இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுடுகாட்டிற்கு வழி!!

பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எத்துணை முறை படித்தாலும் எமது தாகம் தீர்வதில்லை! சமீபத்தில் அவரைப் பற்றிய ஒரு நிகழ்வைப் படிக்க நேர்ந்தது! பெருந்தலைவர் முதல்வராக ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மக்கள் அவரிடம் ஐயா எங்கள் கிராமத்து சுடுகாட்டிற்கு வழி இல்லை! எனவே சுடுகாடு செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தாருங்கள் என வேண்டினராம்! உடனே கர்மவீரர் நான் உங்களின் வாழ்க்கை வசதிகள் முன்னேறுவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் எதற்கு சுடுகாட்டிற்கு வழி கேட்கிறீர்கள் என்றாராம்! இதைப் படித்தவுடன் என்னுள் சிரிப்பலைகளும் அதனுடனே எனது கண்களில் கண்ணீரும் வழிந்தோடியது! எந்த நேரமும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட அந்த நல்லவர் சுடுகாட்டிற்கு வழி கேட்ட மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று எண்ணி அளித்த பதிலைப் படித்தவுடன் சாராய ஆலைகளுக்கு முதலாளிகளாக விளங்கி,  குடிக்கு அடிமைகளாக பல தமிழ்த் தலைமுறைகளை விளங்க வைத்து, அவர்தம் குடும்பங்களைக் கண்ணீரில் மிதக்க விட்டு, குடித்துக் குடல் வெந்து செத்துச் சுடுகாடு சென்றவர்களின் ச

வாய்மை மன்ற உறுப்பினர்!!

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தால் அமையும் வருங்கால வாய்மை மன்ற (இன்றைய சட்டமன்ற) உறுப்பினர்!! பதவியேற்ற நொடி முதல் தனக்கு வாக்களிக்காத மக்கள் உட்பட அனைவருக்கும் கட்டுப்படும் அரசு ஊழியராகிறார்!  தொகுதியில் உள்ள இவரது அலுவலகத்துடனே இவரது வசிப்பிடமும் இனி அமைவதால் எந்நேரமும் இவரை மக்கள் இருபத்து நான்கு மணி நேரமும் தங்கு தடையின்றித் தொடர்பு கொள்ள முடியும்!  உயர் அரசு அலுவலர்கள், செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள், காவல் உயர் அலுவலர்கள் என எவராயினும் இவரைப் பொறுத்தவரை சாதாரண மக்களுக்குச் சமமானவர்கள்தாம்! இவரது அலுவலகத்தில் இவரைச் சந்திக்க சாமானியருக்கே முன்னுரிமை! இவருக்கு உதவியாகச் செயல்படும் அரசு அலுவலர்கள் தவிர இவரது அலுவலகத்தில் இவரது இயக்கம் சார்ந்த எவரும் என்றைக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்!  இவரது பணியில் இவரது இயக்கம் சார்ந்தவர்களோ, அல்லது உறவினர்களோ எவ்வகையிலேனும் குறுக்கீடு செய்தால் உடனடியாகக் காவல்துறை வசம் ஒப்புவிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுவர்! அதையும் தாண்டி வரம்பு மீறுபவர்கள் சிறையிலடைக்கப்பட்டு தக்க வாய்மை மன்ற விசாரணைத் தீர்ப்பின்படி தண்டனை பெறுவர்! காலை ஒன்

கற்பிழந்து போன காவிரியின் அவலக் கதை!

கற்பென்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்போம் என்று முழங்கிய பாரதி இன்றிருந்திருந்தால் அந்த வரிசையில் என்னையும் சேர்த்துப் பாடியிருப்பான் என்பது நிச்சயம்! தமிழர்கள் காவிரி என்று எனக்கு ஏன்தான் இந்தப் பெயர் வைத்தார்கள் என நான் வருந்த வேண்டிய பரிதாப நிலையில்தான் இன்றுள்ளேன்! நான் தோன்றிய காலம் துவங்கி இதோ இந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை எனது பாதையில் வெள்ளையர்கள் துவங்கி சுயநல அரசியல்வாதிகள் வரை கட்டிய அணைகள் காரணமாக கடல் போல் விரிந்து பரந்தவள் என்ற என்னுடைய பெயருக்கு உரிய விளக்கமே பொய்யாகிப் போனது! தன்னை நம்பியுள்ள உயிர்கள் மற்றும் பயிர்களின் தாகத்தினைத் தீர்த்து ஆற்றுபடுத்துவதனாலேயே ஆறு எனப் பெயர் பெற்ற நான் இன்றோ சுயநலமாகக் கட்டப்பட்ட அணைகளில் உயிரற்ற உடலாக ஆங்காங்கே தேங்கித் தவிக்கிறேன்! ஓடிக் கொண்டிருந்தால்தான் அது ஆறு! ஓடாமல் தங்கி விட்டால் அது குட்டை. என்னுடைய இன்றைய நிலையும் இந்தக் குட்டைக்குச் சமம்தான்! என்னை நம்பியிருக்கும் மனித உயிர்களே இன்று என்னை அலங்கோலப்படுத்துவதாலேயே நான் கற்பிழந்து போனவளானேன்!  என்னுடன் சங்கமமாகும் எனது தோழிகளாக விளங்கிய

தமிழகத்தின் இப்போதய தேவை! சர்வாதிகாரமற்ற அரசியல் இயக்கங்கள்!

வல்லரசு நாடாக உலகெங்கும் கருதப்படும் அமெரிக்காவில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரு அரசியல் இயக்கங்கள் மட்டுமே உள்ளன. பாரதப் பாராளுமன்ற அமைப்பு உருவாகக் காரணமான பிரிட்டன் பாராளுமன்றத்தில்கூட இதே நிலைதாம். இது மட்டுமன்றி இந்த இயக்கங்களில் இயக்க உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவினைப் பெற்று விளங்கும் தலைவர்கள்  நாட்டு மக்களின் அமோக ஆதரவு பெற்று நாடாளும் நிலை வந்தால்கூட அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் பத்தாண்டுகள்தாம்.  அதன் பிறகு இந்தத் தலைவர்கள் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் வெளியேறி   தகுதி மிக்க பல்வேறு புதிய தலைவர்கள் வருவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதே இந்த நாடுகளில் உள்ள சனநாயக நடைமுறை! வாசிங்டன், கென்னடி, லிங்கன்****என   அமெரிக்காவிலும்,  தாட்சர், கேமரூன் என பிரிட்டனிலும்  தொடர்ந்து ஆரோக்கியமான தலைவர்களைக் கண்டு வருகின்றனர். நம்நாட்டின் நிலையோ இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பரிதாபகரமான நிலைதாம்.  சர்வாதிகாரத் தலைவர்களைக் கொண்ட இயக்கங்களையும்  அவர்களின் தலைவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரையை நிறைவு செய்யஇடமே கிட்டாது!  உலகிலேயேஅதிக