இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது

தமிழக முதல்வர் மீது இன்று வாய்மை மன்றத்தில் வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது! இந்த நாட்டில் இன்னும் ஏராளமான மனு வாய்மைச் சோழர்கள் துணிச்சலாகத் தம் கடமையைச் செய்து வருகின்றனர் என்பதற்கு பெங்களுரு வாய்மை மன்ற நடுவரின் வாய்மை தவறாத தீர்ப்பு உறுதி செய்துள்ளது! கண்கட்டப்பட்ட வாய்மை தேவதையின் கண்களில் வடிவது ஆனந்தக் கண்ணீர்! இந்த வரலாற்றுத் தீர்ப்புக்கு எதிராக இன்று ஆளும் கட்சியினர் ஆங்காங்கே பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் நாசப்படுத்தி தமிழக மக்களைக் கண்ணீர்க்கடலில் மூழ்கடித்துள்ளனர்! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என முழங்கியவர்கள் தங்களின் அராஜகத்தால் வரும் தேர்தலில் அடுத்த தீர்ப்புக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்! நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது இங்கு சிரிப்பவர் யார்? அழுபவர் யார்? தெரியும் அப்போது என மக்கள் திலகம பாடிய ஒரு பாடல் வரிகள்தாம் இப்பொழுது எமக்குள் ஏனோ வந்து விழுகிறது!

நாணல் போல வளைவதுவும் சட்டமாகலாம்!

பதருன்னிசா அந்த செய்தியை கேட்டவுடன் அவளெதிரே உலகமே சுழலுவது போல தோன்ற சட்டென மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்து எழுந்த அவளுக்குள் இயல்பாகவே அமைந்திருந்த மன உறுதி அவளது பதட்டத்தை விலக்க தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ மனைக்கு விரைந்தாள்!  பலத்த அடிபட்ட நிலையில் ஏராள செலவு பிடிக்கும் என்ற என்ற செய்தியுடன் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற தனது கணவரை காண்கையில் மீண்டும் அவளது மன உறுதி குலைந்தாலும் சுதாரித்துக்கொண்டு எப்படியேனும் தனது கணவரது உயிரை காத்து அவரை பழைய நிலையில் நடமாடச் செய்வதென உறுதி கொண்டாள்! உறவுகள் உதவவே என்ற தர்மம் தொலைந்த பூமியில் பிறந்து தொலைந்த அவளால் தனது கணவரை பழைய நிலைக்கு மீட்க இந்த பூமியில் தனது நடுத்தர குடும்பம் தனது கணவரது விபத்திற்கு முன்னர் வாங்கியிருந்த வீட்டையும் நகைகளையும் விற்றே ஏராள மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடிந்தது! கணவரின் வருமானமும் இழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவும் தனது கணவரை ஓரளவிற்கு நடமாட செய்யவும் அவள் பட்ட பாடுகள் ஏடுகளில் எழுத வேண்டுமெனில் ஏராள

அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒழுக்கம் மேன்மையுற!

1.அரசு மற்றும் தனியார் என எந்தத் துறையில் வேலை செய்தாலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தம்முடைய வேலைக்கு அரசாங்கமெனில் மக்களின் வரிப்பணத்திலும், தனியார் எனில் தம் போன்ற ஊழியர்களின் உழைப்பிலும்தாம் ஊதியம் கிடைக்கிறது என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற உழைப்புடன் பணி நேரத்தை முழுமையாக நிறைவு செய்தல்! 2.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை தம்முடைய பணிக்கென மட்டுமே பயன்படுத்துதல், மற்றும் அந்த வாகனத்திற்கு ஆகும் எரிபொருள், பராமரிப்பு போன்ற செலவுகளுக்கு ஆகும் உண்மையான கணக்கு வழக்குகளை நேர்மையாகப் பராமரித்தல்! எக்காரணம் கொண்டும் குடும்பத்தினருக்காகப் பயன்படுத்தாதிருத்தல்! 3.அரசுத் துறை என்றால் நாம் மக்களின் பணி செய்வதற்காக இந்தப் பணியில் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வுடனும், தனியார் துறை என்றால் நாம் பணியாற்றும் நிறுவனத்தின் மேன்மைக்காகப் பாடுபட்டு நம் கடின உழைப்பிற்கேற்ற ஊதியமும், பணி உயர்வும் கிடைக்க வேண்டுமென்று மிகுந்த ஒழுக்கத்துடன் வேலை செய்தல்! 4.அரசு மற்றும் எந்தத் தனியார் துறையாக இருந்தாலும் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் போன்றவர்கள் நம்மை நம்பி ஒப்படைக்கும், பணம்

படித்ததில் பிடித்த கதை!

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்ட்டாய் அவர்களின் சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது!  தனி மனித வாழ்வின் மேன்மையை மிக அழகாக அவர் கையாண்ட நேர்த்தி மிகவும் பிடித்ததால் அதனைச சுருக்கமாக இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்! ரஷ்யாவின் ஒரு கிராமத்துத் தலைவராக ஒழுக்கமுடன் வாழ்ந்த வசதியான ஒரு பெரியவரும், அதே கிராமத்தில் அளவாகக் குடிப்பது, மற்றும் பொடிபோடுதல் போன்ற பழக்க வழக்கங்களுடன் நெஞ்சில் ஈர உணர்வுள்ள அவரது நண்பருமான இன்னொரு பெரியவரும் இயேசுவின் எருசலேம் நகருக்குப் புனித யாத்திரைக்குப் புறப்பட்டனர்! போதிய பணம் மற்றும் உணவுகளுடன் புறப்பட்ட இருவரில் முதலாமவர் தாம் கிராமத்தில் விட்டு வந்த பணிகளைத் தங்களின் வாரிசுகள் சரியாகக் கவனிப்பார்களோ, தவறு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ, இந்தப் புனித யாத்திரையைத் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்ற பல்வேறான எண்ணங்களைத் தம் கிராமத்தைச் சுற்றியவாறு பயணிக்க இரண்டாமவரோ எவ்விதக் கவலைகளுமின்றித் தம்முள் இறை சிந்தனையோடு மட்டுமே பயணப்பட்டார்! ஆங்காங்கே இது போன்ற பயணிகளுக்கு மக்களிடயே கிடைக்கும் பணிவிடைகளுடன் நீண்ட தொலைவு கடந்த நிலையில் ஒரு பஞ்சம் தாண்டவமாடி

சாலை ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்!

1.சாலையில் ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது எதிரே ஒரு வாகனம் வந்தால் எதிரில் வருபவரின் இடத்தைத் தாங்கள் ஆக்கிரமிப்பதால் குற்றம் தங்களுடையதே என உணர்ந்து பின் வாங்குதல்! 2.குண்டும் குழியுமான சாலை என்பதற்காக இடது புறம் செல்வதற்குப் பதிலாக வலது புறம் சாலை நன்றாக இருக்கிறது என்பதற்காகச் செல்லும்போது எதிரே வருபவர்களைக் கண்டால் இடது புறம் ஒதுங்கி வழி விடுதல் நம் கடமை என உணர்தல்! 3.வாகனங்களை வலது மற்றும் இடது புறமாகத் திருப்பும்போது சிக்னல் விளக்குப் போடுதல் அல்லது உரிய சைகையினைத் தங்கள் இடது வலது கைகளால் காட்டித் திரும்புதல்! 4. நெருக்கத்தில்  மஞ்சள் சிக்னல் விழுவதைக் கண்டவுடன் வாகனத்தை உடனடியாக நிறுத்தத் தேவையில்லை! அப்படி நிறுத்தினால் நம்மைப் பின்தொடர்ந்துவரும் அவசரக் குடுக்கைகள் நமது வாகனத்தின் பின்பக்கத்தில் வந்து மோதக்கூடும்! அதே சமயம் தொலைவிலேயே மஞ்சள் சிக்னலைப் பார்த்துவிட்டால் கட்டாயம் தங்களின் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்ற உணர்வுடன் நிறுத்துதல்! 5.சிகப்பு சிக்னல் இருக்கும்போது சாலையில் எந்தப் போக்குவரத்து இல்லையென்றாலும் அவசரப்படாமல் பச்சை விளக்கு போடும்வரை

தமிழர் தந்தை பெரியார்!

இன்று தமிழர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்! தென்னாட்டு சாக்ரடீசு எனப் போற்றப்பட்ட ஒரு ஒப்பற்ற உலகத் தலைவர் பிறந்த நூற்றாண்டில் தமிழராகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்! பகுத்தறிவு ஒளியினைத் தம் எழுத்தாற்றலாலும், பேச்சாற்றலாலும், தள்ளாத வயதிலும் தம் ஓய்வறியாத உழைப்புடன் தமிழகமெங்கும் பயணப்பட்டுப் பரப்பிய அந்த மாபெரும் தலைவர் மறைந்த பின்னர் அவரது இடத்தைப் பகுத்தறிவுத் தலைவர்கள் எவருமே நிரப்பவில்லையெனலாம்! தந்தை பெரியாரால் வளர்ந்த திராவிட இயங்கங்கள், அவர் தீவிரமாக எதிர்த்த சாதி அமைப்புகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் தந்தையின் மறைவிற்குப் பிறகு அதிகளவில் வளர்த்து வந்துள்ளமைதாம் வேதனையிலும் வேதனை! அவரது மறைவிற்குப் பின்னர்தாம் சாதி அமைப்புகள் வாக்கு வங்கிக்கென ஏராளமாகத் தமிழகத்தில் பெருகி விட்டன! இந்தச் சாதி அமைப்புகளைத் தங்களின் வாக்கு வங்கிக்கென வளர்த்து விட்ட இரு பெரும் திராவிட இயக்கங்கள் இன்று இவர்கள் தயவின்றி ஆட்சி சுகம் அனுபவிக்க இயலாது யானை தன் தலையின் மீதே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வது போலத் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும் பச்சோந்தி குணச் ச

செய்க தவம்!

செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே தவம் செய்தால் எய்த விரும்பியதை யெய்தலாம்! வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை! அன்புடையார்  இன்புற்று வாழ்தலியல்பு! இது மகாகவி பாரதி வாக்கு! தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் உயிரினங்களைப் பலிகொடுத்துத் தத்தம் குலதெய்வங்களைத்  தவம் செய்கிறோம் என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்! அன்பே சிவம் எனும் உயரிய சொல்லுக்கேற்ப உயிர்களின் மீது அன்பு செழுத்துவதே உண்மையான தவமாகும்! வண்டியில் பிணைக்கப்பட்டுத் தன்னைச் சுமந்து வந்த எருதினைத் தடவிக்கொடுத்துக்  கண்ணீர் சொரிந்து என்னைச் சுமந்ததால் உனக்கு வலி ஏற்பட்டதோ எனக் கண்ணீர் பெருக்கிய வள்ளலாரின் செய்கையே உண்மையான உயரிய தவமாகும்! பாரதப் போரில் இதோ என் எதிரே நிற்கும் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள், என் உறவினர்கள் எனப் போர் செய்ய மறுத்துத் தம் ஆயுதங்களைத் துறந்து தவம் செய்யக் கானகம் சென்ற அருச்சுனன் செய்த தவமே உண்மையான தவம்! ஒரு முறை சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் ஒரு சிற்றுந்தில் அமர்ந்திருந்தேன்! அந்தச் சிற்றுந்தில் அமர்ந்திருந்த கிராமத்துப் பெண்கள் சுவாரசியமாக ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர

பேரறிஞர் அண்ணா!

அண்ணா! இந்த மூன்றெழுத்துச் சொல் பெருந்தலைவர் காமசராசரின் பொற்கால ஆட்சிச் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்த வரலாற்றுக்குச் சொந்தமானது! காமராசர் ஆட்சிக்காலத்தில் நிலவிய கடும் பஞ்சத்தின் காரணமாகத் தமிழக ஏழை எளிய மக்கள் குறிப்பாகப் படிப்பறிவற்ற இளைஞர்கள் உட்பட பாமர மக்கள் தன்னிலை மறந்திருந்த நேரம் அது!  ஈவேரா என்ற மூன்றெழுத்து வெண்தாடி வேந்தரின் தம்பியாகத் தமிழக அரசியலில் களமிறங்கிய அறிஞர் அண்ணா அவர்களின் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தால் அகமகிழ்ந்த அன்றைய தமிழக மக்கள்  வெல்லவே முடியாத வாய்மைத் தலைவரான காமராசரை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றி பேரறிஞர் என அந்நாளில் போற்றப்பட்ட அண்ணா அவர்களைத் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தனர்! தன்னுடைய பேரைச் சொல்லிப் பிற்காலத்தில் ஆட்சி செழுத்தப்போகும் தம் தம்பிகள் இன்றைக்குத் தமிழகத்தை வெகுவாகச் செல்லரித்துக் கொண்டிருக்கும் இலஞ்சத்தையும் ஊழலையும் வளர்த்துச் சீரழிப்பதை உடல் ரீதியாக அறிந்தாரோ என்னவோ  அந்தத் தலைவர் தாம் பதவி ஏற்ற ஈராண்டுக்குள்ளாகவே தம் உடலில் புற்று நோய் தாக்கி இயற்கை எய்தினார்! இன்று உலகளவில்

மனைவி அமைவதெல்லாம்!

எனக்குத் திருமண வயது வந்தவுடன் எனது தந்தை எனக்குப் பெண் தேடத் துவங்க முடிவு செய்து முதலாவதாகத் தனது அத்தை மகளைச் சந்தித்து எனக்கேற்ற பெண் ஏதேனும் இந்த நகரில் உள்ளதா என வினவியுள்ளார்!  அதற்கு அவர் உடனே எனது பேத்தி ஒருத்தி உள்ளார்! அவளைப் பார்த்துவிட்டு வேறு இடம் பார்க்கலாம் எனச் சொல்லவே இருவரும் உடனே எனது வருங்காலத் துணையைப் பார்க்கச் சென்றுள்ளனர்! அன்றைய தினம் சூலை 1. எனக்கெனப் பார்க்கச் சென்ற தனது வருங்கால மருமகளின் பிறந்த நாள் அதுவாகும்! தனது அத்தை மகளின் மகளாகத் தனக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமான எனது வருங்கால மாமியாரையும், அவரது மகளையும் பார்த்தவுடன் இந்தப் பெண்தான் தனது மருமகள் என முடிவு செய்துவிட்டே ஊர் திரும்பினார் எனது தந்தை! வீட்டிலுள்ள அனைவரிடமும் தீர்க்கமாகத் தான் பார்த்து வந்த பெண்தான் தனது வருங்கால மருமகள் என்று எடுத்தியம்பி, எனது சித்தப்பா அமரர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் உடனே என்னையும் ஒரு மகிழுந்தில் அங்கு எனது உறவுகள் புடை சூழப் பெண் பார்க்க அனுப்பினார்! முதல் முறையாகக் பெண் பார்க்கும் படலம்! எனக்குள் இயல்பாகவே இருந்த கூச்ச உணர்வு காரணமாக எனது வருங்கால

கொழுத்த புறா!

தங்கசாமியும் ரங்கனும் இளம் பிராயம் முதல் நண்பர்களாக ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டில் வசிப்பது மட்டுமன்றி இருவரும் இன்றுவரை தங்கள் நட்பினை வணிகத்திலும் வளர்த்து வந்துள்ளனர்! இளமையில் இருவரும் கொண்டிருந்த இலட்சியங்கள் தங்களின் பிறந்த மண்ணிற்காகத் தங்களது உழைப்பை நல்குவது என! ஆனால் நடந்ததோ வேறு! வளர்ந்து ஆளாகியதும் தங்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக அரசியலைத் தங்களின் இருப்பிடமாக்கிக்கொண்டு இளம் வயது இலட்சியங்களை அதன் அடியில் புதைத்து விட்டனர்! அரசியல் தந்த சலுகைகளால் இவர்களின் ரியல் எஸ்டேட் தொழில் கட்டைப் பஞ்சாயத்துகளால் அமோகமாக வளர்ந்து ஆடம்பர வாழ்விற்கும் வழி வகுத்தது!  தன் வீட்டு மாடியில் அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளில் தனது வளர்ச்சியை அசை போட்டவாறு தன் எதிரே நிறைந்திருந்த புறாக்களுக்கு இரை போட்டுக்கொண்டிருந்தார் தங்கசாமி!  இந்தப் புறாக்கள் அனைத்துமே ரங்கன் வளர்ப்பவை! இரண்டு மாதங்களாகத்தான் ரங்கனுக்குப் புதிதாக புறாக்கள் வளர்க்கும் ஆசை! எதிரெதிர் வீடென்பதால் தங்கசாமியின் வீட்டு மாடியிலும் அவை பறந்து வந்து அமர்ந்து கொண்டு பயமின்றி இரை தேடும்! தங்க

மதுரைக்கு வழி வாயிலே!

தமிழில் இப்படி ஒரு பழமொழி வழங்கி வருவது நாம் எல்லோரும் அறிந்ததே!  நான் வணிகம் செய்த காலத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சட்டம் கடுமையாக இருந்ததில்லை.  என்னுடைய வணிகம் மிகவும் சுமாராக இருந்ததால் வேறு வழியின்றி நண்பர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன்! அந்தச் சிறுவனின் குடும்பம் நான் வசித்த இடத்திற்கு அருகில்தான் இருந்தது! மேலும் அந்தச் சிறுவனின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் அவனது தாயார் மற்றும் சகோதரர்களின் உழைப்பில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. இந்தக் காரணத்தினாலேயே அவனும் படிப்பதற்கு வழியின்றி என்னிடம் வேலைக்குச் சேர்ந்தான்! ஏழாம் வகுப்புதான் பயின்றிருந்தாலும் சுட்டியாக இருந்ததால் அவனை வங்கிகளுக்குச் சென்று பணம் செழுத்தி வரப் பழக்கினேன்! நண்பர்கள் பலமுறை எச்சரித்தாலும் என்னுடைய நம்பிக்கையும் அவனது துணிச்சலும் ஒரு முறைகூட பணத்தைத் தொலைக்காமல் என்னிடம் அவன் வேலையில் இருந்தவரை வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தினை எடுத்துச்சென்று பத்திரமாகக் கையாண்டான்! ஒரு முறை அவனை கொள்முதலுக்கென அவனுக்கு முற்ற

பாரதி நினைவு நாள்!

காலனே என் எதிரே வாடா உன்னைக் காலால் மிதித்தே கொல்வேன் எனத் தான் இறக்கும் தருவாயில்கூடச் சிறிதும் மரண பய அச்சமின்றிக் காலனை வீறு கொண்டழைத்த முண்டாசு மீசைக் கவி பாரதியின் நினைவு நாள் இன்று! வாழ்ந்த போது பாரதியைப் புரிந்து கொள்ளாத இந்தத் தமிழ்நாட்டு மக்கள் பாரதி மறைந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்! பாரதியைக் கொண்டாடுகிறோமே தவிர பாரதி பாடிய வரிகளைப் பின்பற்றுகிறோமா என்றால் இல்லை என்றுதாம் தலை குனிந்து ஏற்றாக வேண்டும்! ஒவ்வொரு கவிக்குள்ளும் ஏராளக் கனவுகள் உண்டு! படைப்பாளிகளுக்கே உரித்தான கனவுகள் அவை! பாரதிக்குள் இருந்த கனவுகளோ இந்தப் பேரண்டமளவிற்கு விரிந்து பரந்த கனவுகள்! பெண்ணடிமை, சாதி மத பேதம், அஞ்சி வாழும் வாழ்க்கை முறை, மூடப்பழக்க வழக்கங்கள், பொய்மை வாழ்க்கை, அடிமை வாழ்க்கை, ஏய்த்துப் பிழைத்தல், பகுத்தறிவின்மை, போன்ற எண்ணற்ற கொடுமைகள் இந்த நாட்டை விட்டு அகல வேண்டும் எனக் கனவு கண்டவர் பாரதி! கனவு மெய்ப்பட வேண்டும் எனத் தம் கவிதையில் ஏங்கிய அந்த மகாகவியின் இன்னொரு கவிதையோ  போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானும

அறம் சார்ந்த உணர்வுக்குக் கிடைத்த உண்மையான உயரிய அனுபவம்!

வெளியில் சொல்ல முடியாத பல்வேறு நெருக்கடிகளாலும் எனது வணிகத்திற்கு எதிராகப் பரவிய வதந்திகளாலும், ஒரு கட்டத்தில் வணிகத்திற்கெனப் பொருட்களைக் கடனாகக் கொடுத்து வணிகம் செய்து வந்த மொத்த வணிகர்கள் எனக்குக் கடன் கொடுப்பதை ஒரே நேரத்தில் நிறுத்திவிட்டனர்!  தரமான பொருட்களை மலிவாக என்னிடம் கடன் பெற்றுப் பயனடைந்த எனது வாடிக்கையாளர்களோ எனது நிலை அறியாமல் என்னிடம் தங்கள் கடனைத் திரும்பக் கொடுப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மனச்சாட்சியின்றி நடந்து கொண்டனர்! இந்த நிலையில் வணிகத்திற்குத் தேவைப்படும் பணத்தினைப் புரட்ட வேண்டிய ஒரு கட்டத்தில் விழுந்த வணிகத்தை எப்படியேனும் தூக்கி நிறுத்திக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் என்னுடைய உள்ளுணர்வு நீ இப்பொழுது இருக்கும் நிலையில் மேலும் மேலும் பொய் சொல்லிக் கடன் வாங்காதே என எச்சரிப்பதை உணர்ந்த நிலையிலும் வேறு வழியின்றி என்னை நம்பிக் கேட்கும்போதெல்லாம் கடன் கொடுத்த நண்பர்களிடம் வெகு விரைவில் திருப்பித் தந்துவிடுவேன் என்று உறுதியளித்துக் கடன் வாங்கி என்னுடைய வணிகத்தைக் காப்பாற்ற முயன்றேன்! இது மேலும் கடனாளியாகத்தான் வழி செய்ததே தவிர வணிக

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!

இன்று ஆசிரியர் தினம்! தாய் தந்தைக்கு அடுத்து ஆசிரியரை வைத்த பின்னரே தெய்வத்தை அந்நாளைய தமிழர்கள் மதித்தனர்! என்னை மனிதனாக்கிய ஆசிரியப் பெருமக்களை இந்த நேரத்தில் நான் நினை கூறாவிட்டால் நன்றி மறந்தவனாவேன்! எனக்குத் தமிழ் கற்றுத்தந்து பகுத்தறிவு தந்த தமிழய்யா உயர்திரு ஆ.பெரியசாமி அவர்களை மானசீகமாக வணங்கி இந்த நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் தமிழாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது இதயம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்! எனக்கு பிறவியிலேயே இடது கைப் பழக்கம் உண்டு! நான் ஒன்றாம் வகுப்பில் நுழைந்து எனது பாடப்பலகையில் எழுதத் துவங்கியபோது எனது கரங்களில் பலத்த அடி விழுந்தது! அப்பொழுது எனக்கு ஆசிரியையாக இருந்த திருமதி புஸ்பா அவர்கள்தான் என்னை அடித்தவர்! அந்த நாட்களில் விபரம் தெரியாமல் இருந்துவிட்ட ஆசிரியை அவர்! அவரது எச்சரிக்கையால் எனது எழுதும் பழக்கம் வலது கையில் துவங்கியது!  எனது கையெழுத்தை மட்டும் அன்று அவர் மாற்றவில்லை! தலையெழுத்தையே மாற்றிவிட்டார் எனத்தான் கருத வேண்டியுள்ளது! ஆயிரத்தில் ஒருவர்தாம் இடது கைப் பழக்

நாய் வால் போல வாழ்வோம்!

மனிதர்களில் தங்களின் பிடிவாத குணத்தை விடாது வாழ்பவர்கள், தீய பழக்க வழக்கங்களை பழகி அவற்றிலிருந்து விலக மறுப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்படுமாறு நடந்து கொள்பவர்கள், போன்ற  விரும்பத்தகாத பல்வேறு குணங்களைப் பொதுவாக நாய் வாலுக்கு ஒப்பிட்டு நாய் வாலை நிமிர்த்த முடியுமா? என்ற வினாவுடன் ஒரு பழமொழியே நம் தாய்த் தமிழ்மொழியில் உள்ளது!  நாய் குட்டியாக இருக்கும்போது அதன் வால் எப்படி இருக்குமென்பதை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது! குட்டியாக இருக்கும் பொழுது சற்றுத் தளர்வாக இருக்கும்! நாய் வளர வளர அதனுடைய வால்  சற்று மேல் நோக்கி நிமிரத் துவங்கி இறுதியாக பின்னோக்கி நிமிரவே முடியாமல் வளைந்துவிடும்! அதன் பிறகு அந்த வாலை நாம் எத்துணை முறை பிடித்து நேராக்க முயன்றாலும் அது நிமிரவே நிமிராமல் பிடிவாதமாகத் தன் பழைய வளைந்த நிலைக்கே திரும்பிவிடும்! இதைப் பார்த்துத்தான் மேற்கண்ட குணம் உடையவர்களை இந்தப் பழமொழியில் நாய் வாலுடன் ஒப்பிட்டு உவமை சொல்வர்! மாறாத குணம் உடையவர்கள் பிறவியிலிருந்தே தங்களிடம் இது போன்ற குணங்களைக் கொண்டவர்களாகப் பிறப்பதில்லை! இவர்தம் பெற்றோர்தம் குண நலன்கள், வளர்க்கும் விதம்,

நான்குபேர் நான்கு விதமாகப் பேசுவர்!

தானியங்கி வர்த்தகத் துறையில் எனககு ஒரு ஆண்டுகள் மட்டுமே பணி புரிந்த அனுபவம்!  எனது சிறிய தந்தையாருடன் இணைந்து இந்த வர்த்தகத்தைத் தொடர முற்பட்ட ஒரு ஆண்டிலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வேறு வழியின்றி எங்களுக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத ஒரு ஊரில் அமைந்திருந்த மற்றொரு கிளையினை எங்கள் முதலீட்டிற்கு ஏற்ப பிரித்துக்கொண்டு அங்கு சென்று வணிகம் செய்வதென முடிவு செய்தேன்! அப்பொழுது வனக்கு வயது பத்தொன்பதுதான்! எனக்கிருந்த குறைவான வணிக அனுவத்தைக் கருத்தில் கொண்டு எனது சித்தப்பாவும் அவரது நண்பர்களும் தனித்து ஒரு நிறுவனத்தை துவக்காதே என அறிவுறுத்தினர்! ஏன் தந்தையும் அவர்கள் அறிவுரையை ஏற்றுத் தனியே தொழில் துவங்க அச்சப்பட்டார்! எனினும் எனது முடிவு இறுதியாக இருந்ததால் எனது தந்தையும் வேறு வழியின்றி தனித்து வணிகம் செய்ய ஒப்புக்கொண்டார்! நாங்கள் வணிகம் செய்ய முடிவு செய்த ஊர் எங்களுக்கு முற்றிலும் புதியது! ஓரிரு பழுது பார்ப்பவர்களின் அறிமுகம மட்டுமே எங்களுக்கு அப்போது இருந்தது! குறிப்பாக அந்த ஊரில் ஒருவர் மட்டுமே தனித்து பெரிய பணிமனையைக் கொண்டிருந்தார்! எங்கள் வணிகமோ கடன் கொடுத்