இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு அப்பாவிப் பாமரனின் சந்தேகம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அடைந்து தனது பதவியை இழந்தவுடன் அவருக்குப் பதிலாக ஒரு புதிய முதல்வர் பதவியேற்றார்! நாடு முழுவதும் என்ன நடக்கிறது என ஊடகங்கள் வாயிலாகக்கூட மக்கள் தெரிந்து கொள்ள இயலாது செய்தி ஊடகங்கள் முடக்கப்பட்ட நிலையில் பதவியேற்றவுடன் புதிய முதல்வர் உடனடியாக கருநாடகத்திற்கு ஊழல் குற்றத்தில் சிறை சென்ற பழைய முதல்வரைப் பார்க்கச் சென்றது அரசு முறைப் பயணமாகக் கருதப்படலாமா? இந்தப் பயணத்திற்கு ஆன செலவு முழுவதும் அரசின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படுவது!  சிறை தண்டனை பெற்ற ஒருவரை காண்பதற்காக ஒரு முதல்வர் மக்களின் வரிப்பணத்தில் செல்வது அதிகார விதி மீறலாகக் கருதப்படுமா? இவர் மட்டுமன்றி பெரும்பாலான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கருநாடக மாநிலத்திற்கு இதே காரணத்தை முன்னிட்டுச் சென்றது அரசின் வரிப்பணத்தில் என்றால் மக்களின் வரிப்பணம் காரணமின்றி வீணடிப்பது சட்ட மீறலா? நாடு முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் முழுவதும் தமிழகத்திலேயே இல்லை கோட்டையே காலி

தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு ஆதரவானவர்களா?

இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாகப் பரவியுள்ள நம் நாட்டில் தற்பொழுது மக்களே ஊழலுக்கு ஆதரவாக இருப்பதாக ஒருவித அச்சம் தோன்றுகிறது! ஒரு சாதாரண சாதிச் சான்றிதழ் துவங்கி அரசு மானியம், அரசின் உதவித் தொகைகள், அரசுப் பணி நியமனங்கள், கட்டுமான ஒப்பந்தங்கள், என ஒவ்வொரு மட்டத்திலும் ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் கூட்டணி அமைத்து புற்று நோயாக வளர்த்துள்ள இலஞ்சமும் ஊழலும் புரையோடியவாறு நம் நாடு மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ளது! தமிழ்நாட்டு மக்களை இன்றுள்ள பலமான இரண்டு திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்களாக வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 55 சதவீத மக்கள் இரண்டு இயக்கங்களின் ஊழலையும் ஆதரிப்பவர்களாக உள்ளதாகத்தான் அர்த்தம்! மீதமுள்ள வாக்களிக்காத 20 சத மக்கள் தவிர 25 சதவீத உதிரிக்கட்சிகளை ஆதரிக்கும் மக்கள் அந்த உதிரிக் கட்சிகள் பெரும்பாலும் இந்த இரண்டு பலம் வாய்ந்த திராவிட இயக்கங்களைச் சார்ந்தே தேர்தல்களில் களம் இறங்குவதால் அவர்களும் ஊழல் இயக்கங்களுக்குத் துணை போன நிலையில் ஊழல் இயக்கங்களாகவே கருத வேண்டிய நிலையில் உள்ளனர்! இந்த நிலையில் ஊழலைப் பற்றிப் பேசவே தகுதியற்றவர்கள் ஒர

அமைதிப் பூங்கா!

தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் வழக்கில் பதவி இழந்ததும், தமிழத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டும், அவரது கைதினைக் கண்டித்துத் தாமாகவே கடைகளை அடைத்தும், தங்களின் கண்டனத்தைத் தெரிவித்ததாக ஆளும் கட்சியின் தொலைக்காட்சி இயக்கம் செய்திகளை கூறிக் கொண்டிருக்கிறது! பொதுமக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு குறிப்பிட்ட பாஜக தலைவருக்கும் எதிராகக் கண்டனம் தெரிவித்து அவர்களது உருவப் பொம்மைகளை எரித்தும், ஆங்காங்கே போக்குவரத்து மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது! தமிழக மக்கள் எப்பொழுதும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த தொலைக் காட்சி ஊடகங்களைக் கண்டு கழித்து செய்தி ஊடகங்களைப் புறக்கணிப்பதால் இதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட கேபிள் தொலைக்காட்சி வசதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆளும் இயக்கம் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூட இது போன்ற ஊடகங்கள் வாயிலாகத் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள இயலாத வண்ணம் தங்கள் தலைவி கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகத் தொடங்கியது முதல் தமிழகததில் மின்சார வசதியை நிறுத்தியும், பின்னர

தமிழகத்தில் தொலைய வேண்டும்! அரசியல் தற்கொலைகள்!

தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கருநாடக வாய்மை மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறப்பட்ட செய்தியை அறிந்ததும் தமிழகத்தில் ஆங்காங்கே தீக்குளித்தும், தூக்கிக்கிட்டுக் கொண்டும், மாரடைப்பாலும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அவர்தம் குடும்பத்தவர்க்கு தம் ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறது! தீக்குளித்தும், தூக்கிட்டும் மரணமடைந்தவர்களின் குடும்பங்களின் நிலையை எண்ணி இரக்க மனம் படைத்த எவருமே மனம் கலங்காதிருக்க மாட்டர்! விலை மதிப்பற்ற உயிர்களை ஊழல் அரசியல்வாதிகளின் உயர் செல்வாக்கு அறியாமல் அப்பாவியான வசதி வாய்ப்பற்ற மக்கள் தமது இன்னுயிர் துறப்பது இனியும் தொடரத் தமிழராய்த் தமிழகத்தில் பிறந்த எவரும் அனுமதிக்கக்கூடாது! தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவருமே வசதி குறைவானவர்கள் என்பதுவும், இது போன்றவர்கள் தங்களின் குடும்பச் சுமை தாளாமல் தங்களின் மரணத்திற்குப் பின்னர் கிடைக்கும் கட்சி நிதி உதவியிலாவது தங்கள் குடும்பத்தினரின் ஏழ்மை நிலை தொலையட்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகப் பரவலான கருத்தும் தமிழகத