       எதிர்ப்பதம்   நீதி  

தலை ஆடி! அய்யப்பன்!

                   தலைப்பைப் பார்த்ததுமே ஒரு கேள்வி உங்களிடமிருந்து எழுமென்பது தெரிந்ததுதான்! தலையாடி கேள்விப்பட்டிருக்கிறோம்! அது என்ன தலை ஆடி சற்று விளங்கச் சொல் என நீங்கள் கேட்பதுவும் புரிகிறது!  நான் வேண்டுமென்று இவ்வாறு எழுதவில்லை! ஆடி மாதத்தின் முதல் நாளன்று தமிழர்களால் கொண்டாடப்படும் தலையாடிக்கு உண்மையிலேயே அர்த்தம் புரிந்துதான் கொண்டாடுகிறோமா என்பதே எனக்கு விளங்காத காரணத்தால் அதற்கான உண்மைக் காரணம் இதுதான் என எனது உள்ளுணர்விலும், சொந்த அனுபவத்திலும் ஏற்பட்டதை  அப்படியே இங்கு விளக்க முற்பட்டிருக்கிறேன்!   தமிழகத்தில் ஆடிமாதத் துவக்கத்தின் முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் இப்போதைய தலையாடியின் அர்த்தம் இதுதான்!       வடவர்களின் திருமண அமைப்புப்படி தலையாடியைக் கொண்டாடுவதில் முதலிடம் வகிப்பவர்கள் அதே திருமண அமைப்பை ஏற்றுத் திருமணம் புரிந்த புதுமணத் தம்பதியினர்தாம்!  இந்நாளில் தம் தாய் வீடு திரும்பும் புது மணப்பெண்ணை ஆடி மாதம் முழுவதும் தன் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதியாமல் பிரித்து வைப்பது தொன்று தொட்டு நிலவி வரும் விதிமுறை! இதற்கு வடவரின் மத அமைப்பு தரும்

அற மன்றங்கள்!

அறியாத வயது! இளமைக்கே உரிய துள்ளல்! இளவரசனின் தேர் அதி வேகமாக அந்தி மாலை நேரத்துத் தென்றல் காற்றைக் கிழித்தவாறு விரைந்து கொண்டிருந்தது! எதிர்பாராத விதமாகக் தேரின் குறுக்கே ஓடி வந்தது ஒரு கன்றுக்குட்டி! இளவரசன் தேர்க்குதிரைகளை இழுத்து நிறுத்துவதற்குள் விபரீதம் நிகழ்ந்தது!  அந்தோ! தேர்ச்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய அந்தக் கன்றுக்குட்டி பரிதாபமாகத் தன் இன்னுயிர் துறந்தது! செய்வதறியாமல் அரண்மனைக்குத் திரும்பினான் இளவரசன்! மறுநாள் விடிந்தது! அதிகாலைப்பொழுது! அரண்மனை வாயில் எதிரே கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மணி இடைவிடாது ஒலிக்கும் சப்தம்! உறக்கம் கலைந்து எழுந்த மன்னர் ஏவலர்களை அனுப்பி விசாரிக்க, மணியை அடிப்பது ஒரு தாய்ப்பசு என்ற தகவல் கிடைத்ததும் விரைந்தோடி வெளியில் வந்தார்! தன் கன்றின் மீது தேரை ஏற்றிக் கொன்ற குற்றத்திற்காக அறம் வேண்டிக் கண்ணீருடன் கதறி நின்றது அந்தப்பசு! உடனடியாக அரசவை கூட்டப்பட்டது!  மன்னர் இளவரசனை விசாரித்தார்! குற்றம் செய்ததாக அவனும் ஒப்புக்கொண்டான்!  மன்னர் உடனடியாகத் தம் தீர்ப்பினை வழங்கினார்! தீர்ப்பின் விபரம் இதுதான்! இளவரசன் வ